செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தமிழ்நெட்'99 முறை தட்டச்சு செய்யுங்க..

 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க.. 

     கணினியில்  தமிழ்  தட்டச்சு செய்வதற்காக நம்மவர்கள் தற்போது  
தமிழ் தட்டச்சுமுறை விசைப்பலகை, வானவில் விசைப்பலகை , பாமினி விசைப்பலகை, இளங்கோ தமிழ் விசைப்பலகை, தமிழ் மாடுலர் விசைப்பலகை, சிங்கப்பூர் விசைப்பலகை, மயிலை விசைப்பலகை, தமிழ்நெட்'99முறை விசைப்பலகை ,என பல வடிவங்களில் தட்டச்சு முறையிலும்,ஒலிப்பியல் முறையிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கூடுதலாக தமிங்கிலம் முறை,ஒலிப்பெயர்ப்பு முறை என தமிழில் புதியவர்களை குழப்பும் வண்ணம் பலவித முறைகளை அவரவர் விருப்பம் போல பயன்படுத்தப்படுவதால் புதியவர்கள் பயந்து தமிழில் தட்டச்சு செய்யும் வேலையே வேண்டாம் என முடிவு எடுத்துவிடுகின்றனர். இளைய சமுதாயத்திற்கு மட்டுமின்றி தமிழ் எழுதவும்,படிக்கவும் மட்டுமே தெரிந்த தமிழார்வலர்களுக்கும் ,இருபால் ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.கணினியில் ஆங்கில எழுத்து தட்டச்சும் முறை ஏற்கனவே நமக்குத்தெரியும் அல்லவா!,கணினி விசைப்பலகையை தமிழ்'99 முறைக்கு மாற்றினால்  ஒவ்வொரு ஆங்கில எழுத்திலும் என்ன தமிழ் எழுத்துக்கள் பதிந்துள்ளன என அறிந்துகொள்வோம்.

 தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்துள்ள தமிழ் நெட்'99முறையை  தட்டச்சு செய்ய பயன்படுத்துங்க.

தமிழ்'99 முறை  ஒலிப்பியல் முறையாகும்.
ஒலிப்பியல் என்றால் என்னங்க?
அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்க..
 நம் பேச்சு முறைதாங்க ஒலிப்பியல் முறை. அதாவது உச்சரிக்கும் அனைத்து  வார்த்தைகளும் எழுத்துக்களாக எழுதலாம்.அவ்வாறு எழுதும் எழுத்துக்களை உச்சரிக்கும்போது மெய்யெழுத்து +உயிரெழுத்து என இரண்டும் சேர்ந்து ஒலிப்பதை உணர்வீர்கள்.அதாவது உயிர்மெய் எழுத்துக்கள் என 247எழுத்துக்களையும் நிதானத்துடன் மெதுவாக உச்சரித்துப்பாருங்கள் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும் மெய்யெழுத்தாகவும்,உயிரெழுத்தாகவும் பிரித்து உச்சரிக்கப்படுவதை உணரலாம்.அந்த முறைதாங்க ஒலிப்பியல் முறை...
எழுத்தியல் முறை என்றால் என்னங்க? எழுத்தியல் முறையைப்பற்றி தெரிந்துகொள்வீர்களேயானால் ஒலிப்பியல் முறை பற்றி எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

            உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளையும் எழுத்துக்களாக எழுதும்போது அவைகளுக்கு வரி வடிவம் கொடுப்பதை கவனியுங்கள்.  கோபி என்று உச்சரிப்பதை  எழுதும்போது  கோ என்ற முதலெழுத்தை மூன்று பிரிவுகாக பிரித்து எழுதுகிறீர்கள்,அடுத்து பி என்ற எழுத்தை இரு பிரிவுகளாக பிரித்து எழுதுகிறீர்கள். அதுபோல

         ஒலிப்பியல் முறையில் உதாரணமாக  'கோபி' என்ற ஊரை ஒலிக்கும்போது அதே சிந்தனையில் 'கோபி' என்ற வார்த்தைக்கான மெய்யெழுத்து உள்ள விசையையும்,உயிரெழுத்து உள்ள விசையையும் தட்டினால்  போதுமானது. அதாவது 'க் ஓ ப் இ' என்று  மெய்யெழுத்து உயிரெழுத்து என மாறி மாறி தட்டச்சினால் கணினி தானாக எழுத்துக்களை சேர்த்து  'கோபி' என உயிர் மெய் எழுத்துக்களாக பதிவு செய்துவிடும்.

