சனி, 12 ஜூலை, 2014

மத்திய அரசின் சார்பில் இணையதளம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
                சந்தன நகரமாம் நம்ம 'சத்தியமங்கலம்' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
வேலை வாய்ப்புகளுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு !
புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும், திறமையுள்ளவர்களுக்கு வேலை கிடைக்கவும் உதவும் வகையில் மத்திய அரசின் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
www.niesbudnaukri.com என்ற பெயரில் இதை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தொடங்கி வைத்துள்ளார்.இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

உடற்கடிகாரம் !

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 உடல் உறுப்புக்களின் காலங்கள் உடற்கடிகாரம் !

இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர்.
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.
ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின்செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படவேண்டிவரும்...
நன்றி: புதியதமிழ்

சம்மணமிட்டு அமர்ந்து உண்ணுங்க!

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
தரையில் அமர்ந்து உண்ணுவது நல்லதா?
-------------------------------------------------------------
தமிழ் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து உண்பது. முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் காரணம் என்ன தெரியுமா? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் விரைவில் சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது.

வாழை இலை

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.சந்தன நகரமாம் நம்ம சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள் !
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

வியாழன், 10 ஜூலை, 2014

பேஸ்புக் ஒரு பார்வை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இந்தப்பதிவு திருமிகு.கிரி அவர்களது பிளாக் பதிவுங்க.நல்ல பதிவு ஆதலால் எனது பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.கிரி அவர்களுக்கு நன்றிங்க.
         பேஸ்புக் தற்போது மிக வேகமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. வாரம் ஒரு குற்றம் இதன் மூலமாக செய்திகளில் குறைந்த பட்சம் படிக்க முடிகிறது. இதன் மூலம் பலவருடமாக தொடர்பில் இல்லாத நண்பர்களை பெற முடிகிறது. தூரத்தில் நண்பர்கள் இருந்தாலும் இதன் மூலம் இடைவெளியை குறைக்க முடிகிறது. இது போல நன்மை தீமைகள் கலந்தே இருக்கிறது.
இதை நான் எழுதக் காரணம், சமீபத்தில் ஒரு பெண் வெறுத்துப் போய் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இவர் என் நண்பர் அல்ல, ஆனால் என்னுடைய நண்பருக்கு நண்பர். அந்தப் பெண்ணுடைய ஸ்டேட்டசில் என்னுடைய நண்பர் கமெண்ட் போட்டதால் என்னுடைய Timeline ல் தெரிந்தது. கொஞ்சம் சூடாக இருந்ததால், சரி! என்னவென்று பார்க்கலாம் என்று படித்தேன். அதன் சுருக்கம்.. “பெண்ணியவாதிகள் என்ற பெயரில் சிலர் இருக்கிறார்கள் ஆனால் மோசமாக நடக்கிறார்கள். கேவலமான கமெண்ட் போடுகிறார்கள், அதையும் சிலர் லைக் செய்கிறார்கள். தான் பெரிய ஆள் என்பதை நிரூபிக்க ஏதேதோ செய்கிறார்கள். சிலர் பெண்கள் பெயரில் வந்து ஏமாற்றுகிறார்கள். பெண் என்ற போர்வையில் செக்ஸ் பற்றி பேசுகிறார்கள். ஒரு சில பெண்கள் தாங்கள் தான் அழகு என்பது போல நடந்து கொள்கிறார்கள். இதனால் ஃபேஸ்புக் என்றாலே வெறுப்பாகி விட்டது” இது போல எழுதி இருந்தார், இப்படியே அல்ல, இந்தப் பொருள் வரும்படி.
எனக்கு இவர் கூறி இருந்ததில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களில் சிலர் கூட இது போல ஒரு மோசமான வேலையை செய்து கொண்டு இருக்கலாம். எங்கேயும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள். இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் நிம்மதி அடங்கி இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் நண்பர்களிடையே அரசியல் இருக்கிறது உண்மை தான், ஆனால் அதெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒன்று தான். எல்லோருக்கும் லைக் போடுறாங்க, எனக்கு போடுலையே, நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையே. நாம லைக் பண்ணுறோம் ஆனால் நம்ம எதுவும் போட்டால் லைக் பண்ண மாட்டேங்குறாங்களே என்று இது போல சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் மட்டுமே தவிர்க்க முடியாதது. மற்றபடி வேறு எந்தப் பெரிய பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்கலாம்.
ஃபேஸ்புக் எப்படி அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வசதி தருகிறதோ, அதே அளவிற்கு நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி கொடுத்து இருக்கிறது. நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை… யார் Friend Request அனுப்பினாலும் கண்ணை மூடிட்டு Approve பண்ண வேண்டியது, அப்புறம் அவன் இப்படி சொல்றான், இவன் அப்படி சொல்றான்னு புலம்ப வேண்டியது. ஒழுங்கா பேசாமல் அநாகரிகமாக கமெண்ட் போடுறாங்களா? உனக்கு பிடிக்காத விசயங்களை பேசுகிறார்களா? Block பண்ணு. உன்னை யாரு தொடர்ந்து அனுமதிக்கச் சொன்னது?
அலப்பறை பண்ணிட்டு இருக்காங்களா, அசிங்கமா பேசுறானா, பெண் பெயரில் வந்து உங்களை போட்டு வாங்கறான் என்று தோன்றுகிறதோ அத்தனை பேரையும் Block பண்ணுங்க. அவ்வளோ தான் விஷயம். உங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களோட நட்பைத் தொடருங்க. சப்பை விஷயம். இதுக்கு போய் எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகிட்டு, ஃபேஸ்புக்கை திட்டிட்டு இருக்கணும். ஃபேஸ்புக் நல்லதையும் தருகிறது கெட்டதையும் தருகிறது. இதில் நீங்கள் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கான உரிமை. நான் கெட்டதை எடுத்துப்பேன் அப்புறம் கதறிக் கதறி அழுவேன் என்றால் அது யார் தவறு?
நம்மை நாலு பேரு புகழ வேண்டும், நாற்பது பேர் லைக் பண்ணனும், பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அதே வேளையில் இது போல சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உனக்கு ஜால்ரா தட்ட நாலு பேர் இருக்கும் போது, திட்ட எட்டு பேர் இருக்கமாட்டானா? நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது [சில விதிவிலக்குகள் உண்டு].
இதை இன்னும் ஒரு சிறு உதாரணத்துடன் கூறுகிறேன். இங்கே ஃபேஸ்புக் இப்பத்தான் வந்தது, இதற்கு முன்னே Blog வந்து விட்டது. இதில் எத்தனை அரசியல் என்பது இதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் தெரியும். அந்தக் குழு, இந்தக் குழு என்று சட்டையை கிழித்துக்கொண்டு, அடித்துக்கொள்ளாத குறையாக சண்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவன் அப்படி பேசுறான், இவன் இப்படி பேசுறான் என்று வாந்தி வரும் அளவிற்கு படு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். பின் புலம்பிக்கொண்டு இருக்க வேண்டியது. உன்னை யாரு அதில் தலையிடச் சொன்னது? எல்லோருக்கும் நம்மைத் தெரியனும், நாம போய் நின்னா எல்லோரும் வந்து வாங்க வாங்க என்று அழைக்கணும் என்று விளம்பர ஆசை. இப்படி இருக்கும் போது அதற்க்குண்டான எதிர்விளைவுகளையும் சந்தித்துத் தானே ஆகணும்.
இதனால் நிறையப் பேர் Blog படிப்பதையே நிறுத்தி விட்டார்கள் அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது. புதிதாக எழுத வருபவர்களை அல்லது வர நினைப்பவர்களைக் கூட இவற்றைக் கூறி பயமுறுத்தி வர வேண்டாம் என்று கூறி விடுகிறார்கள். உண்மையில் அப்படியா இருக்கிறது? கிடையவே கிடையாது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதை, நாம் தாராளமாக எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எழுதலாம், இந்த Blog அரசியலில் கலந்து கொள்ளாமல் இருந்தால்.
நான் ஆறு வருடமாக எழுதுகிறேன். இதுவரை நான் எழுதாத தலைப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். எந்தவித சங்கடமும் பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து ஆர்வமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன், எழுதுவேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை, வந்தாலும் சமாளிக்கத் தெரியும். வந்த புதிதில் பிரச்சனைகள் இருந்தது, பிறகு அனுபவத்தில் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரிந்ததால், ஒரு பிரச்சனையும் தற்போது இல்லை. இதே சூழ்நிலை ஃபேஸ்புக்கிற்கும் அப்படியே பொருந்தும். தங்கள் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவர்களே, தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும், இல்லை என்றால் காலம் முழுக்க அதே தவறை செய்துகொண்டு புலம்பிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
நம்மிடம் பழகுபவர்கள், நம் எதிரில் உள்ள கண்ணாடி மாதிரி தான். நாம் எப்படி இருக்கிறோமோ, அதைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள். நாம் அனுமதித்தால் மட்டுமே எதுவும் தொடரும். எனவே மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி விட்டு நாம் ஒழுங்காக நடந்து கொண்டாலே போதுமானது. நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இல்லை, என்னால் இப்படி எல்லாம் ஒதுங்கிப் போக முடியாது என்றால், இதனுடன் வரும் பிரச்சனையையும் எதிர் கொள்ளத் தயாராகுங்கள். பாம்பும் சாகனும், கம்பும் உடையக்கூடாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஃபேஸ்புக், Blog பயன்படுத்துகிறவர்கள் கிட்ட பிச்சை எடுக்கணும், அரசியலில் அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள் போல இருக்கு.
சுருக்கமாக நம் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம் மற்றவர்கள் அல்ல. முதலில் கண்டபடி அனைவரையும் நண்பர்களாக சேர்ப்பதை நிறுத்துங்கள். பிரச்சனை செய்பவர்களை தயங்காமல் Block செய்யுங்கள், (இது கூகுள் ப்ளஸ் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்) உங்கள் பிரச்சனைகள் / மன உளைச்சல்கள் தானாகவே சரியாகும்.
ஃபேஸ்புக்கில் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
ஃபேஸ்புக் பற்றிப் பேசியதும் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்து YouTube ல் செம ஹிட் அடித்த ஒரு குறும்படம் நினைவிற்கு வந்தது. இதுவரை பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பாருங்க.. நன்றாக இருக்கும். கூடிய விரைவில் ஐந்து லட்சம் பார்வைகளைப் YouTube ல் பெறப்போகிறது.

மெயில் பாதுகாப்பு வசதி-இரட்டை அடுக்கு.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

    இணையக் கணக்குகளை பாதுகாப்பாக வைப்பதன் அவசியத்தை / தகவல்களைப் பகிர்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், இதோ இந்த முறை ஃபேஸ்புக் பாதுகாப்பு குறித்தக் கட்டுரை. Image Credit - minimalistwallpaper.com
இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை ஜிமெயில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, அதன் பிறகே ஒவ்வொரு பெரிய நிறுவனமும் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வந்தது. ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ட்விட்டர், Dropbox என்ற பெரிய நிறுவனங்கள் அதில் அடங்கும் முக்கிய நிறுவனங்கள். இதில் ஜிமெயில்க்கு அடுத்தது ஃபேஸ்புக் பாதுகாப்பு விசயத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக ஜிமெயிலுக்கு இணையாக ஃபேஸ்புக் பாதுகாப்பு வசதி இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. இந்த வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி நீண்ட நாட்களாகி விட்டது.
இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறை என்றால் என்ன?
நம்முடைய இணையக் கணக்கில் கடவுச்சொல்லை (Password) கொடுத்த பிறகு நம்முடைய கைப்பேசிக்கு குறுந்தகவல் (SMS) வரும். அதில் உள்ள எண்ணை பதிவு செய்தால் மட்டுமே நம் கணக்கில் நுழைய முடியும். இதன் மூலம் இன்னொருவருக்கு நம் கடவுச்சொல் தெரிந்தாலும், இந்த குறுந்தகவல் எண் தெரியவில்லை என்றால், நம் கணக்கில் நுழைய முடியாது. நாம் பயன்படுத்தாமலே நமக்கு குறுந்தகவல் வந்தால், யாரோ நம் கணக்கை தவறாக உபயோகிக்க முயற்சிக்கிறார்கள் என்று எச்சரிக்கையாகி உடன் நம் கடவுச்சொல்லை மாற்றி விடலாம்.
Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதிஜிமெயில் / ஃபேஸ்புக் இரண்டுமே ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மின்னஞ்சல் கணக்கு தான் நம்முடைய இணையக் கணக்குகளுக்கு ஆதாரம் என்பதால் மின்னஞ்சல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போல ஃபேஸ்புக் இந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், நம் ஃபேஸ்புக் கணக்கில் குடும்ப நிழல்ப் படங்கள், காணொளிகள் இருந்தால், அதை தவறான வழியில் பயன்படுத்த மற்றவர்கள் முயற்சிக்கலாம் என்பதால், இதுவும் ஒருவகையில் முக்கியமான இணையக் கணக்காகி விடுகிறது. கூடுமானவரை குடும்ப நிழல்ப் படங்களை (குறிப்பாக பெண்கள்) சமூகத் தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்பது என்னுடைய பரிந்துரை. ஏனென்றால் நாளைக்கே உங்களுடைய நிழல் படமே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு உங்களுக்கே வரக் கூடிய வாய்ப்பு அதிகம்.
தற்போது ஃபேஸ்புக்கில் எப்படி இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்துவது என்பதைப் பற்றிக் கூறுகிறேன். மிக எளிமையான வழிமுறைகள் தான் எனவே, ரொம்பச் சிரமம் என்று எண்ணாமல் இதை செயல்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் கணக்கை ஹேக்கிங் செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கலாம். நான் முன்னரே கூறியபடி ஹேக்கர்கள் அனைவரையும் விட புத்திசாலிகள் / திறமையானவர்கள். எனவே அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். இவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தானே தவிர 100% பாதுகாப்பு என்று எங்கேயுமே இல்லை.
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
முதலில் ஃபேஸ்புக்கில் உள்ள Settings க்ளிக் செய்தால், மேலே உள்ள (இரண்டாவது) படத்தில் உள்ளது போல வரும். அதில் இடது புறம் Mobile என்பதை க்ளிக் செய்யுங்கள். அதில் உள்ள Add Number க்ளிக் செய்து உங்கள் கைப்பேசி எண்ணைக் கொடுத்தால், உங்களை உங்கள் கைப்பேசியில் இருந்து ஒரு எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பக் கூறும். நீங்கள் அனுப்பியதும் ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு எண் வரும். இந்த எண்ணை அருகில் உள்ள Confirmation Code ல் கொடுத்து Confirm க்ளிக் செய்தால், உங்கள் கைப்பேசி எண் சேர்க்கப் படும். இதே முறையில் Add another number என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு நம்பகமான இன்னொருவர் கைப்பேசி எண்ணையும் கொடுத்து விடுங்கள். ஒருவேளை உங்கள் கைப்பேசியை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தால் இந்த இரண்டாவது எண் உதவும்.
இதை செய்து முடித்தவுடன் அடுத்ததாக அதே பக்கத்தில் திரும்ப இடது புறத்தில் உள்ள Security settings க்ளிக் செய்யவும்.
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
இது எதற்கு என்று படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்து இருக்கும். வேறு யாராவது உங்கள் கணக்கை திருட முயற்சிக்கும் போது நமக்கு இது போன்ற எச்சரிக்கைகள் மின்னஞ்சல் மற்றும் ஃபேஸ்புக்கில் Push Notification ஆகத் தெரியும். Push Notification என்பது நமக்கு யாராவது பின்னூட்டம் (Comment) விருப்பம் (Like) செய்தால் சிகப்பு வண்ணத்தில் வரும் Notification போல யாராவது திருட முயற்சித்தாலும் வரும். எனவே நாம் எச்சரிக்கையாகி விடலாம். இதைச் சோதனை செய்ய, நீங்கள் இதை செயல்படுத்திய பிறகு வேறு உலவியில் (Browser) உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நுழைய முயற்சித்தால், தற்போது Active ஆக உள்ள ஃபேஸ்புக் கணக்கில் Push Notification வருவதைக் காண முடியும்.
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
இது தான் மிக முக்கியமான வசதி. இதைத் தேர்வு செய்தால், உங்கள் கடவுச்சொல்லை யாராவது திருடினாலும் அல்லது ஊகித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. கடவுச்சொல்லை கொடுத்தவுடன் நாம் பதிவு செய்துள்ள கைபேசிக்கு குறுந்தகவல் (SMS) வரும். இதில் குறிப்பிட்டுள்ள எண்ணைக் கொடுத்தால் மட்டுமே நுழைய முடியும். இதன் மூலம் கடவுச்சொல் தெரிந்தால் மட்டுமே நம் கணக்கில் யாரும் நுழைந்து விட முடியாது. இதில் நாம் இரண்டு எண்களை பதிவு செய்து இருந்தால், இரண்டு கைப்பேசிக்குமே குறுந்தகவல் வரும். மூன்றாவதாக பதிவு செய்து இருந்தால் அதிலும் வரும். இரண்டே போதும்.
இதில் Get Codes என்று இருப்பதை க்ளிக் செய்தால் அதில் வரும் 10 எண்களை வேறு பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இது எதற்கு என்றால், இரண்டு கைப்பேசிகளுமே இல்லாத சமயத்தில் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இது மிக அவசியம், புறக்கணிக்க வேண்டாம். எனக்கு இந்த வசதி ஒருமுறை ஜிமெயிலில் பிரச்சனை ஆன போது பேருதவியாக இருந்தது. என்னுடைய இன்னொரு பரிந்துரை, அடிக்கடி உங்கள் கைப்பேசி எண்ணை மாற்றுபவராக இருந்தால், இந்த வசதியைப் பயன்படுத்தாதீர்கள் அல்லது மாற்றிய உடன் இதிலும் மறக்காமல் புதுப்பித்து விடுங்கள்.
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
இந்த வசதி ரொம்ப முக்கியம் கிடையாது ஆனால், உதாசீனப்படுத்த முடியாது. ஒருவேளை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், ஃபேஸ்புக்கிற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பர்கள் பெயரைக் கொடுத்தால், கணக்கை மீட்க உதவியாக இருக்கும்.
grey ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
இந்த வசதியில் Never கொடுப்பதே சரியானது. இல்லையென்றால் குறுந்தகவல் சரமாரியாக வந்து நம்மைக் கடுப்பேத்தும்.
படிக்க என்னவோ நிறைய செய்ய வேண்டியது போல இருக்கும் ஆனால், உண்மையில் இதை முடிக்க 10 நிமிடங்கள் கூட ஆகாது. இதை செய்வதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பு மேம்படும். தற்போது ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் என்பது வெகு குறைவாகவே இருக்கிறது. எனவே உங்கள் கணக்கு முக்கியம் என்றால், இந்த வசதியை அவசியம் செயல்படுத்துங்கள். ஒரு நிறுவனம் பாதுகாப்பிற்காக வசதிகளைக் கொடுக்கும் போது அதை புறக்கணிக்காமல் செயல்படுத்துவதே புத்திசாலித்தனம். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். Privacy (facebook, Android Mobile, Browsing Center) குறித்த சில தகவல்கள் உள்ளது, அதை இன்னொரு கட்டுரையில் கூறுகிறேன்.

திங்கள், 17 மார்ச், 2014

ஈரோடு மாவட்ட நூலகத்துறை கவனத்திற்கு......

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 ஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம்-638402, ரங்கசமுத்திரம் பகுதியில் பகுதி நேர நூலகம் (5-3-2014) கடந்த ஐந்தாம் தேதி புதன்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.அதே சமயம் உறுப்பினர் எண் விரைவாக கொடுக்க வேண்டும் என நூலகத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
                பத்து நாட்கள் கழித்து நேற்று(16-3-2014) புதிய நூலகத்திற்கு சென்று உறுப்பினராக பணம் அறுபது ரூபாய் கட்டி சேர்ந்தேன். ஆனால் உறுப்பினர் எண்ணும் கொடுக்கவில்லை.பணம் பெற்றதற்கான  ரசீதும் கொடுக்கவில்லை.உறுப்பினர் எண் கேட்டால் நூலக பொறுப்பாளர் பின்னர் தருவதாக கூறுகிறார்.

                 புத்தகம் மட்டும் மூன்று கொடுத்து பதினைந்து நாட்கள் கெடு வைத்துள்ளார்..இதுவரை எத்தனை உறுப்பினர்கள் நூலகத்தில் சேர்ந்து உள்ளனர்?என்று கேட்டால் நூலக பொறுப்பாளரிடம் பதில் ஏதுமில்லை .இது போன்ற செயல் என்னைப்போன்றவர்களுக்கு வாசிப்புத்திறனை மழுங்கடிக்கும் செயல் ஆகும்.அதோடு உறுப்பினர்களை சேர்க்கும் தன்னார்வப்பணியில் குறைபாட்டை உருவாக்கும்.
                  உடனடியாக ஈரோடு மாவட்ட நூலகத்துறை நடவடிக்கை எடுத்து  ரங்கசமுத்திரம் பகுதி நேர நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள என்னைப் போன்றோருக்கு விரைவில்  உறுப்பினர் எண் வழங்க வேண்டும்.வாசகர் மன்றத்தை துவங்க அனுமதி கொடுக்க வேண்டும்.சமூக நலன் கருதி உடனே செய்ய வேண்டும்.
               என  பொதுமக்கள் நலன் கருதி......