வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

நன்றி அறிவிப்பு பதிவு-15.08.2014

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
நன்றி அறிவிப்பு பதிவு இது ........அனைவரும் படியுங்க.........,தங்களது தளத்தில் பகிருங்க......நன்றிங்க.......
 
 
 
நன்றி அறிவிப்பு பதிவு...
மரியாதைக்குரியவர்களே,

       

வணக்கம்.திட்டமிட்டபடி 68ஆம் சுதந்திரதினமான நேற்று 15-08-2014 வெள்ளிகிழமை நமது சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நண்பர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக ,''இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி'' ரங்க சமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை11.00மணிக்கு நண்பர்கள் சுயஅறிமுகத்திலிருந்து துவங்கி பல்வேறு கருத்தாக்கங்களுடனும்,கலந்துரையாடல்களுடனும்,திட்டமிடலுடனும்,கருத்தரங்கம் மற்றும் விவாதங்களுடனும்,மதியம்2.10மணி வரை சுருக்கமாக! சுருக்கமாக!! என்று அவ்வப்போது அறிவுறுத்தியும் எவ்வித தொய்வுமின்றி மிக சந்தோசமாக-மன நிறைவாக நிறைவுற்றது.டாக்டர்.ப.பாலசுப்ரமணியம்(விஜயலட்சுமி) அவர்கள் அனைத்திந்திய தலைமை இயக்குநர்-அடிப்படை மக்கள் உரிமைகள் குரல் -ஈரோடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பு மற்றும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற அரசு பணி சார்ந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும்அந்த பயிற்சியில் சத்தியமங்லம் வட்டார இளைய சமுதாயத்திற்கு அனைத்து உதவிகள் செய்து கொடுப்பதாகவும்,நடிப்பு உள்ளிட்ட கலைத்துறையிலும் வாய்ப்பு அளிக்க போதுமான ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறி நமக்கு பெருமை தேடி தந்துள்ளார். அதே போல READ சமுக சேவை இயக்குநர் திரு.கருப்புசாமி அவர்கள் துவக்கவுரையில் மனித உரிமைகள் மற்றும் கல்வி உரிமைகள் பற்றி சிறப்பான உரை கொடுத்து நமக்கு விழிப்பு கொடுத்து உள்ளார்.நகராட்சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அவர்கள் பள்ளியில் இடம் கொடுத்து ஆசிரிய,ஆசிரியை பெருமக்களின் உதவியோடு நிகழிடத்தின் அறையை அழகுபடுத்தி ,மின் வசதி ஏற்படுத்தி கொடுத்து,ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி கொடுத்து எல்லாவற்றிற்கும் மேலாக தலைமை ஏற்று நடத்தி கொடுத்து உள்ளார்.திரு.லோகநாதன்( லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இளைய சமுதாயத்திற்கு இயன்ற அளவு தன்னால் கொடுக்க முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர்15 தேதி முதல் 19 ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.திரு.சதீஷ்குமார் அவர்கள் சென்னையிலிருந்து வருகை தந்து இணையதள நண்பர்களை ஒருங்கிணைத்து சிறப்பான வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.திரு.ஆனந்த் கோயமுத்தூர்அவர்கள் சமுகசேவை மற்றும் இளைய சமுதாயம் அனைவரையும் ஒருங்கிணைத்து இன்னும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்களை உயர்கல்வி ,ஒழுக்கம்,சுற்றுச்சூழல்,மனித உறவு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வை கொடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.அன்றைய தினம் காலையில்கூட இணையதள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு பத்து உறுப்பினர்களுடன் வருவதாக கூறி? புறப்படும் தருவாயில் எதிர்பாராத விபத்துக்கு ஆளாகி வர இயலாமையை மாலையில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்த திரு.சௌந்தர் திருப்பூர் அவர்களை பாராட்டுகிறோம்.தாங்கள் எல்லா வளமும் பெற்று இன்னும் வளமிக்கவராக உயரவேண்டும்.அப்போதுதாங்க எங்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்கும்.(திரு.சௌந்தர் அவர்களுக்கு அனைவரின் சார்பாக கூறுவது என்னவெனில் தாங்கள் முதலில் தீ விபத்தின் வேதனையிலிருந்து மீண்டு வாருங்கள்,மீண்டும் சந்திப்போம்.நாம் எதையுமே இழப்பதில்லை-நமது மனதை இழக்கும்வரை என்ற கூற்றினை மனதில் வைத்துக்கொண்டு தில்லாக செயல்படுங்கள்.கேள்விப்பட்ட எங்களால் ஆறுதல் கூட கூற இயலாமையை எண்ணி மிகவும் வருந்துகிறோம்.கண்டிப்பாக தங்களுடைய ஆர்வத்திற்கு என்றும் இணையதள நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.வருங்காலத்தில் தாங்களே முன்னின்று நடத்தலாம் வாங்க.) எத்தனையோ அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழில்கள் வேலைகள் இருந்தும் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு கலந்துகொண்டு சிறப்பித்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ஒருநாள் தாங்கள் செலவிட்ட நேரமானது வாழ்நாள் பயனுள்ள மூலதனமாக அமைந்து இருக்கும் என நம்புகிறேன்.மாறு கருத்து உள்ளவர்கள் கண்டிப்பாக இங்கேயே பகிரவும்.உங்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்.என அனைரவருக்கும் நன்றிகூறி இனி வருங்காலங்களில் இன்னும் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்கு அனுபவமே சிறந்த வழிகாட்டி ஆதலால் வாங்க அனுபவப்படலாம்.அடுத மாதம் தாளவடி வட்டார பள்ளி மாணவ,மாணவியருக்கான சதுரங்க விளையாட்டுப்போட்டி நடத்த உள்ளோம்.அதற்கு இணையதள நண்பர்கள அமைப்பு என்னமாதிரியான உதவிகள் கொடுக்கலாம் என கருத்து கூறுங்கள்.உங்கள் மனதில் என்ன உள்ளது? என்பதை தெரிவியுங்கள்.அடுத்த வேலையாக சத்தியமங்கலத்தில் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் இணையதள நண்பர்கள் சார்பாக கொடுக்கும் உதவிகள் என்னவென்று அனைவரும் தங்களது கருத்தினை கூறுங்கள்.நம்ம சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பின் தளத்தை உங்களது பயிற்கு பயன்படுத்துங்கள்.பதிவிடுங்கள்.பகிருங்கள்.தவறு பற்றி கவலைப்படாதீர்.உங்கள் எண்ணங்களை கூறுங்கள்..என அன்புடன் -பொறுப்பாளர்கள் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு-தேதி 16-08-2014சனிக்கிழமை.

இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-2014

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். இன்று 68ஆம் சுதந்திர திருநாள்..இன்று சந்தன நகரம் என்றழைக்கப்படும் சத்தியமங்கலத்தில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவக்கிய சிறப்பான பொன்னாள்...இன்று காலை 11.00 மணிக்கு ரங்கசமுத்திரம் MLA அலுவலகம் அருகிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி துவங்கியது.திரு.R.சதீஷ்குமார்-சென்னை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.திருமதி.M.செல்வி H.M. அம்மையார் அவர்கள் தலைமை ஏற்றார்.திரு.R.கருப்புசாமி (READ) அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்) அவர்கள் இணையதள நண்பர்கள் சந்திப்பு நோக்கம் பற்றி உரை நிகழ்த்தினார்.Dr.M.பாலசுப்பிரமணியம் (ஈரோடு)அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.திரு.S.V.ஆனந்த் (கோயமுத்தூர்)அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.திரு.`R.வினோத்குமார் B.E.,அவர்கள் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடு திரு C. பரமேஸ்வரன் அவர்கள் செய்து இருந்தார். கீழ்கண்டவாறு அதாவது (1) சத்தியமங்கலம் வட்டாரம் பற்றிய தகவல் ஏடு வெளியிடுவது,(2)இளைய முதாயத்திற்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வழிகாட்டுவது,(3) அக்டோபர் 15 முதல் 19 வரை புத்தக கண்காட்சி நடத்த தேவையான உதவிகளை செய்வது குறிப்பாக விளம்பரம் செய்வது ,(4) வலிமையான வலைப்பின்னல் உருவாக்குவது,(5)ஏராளமான உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது,(6)Dr.P.பாலசுப்பிரமணியம்-ஈரோடு அவர்களை கௌரவ ஆலோசகராக ஏற்பது (7) போதை,புகை,மது பழகங்களின் தீமைகள்பற்றி விழிப்புரை கொடுப்பது,(8)பிளாஸ்டிக் ,மின்னணு சாதனங்கள் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு,தண்ணீர் மாசு,காற்று மாசு,போன்ற சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புரை செய்வது,(9) இளைய சமுதாயத்திற்கு மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் திரைப்படத்துறை போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுப்பது,(10) சிவில் சர்வீஸ்,அரசுப்பணிகளுகான போட்டித்தேர்வுகள் வங்கி போன்ற நிதி மேலாண்மைத்துறைகளில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் கொடுப்பது,(11)வாசிப்புத்திறனை மேம்படுத்துவது மற்றும் அரசு நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க உதவி செய்வது,(12)அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உதவி செய்வது (13)சமுதாய நலப் பணிகளை தனியாகவோ,பிற அமைப்புகளுடன் இணைந்தோ செய்வது,(14) சத்தியில் ஊர்க்காவல் படை உருவாக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இணையதள நண்பர்கள் இயக்கம்-சத்தியமங்கலம்.