        இன்னும் சுருக்கமாக  புரிந்துகொள்ள வேண்டுமானால்  தமிழ் எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள்,மெய்யெழுத்துக்கள், உயிர் மெய் எழுத்துக்கள் என எழுதி படிக்கிறோம் அல்லவா! அதே முறையில் தமிழ்'99 முறையினையும் பயன்படுத்துங்க.

அதாவது, 
(1) மெய்யெழுத்துக்கள் பெற சாதாரணமாக கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை தட்டச்சினால் போதுமானது.
 h  க      (அதாவது  h அழுத்தினால் க எழுத்து பதிவாகும்).
ங      (அதாவது b அழுத்தினால் ங எழுத்து பதிவாகும்).
 [  ச      (அதாவது  [ அழுத்தினால்  ச எழுத்து பதிவாகும்).
 ]  ஞ    (அதாவது ] அழுத்தினால்  ஞ எழுத்து பதிவாகும்).
 o  ட    (அதாவது o அழுத்தினால்  ட எழுத்து பதிவாகும்).
 p     (அதாவது p அழுத்தினால்  ண எழுத்து பதிவாகும்).
 l   த     (அதாவது  l அழுத்தினால்  த எழுத்து பதிவாகும்).
;         (அதாவது ; அழுத்தினால் ந எழுத்து பதிவாகும்).
 j        (அதாவது  j அழுத்தினால்  ப எழுத்து பதிவாகும்).
 k        (அதாவது k அழுத்தினால்  ம எழுத்து பதிவாகும்).
 '       (அதாவது  ' அழுத்தினால்  ய எழுத்து பதிவாகும்).
ர        (அதாவது m அழுத்தினால்  ர எழுத்து பதிவாகும்).
        (அதாவது n அழுத்தினால்  ல எழுத்து பதிவாகும்).
 v  வ    ( அதாவது v அழுத்தினால்  வ எழுத்து பதிவாகும்).  
 /        (அதாவது  / அழுத்தினால்  ழ எழுத்து பதிவாகும்).
       ( அதாவது y அழுத்தினால் ள எழுத்து பதிவாகும்).
 u       (அதாவது  u அழுத்தினால்  ற எழுத்து பதிவாகும்).
 i      (அதாவது  i அழுத்தினால்  ன எழுத்து பதிவாகும்).
 மேற்கண்ட பதினெட்டு ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக  தட்டச்சினால் (ஷிப்ட் கீ எனப்படும் தூக்குவிசை அழுத்தாமல் ) அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது அகரமேறிய மெய்யெழுத்துக்களாக பதினெட்டும் பதிவாகும்.
 (அகரம் ஏறிய என்றால் உயிர்மெய் எழுத்துக்களாக பதியும்.தூய மெய்யெழுத்துக்கள் பெற வேண்டுமானால் கூடவே f எழுத்தை தட்டச்சுங்க புள்ளி வைத்துக்கொள்ளும். புரியவில்லை என்றால் நேரில் பயிற்சியின்போது தெளிவு பெறுங்கள்)
==================================================================
(2) கீழ் கண்டுள்ள  வடமொழி எழுத்துக்களுக்கு மட்டும்SHIFT KEY என்னும்  தூக்கு விசை பயன்படுத்த வேண்டும்.நாம் பயன்பாட்டில் தூக்குவிசை அழுத்தி கேப்பிட்டல் ஆங்கில எழுத்து  பதிவிடுவோம் ஆதலால்  தூக்குவிசை SHIFT KEY அழுத்திக்கொண்டு என்று சொல்வதைவிட கேப்பிட்டல் எழுத்தாக பதிவிடுவோம் என்று சொல்வோம்)
ஸ  அதாவது
  Q என கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ எழுத்து பதிவாகும்.

W ஷ   அதாவது 
    W கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஷ எழுத்து பதிவாகும்.

E  ஜ    அதாவது  
    E கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஜ எழுத்து பதிவாகும்.

R ஹ  அதாவது 
    R கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஹ எழுத்து பதிவாகும்

T க்ஷ அதாவது  
 T கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் க்ஷ எழுத்து பதிவாகும்

ஸ்ரீ அதாவது
  Y கேப்பிட்டல்  எழுத்தாக அழுத்தினால் ஸ்ரீ எழுத்து பதிவாகும்.

தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்திக் கொண்டே  மேற்கண்ட  ஆங்கில எழுத்துக்களைஅழுத்தினால் எதிரில்  உள்ள வடமொழி எழுத்துக்கள் பதிவாகும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர் என நினைக்கிறேன்..
=====================================================================
(3) உயிர் எழுத்துக்கள் 12 ம் பெற  கீழ்கண்ட ஆங்கில எழுத்துக்களை சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.அதாவது  a அழுத்தினால் அ உயிர் எழுத்து கிடைக்கும் இவ்வாறாக அனைத்து உயிர் எழுத்துக்களும் பெறலாம்.
 a  அ   (அதாவது a விசையை அழுத்தினால் அ பதிவாகும்).
ஆ    (அதாவது q விசையை அழுத்தினால் ஆ பதிவாகும்).
இ     (அதாவது s விசையை அழுத்தினால் இ பதிவாகும்).
ஈ    (அதாவது w விசையை அழுத்தினால் ஈ பதிவாகும்).
d  உ      (அதாவது d விசையை அழுத்தினால் உ பதிவாகும்).
    (அதாவது e விசையை அழுத்தினால் ஊ பதிவாகும்).
எ     (அதாவது g விசையை அழுத்தினால் எ பதிவாகும்).
       (அதாவது t விசையை அழுத்தினால் ஏ பதிவாகும்).
       (அதாவது r விசையை அழுத்தினால் ஐ பதிவாகும்).
     (அதாவது c விசையை அழுத்தினால் ஒ பதிவாகும்).
ஓ      (அதாவது x விசையை அழுத்தினால் ஓ பதிவாகும்).
ஔ   (அதாவது z விசையை அழுத்தினால் ஔ பதிவாகும்).
f  ஃ   (அதாவது f விசையை அழுத்தினால் ஃ பதிவாகும்.
   அதே நேரத்தில்  h க - போன்ற அகரமேறிய மெய்யெழுத்தை அழுத்திவிட்டு பிறகு f அழுத்தினால் 'க் ' போன்ற தூய மெய்யெழுத்தாக பதியும்.  ).

மேற்கண்ட பன்னிரண்டு ஆங்கில எழுத்துக்களை தூக்குவிசை என்னும் ஷிப்ட் கீ அழுத்தாமல் சாதாரணமாக  தட்டச்சினால் அந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரில் உள்ள தமிழ் எழுத்துக்களாக அதாவது உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் பதிவாகும். கவனியுங்க இங்கு  f எழுத்து மட்டும் தனியாக தட்டச்சினால் ஃ ஆகவும், அகரம் ஏறிய மெய்யெழுத்து தட்டச்சியபிறகு f எழுத்தை தட்டச்சினால் புள்ளி வைத்து அதாவது தூய மெய்யெழுத்தாக பதியும்.
======================================================================
(4) தமிழ் எழுத்துக்கள் 247 எழுத்துக்களையும் பெற மேற்கண்டவாறு  மெய் எழுத்துக்கள் 18 மற்றும் உயிர் எழுத்துக்கள் 12 ஆக முப்பது எழுத்துக்களைக் கொண்டு தூக்குவிசை அழுத்தாமல் சாதாரணமாக தட்டச்சினால் போதுமானது.முப்பது எழுத்துக்களை தட்டச்சும்போது கணினி புரிந்துகொண்டு மெய் எழுத்தையும் உயிரெழுத்தையும் தானாக சேர்த்துக்கொண்டு  நமக்கு 247 உயிர்மெய் எழுத்துக்களையும் கொடுக்கும்.
மிக எளிதானது ஒருமுறை பயன்படுத்திப்பாருங்க.இத்தனை காலம் வீணாகிவிட்டதாக வருத்தப்படுவீங்க.அத்தனை எளிதானதுங்க.
=========================================================================
நாம் தட்டச்சு செய்யும் ஆங்கில எழுத்து விசைப்பட்டனும் தமிழுக்குரிய  மெய் எழுத்துக்களும்,உயிர் எழுத்துக்களும் இரண்டையும் தொடர்ந்தாற்போல தட்டச்சும்போது அவைகளுக்கேற்ப உயிர் மெய் எழுத்துக்களாக மாற்றமடைந்து பதியும் எழுத்துக்களும் இனி கவனியுங்க.....
 a q s w d e g t r c x z f   இவைகள் முறையே அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,ஃ ஆகிய எழுத்துக்களாகப்  பதிவாகும் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

 h b [ ] o p l ; j k ' m n v / y u i இவைகள் முறையே க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன ஆகிய எழுத்துக்களாகப் பதிவாகும் என்பதையும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
அதாவது மெய் மற்றும் உயிர் எழுத்துக்களுக்கான இந்த முப்பது விசைகளையும் நன்கு அறிந்துகொண்டாலே போதுமானது.

