வெள்ளி, 2 டிசம்பர், 2011

'தமிழ் '99 தட்டச்சு முறை மிக எளிதானது.'


    அன்பு நண்பர்களே,வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி வலைப்பதிவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய இங்கு விளக்கம் காண்போம்.


NHM Writer -மென்பொருள் வைத்து  கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிது 
   தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
           NHM Writer
மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil ,Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
      Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera,
என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.  
      Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint
என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  1. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  2. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
NHM Writer என்ற மென்பொருளை nhm.writer  இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.
பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1)= (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
2)=  (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற     பட்டனை கிளிக் செய்யவும்.

3)=  (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
4)=  (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
5)=   (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6 )= (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்
இப்போது  மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.


       TAMILNADU SCIENCE FORUM THALAVADY &  SATHY
         

           NHM Writer
யை எவ்வாறு பயன்படுத்துவது?
    NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar -ன் வலது மூலையில் BELL அதாவது மணி- போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் 
       NHM Writer
தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்
     
      தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?
     முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன (BELL)- மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.  
     அதில் நீங்கள் விரும்பும் தமிழ் விசைப் பலகையை தேர்வு செய்யவும்.

           
மேலும் எளிதாக  தேர்வு செய்ய
       
        1) TAMIL -99            
தேர்வு செய்ய Alt Key  +1அழுத்தவும்,
        2)  PHONETIC -        
தேர்வு  செய்ய Alt Key  +2 அழுத்தவும்,
        3)TYPEWRITER -     
தேர்வு  செய்ய Alt Key  +3  அழுத்தவும்,
        4)  BAMINI -            
தேர்வு  செய்ய  Alt Key  +4 அழுத்தவும்,
    5)  INSCRIPT -    தேர்வு செய்ய  Alt Key +5 அழுத்தவும்.
  
            இவ்வாறு விரும்பிய விசைப் பலகையைத் தேர்வு செய்த பின்னர்  நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.
    
      தமிழ் மொழி தட்டச்சு செய்வதிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key + 0 என்ற எண்ணைச்  சேர்த்து அழுத்தினால் போதும்.இவ்வாறாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என மாறி, மாறி தட்டச்சு செய்யலாம்.
  
         செட்டிங்கை + மாற்ற! 

      NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
       அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும்
        
அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்ணை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.
   
    தமிழ் ,99 விசைப் பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

        முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.
ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் 
                       1.  
தமிழ்,99 விசைப் பலகை, 
                 2.  தமிங்கில விசைப் பலகை,
                3.  பாமினி விசைப் பலகை, 
                       4. 
தட்டச்சு பலகை 
      என அனைத்து முறைகளின்  விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது.
      
அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு (Menu) தெரியும்.
   
     அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்
    நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும். 
  1)  சிலர் TYPEWRITING முறை அதாவது Bamini தட்டச்சு முறை பற்றி கேட்கின்றனர்.காரணம் பழையமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.பெரும்பாலானவர்கள் பழகிக்கொண்டது. ஆனால் ''தமிழ் '99'' மிக எளிதானது.இந்த ''தமிழ்'99'' முறை -புதியமுறை இன்னும்  அதிகம் பயனுக்கு வரவில்லை.அதே சமயம் தமிழக அரசு பரிந்துரை செய்வது இந்த தமிழ்'99 முறைதான்.(நான் பயன்படுத்துவது தமிழ்'99 முறைதான்.)
  
   2) யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு முறையில் அதாவது  பாமினி  முறையில் தட்டச்சு செய்வது? என்று கேட்பவர்களுக்கு
      எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சினையாகக் கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களைத் தான்.        
        
அவற்றைத் தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது
       Key Preview என்ற திரையைப் பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.
    அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
        உதாரணமாக    நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்குஎன்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்தஎன்ற தமிழ் எழுத்தைய்என்றோ, அல்லதுயாஎன்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக  திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.
     நீங்கள் இதைப் பார்த்து, எந்த ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்
 மேலும் தமிழ் தட்டச்சுமுறை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள எனது தமிழ் -99 தட்டச்சு முறை மற்றும் தமிழில் தட்டச்சு முறை ஒரு ஒப்பீடு என்னும் முந்தைய பதிவுகளைப் பார்க்கவும். 
8) தமிழில் சிந்திக்கவும்,விரைவாக தட்டச்சு செய்யவும் தமிழ் 99 விசைப்பலகை
அன்பு நண்பர்களே,
            
         
    கணினியில் விரைவாகத் தட்டச்சு செய்யவும்,தமிழில் சிந்திக்கவும் 
                TAMIL "99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.

       தமிழ்'99 விசைப் பலகையில் எழுத ஆன்லைன் ஸ்கிரீன் திறக்கவும்.
           பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் கிளிக் செய்து பிறகு அதனை காப்பி எடுத்து அல்லது வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.
             ஆனால் இம்முறையை ஆரம்ப காலத்தில் மட்டும் அதாவது புதியவர்கள் மட்டும் பயன்படுத்துங்கள்.
         விரைவில் தட்டச்சு செய்து பழகியபிறகு தமிழ் 99 விசைப்பலகையின் உதவியால் மட்டுமே தட்டச்சு செய்யுங்கள் .
          

   இந்த முறை உலக அளவில் கணினியில் ஒருமித்த கீ போர்டை பயன்படுத்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
         தமிழறிஞர்கள் ஆலோசனைக்கேற்ப 1999-ல் தமிழக அரசு- TAMIL'99 போர்டு முறையை அனைவரும் பயன்படுத்த அரசாணையும் பிறப்பித்தது.
           தற்போது அனைத்து அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தட்டச்சு செய்யும் போது இந்த விசைப் பலகையின் நன்மைகள் பின்வருமாறு;-------

       1) உயிர்க் குறில் எழுத்துக்கள் இடது புறம் நடுவரிசையிலும் (அ,,,எ-A,S,D,G  )

      2)உயிர் நெடில் எழுத்துக்கள் இடது புறம் மேல் வரிசையிலும்( ஆ,,,,ஏ-Q,W,E,T,R  )

      3) ,,ஔ இந்த எழுத்துக்கள் அதிகம் பயன் படாத காரணத்தால் இவைகளை இடது புறம் கீழ் வரிசையிலும் (ஔ,,ஒ-Z,X,C,V,B  )

    4)அதிகம் பயன்படுத்தும் க,,,த எழுத்துக்கள் வலது புறம் நடு வரிசையிலும் (ய,,,,,க -' , ; ,;L,K,J,H )
  5)அடிக்கடி ஒன்றாக வரும் எழுத்துக்களான ஞ்ச-],[,ண்ட-P,O,ந்த-;,L,ங்க-B,H,ம்ப-K,J,ன்ற-I,U,போன்ற எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவைகளுக்கும், மற்றும் ச்ச,ண்ண,ட்ட,ன்ன,ற்ற,ள்ள,ய்ய,ந்ந,த்த,ம்ம,ப்ப,க்க,ர்ர,ல்ல,ழ்ழ,ங்ங,,வ்வ போன்ற  இரட்டை எழுத்துக்கள் தட்டச்ச
         புள்ளி வைப்பதற்கென கூடுதலாக விசைகள் அழுத்த வேண்டியதில்லை.
       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி
TAMILNADU SCIENCE FORUM THALAVADY & SATHYAMANGALAM
    








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக