மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம்-638402, ரங்கசமுத்திரம் பகுதியில் பகுதி நேர நூலகம் (5-3-2014) கடந்த ஐந்தாம் தேதி புதன்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.அதே சமயம் உறுப்பினர் எண் விரைவாக கொடுக்க வேண்டும் என நூலகத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
பத்து நாட்கள் கழித்து நேற்று(16-3-2014) புதிய நூலகத்திற்கு சென்று உறுப்பினராக பணம் அறுபது ரூபாய் கட்டி சேர்ந்தேன். ஆனால் உறுப்பினர் எண்ணும் கொடுக்கவில்லை.பணம் பெற்றதற்கான ரசீதும் கொடுக்கவில்லை.உறுப்பினர் எண் கேட்டால் நூலக பொறுப்பாளர் பின்னர் தருவதாக கூறுகிறார்.
புத்தகம் மட்டும் மூன்று கொடுத்து பதினைந்து நாட்கள் கெடு வைத்துள்ளார்..இதுவரை எத்தனை உறுப்பினர்கள் நூலகத்தில் சேர்ந்து உள்ளனர்?என்று கேட்டால் நூலக பொறுப்பாளரிடம் பதில் ஏதுமில்லை .இது போன்ற செயல் என்னைப்போன்றவர்களுக்கு வாசிப்புத்திறனை மழுங்கடிக்கும் செயல் ஆகும்.அதோடு உறுப்பினர்களை சேர்க்கும் தன்னார்வப்பணியில் குறைபாட்டை உருவாக்கும்.
உடனடியாக ஈரோடு மாவட்ட நூலகத்துறை நடவடிக்கை எடுத்து ரங்கசமுத்திரம் பகுதி நேர நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள என்னைப் போன்றோருக்கு விரைவில் உறுப்பினர் எண் வழங்க வேண்டும்.வாசகர் மன்றத்தை துவங்க அனுமதி கொடுக்க வேண்டும்.சமூக நலன் கருதி உடனே செய்ய வேண்டும்.
என பொதுமக்கள் நலன் கருதி......