உதாரணமாக
க       எழுத்து பெற ha என இருவிசைகளை அழுத்துங்க . 
கா     எழுத்து பெற hq என இருவிசைகளை அழுத்துங்க. 
கி       எழுத்து பெற hs என இரு விசைகளை அழுத்துங்க.
கீ       எழுத்து பெற hw  என இருவிசைகளை அழுத்துங்க. 
கு       எழுத்து பெற hd  என இருவிசைகளை அழுத்துங்க.
கூ       எழுத்து பெற he  என இருவிசைகளை அழுத்துங்க. 
கெ      எழுத்து பெற hg  என இருவிசைகளை அழுத்துங்க. 
கே      எழுத்து பெற ht  என இருவிசைகளை அழுத்துங்க. 
கை       எழுத்து பெற hr  என இருவிசைகளை அழுத்துங்க. 
கொ     எழுத்து பெற hc  என இருவிசைகளை அழுத்துங்க. 
கோ     எழுத்து பெற hx  என இருவிசைகளை அழுத்துங்க. 
கௌ     எழுத்து பெற hz  என இருவிசைகளை அழுத்துங்க. 
க்       எழுத்து பெற hf  என இருவிசைகளை அழுத்துங்க.

இவ்வாறாக உயிர்மெய் எழுத்துக்களைப் பெற இருவிசைகளை பயன்படுத்த வேண்டும்.உயிர் எழுத்து மட்டும் மற்றும் மெய்யெழுத்து மட்டும் பெற அதற்குரிய ஒருவிசை மட்டும் அழுத்தினால் போதும்.

       மறவாதீங்க சாதாரணமாக தட்டச்சு மட்டுமே செய்து மேற்கண்ட முப்பது எழுத்துக்களையும் பதிவிடலாம்.

            சரி,இனி வடமொழி எழுத்துக்களையும் தமிழில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம்.அப்படியானால் குறைந்த அளவே பயன்படும் இந்த வடமொழி எழுத்துக்களை பதிவிடுவது எப்படி? என சந்தேகம் வரலாம்!.. இதோ நாம் வடமொழி எழுத்துக்களான ஸ ஷ ஜ ஹ ஸ்ரீ  இந்த ஐந்து எழுத்துக்களை மட்டுமே  எப்போதாவது பயன்படுத்துகிறோம்.இந்த ஐந்து எழுத்துக்களும் பதிவு செய்ய மட்டும் Q,W,E,R,T,Y, என்ற எழுத்துக்களை அதாவது கேப்பிட்டல் எழுத்துக்கள் பெறுவதற்காக பயன்படுத்தும் தூக்குவிசை என்னும் SHIFT KEY அழுத்த வேண்டும். இரண்டு நாட்களிலேயே இவை அனைத்தும் பழக்கத்திற்கு வந்துவிடும்.
அனுபவப்பட்ட ஓட்டுநராகிய நான் உறுதிபட சொல்கிறேன்.நம்புங்க..

 தமிழுக்கு தொண்டு செய்வோம் தரணியில் தமிழுக்கு உயர்வு அளிப்போம்.
 என அன்புடன், 
C.பரமேஸ்வரன், 
சத்தியமங்கலம், 
ஈரோடு மாவட்டம் - 638402


திங்கள், 14 செப்டம்பர், 2015

மின்-தமிழ் இலக்கியப்போட்டிகள் நம்ம புதுக்கோட்டையில்-2015

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். வருகிற 2015செப்டெம்பர்30ந் தேதிக்குள் உங்க படைப்புகளை அனுப்புங்க.பரிசும் பாராட்டும் காத்திருக்கிறதுங்க..நான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை எழுதி அனுப்புகிறேன்...வெற்றி என்பதல்லங்க முக்கியம்..புதுகை விழாக்குழு  நண்பர்களுக்கு ஊக்கம் தருவதே முக்கியம். தன்னலம் கருதாமல் தமிழ்ச்சமூக வளர்ச்சி மற்றும் தமிழ் விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம் வாங்க...வருகிற 2015அக்டோபர் 11 ந்தேதி புதுக்கோட்டையில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015: உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -  “வலைப்பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை“ “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்... உலகளாவிய  மின் தமிழ் இலக்கியப்போட்டிகள் ....

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! -
                                மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

 “வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  
            கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி- 
              கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(2) 
                    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
           சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்

வகை-(3)     
            பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - 
       பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 

வகை-(4)  
                     புதுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு

வகை-(5)   
                   மரபுக்கவிதைப் போட்டி-   கவிதைப்போட்டி
      இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம். 

      மிகச்சிறப்பான ஏற்பாடுகளை ஆர்வத்துடன் தமிழுக்காக இணையத் தமிழுக்காக அயராது மாதக்கணக்கில் செய்து வரும் நண்பர் திருமிகு.திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள் மற்றும் விழாக்குழுவினரை வலைத்தமிழுலகம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறேன்..
 என
அன்புடன்,
 C.பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம்-638402
ஈரோடு மாவட்டம்.