                                அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
                                        அதற்குப ஆங்கே செயல் - குறள் 333.
                                    ============================================



மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். நான் விரும்பும் சத்தியமங்கலம் ( I LOVE SATHY )  வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். வருகிற 2014 ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சந்தன நகரம் என்னும் சத்தியமங்கலத்தில் உள்ள லோகு டிரைவிங் ஸ்கூல் வளாகத்தில் இணையதள நண்பர்கள் இயக்கம் - துவக்கவிழா மற்றும் ''சமூக சேவை-நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி'' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.எனவே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
குறிப்பாக சத்தியமங்கலத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் உலகளவில் எங்கு என்ன பணி புரிந்தாலும் ஆதரவு கொடுத்து 
        தகுந்த ஆலோசனை கொடுத்து, நிதியுதவியும் கொடுத்து அதனை முழுமையாக,சிக்கனமாக  செலவிடப்படுகிறதா? எனவும் கண்காணித்து நம்ம வழித்தோன்றல்களுக்கு வழிகாட்டியாக உதவ அன்புடன் அழைக்கிறோம்..அனைவரும் வாங்க,,வளமான ஆலோசனை தருக...

         அதன் நிகழ்ச்சி நிரல் விவரம் வருமாறு.

 இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-சத்தியமங்கலம்.
 தினம் ஒரு நன்மை செய்வோம்-தினம் ஒரு குறள் படிப்போம்.
                       -- - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - -- 
 இடம்;லோகு டிரைவிங் ஸ்கூல் -சத்தியமங்கலம்.
நாள்; 15 ஆகஸ்டு 2014.வெள்ளிக்கிழமை. நேரம் காலை 10.30 மணி.

(1) தமிழ்த்தாய் வாழ்த்து,
(2)தலைமை
(3)வரவேற்புரை
(4)துவக்கவுரை
(5)மௌன அஞ்சலி - 
                (சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கும்,தற்போது நாட்டைக் காக்க உயிர் நீத்த இராணுவத்தினருக்கும்,நம்ம நகர காவலர்களுக்கும்,தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களுக்கும்.)
(6)சமூக ஆர்வலர்களை நினைவு கூறல் மற்றும் போற்றுதல் (உதாரணமாக கல்விக்காக உதவி செய்யும்விஜயலட்சுமி அறக்கட்டளை திரு.ஆறுமுகசாமி ஐயா அவர்கள் ,கோபிசெட்டிபாளையம் அமரர் லட்சுமண அய்யர் அவர்கள்,அமரர் தாசப்ப கவுடர் அவர்கள்,கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை,இன்னும் நமக்கு தெரியாத அனைத்து சமூக நல சேவையாளர்களை கண்டுணர்தல் அவர்கள் போன்றோரை  வணங்கி பாராட்டு நல்குதல்).
(7)இணையதள நண்பர்கள் இயக்கம்- துவக்கத்தின் நோக்கம்.
(8)நிர்வாகிகள் தேர்வு
(9)கருத்தரங்கம்-
 தலைப்பு ; ''சமூக சேவை நம்ம சந்ததிகளுக்கான வழிகாட்டி''.
அன்றையதினம் -திட்டமிடல், உறுப்பினர் சேர்க்கை,நேர மேலாண்மை,நிதிமேலாண்மை,கலாச்சார பாதுகாப்பு,குடும்ப உறவு,முதியோர் ஆதரவு,குழந்தைகள் பாதுகாப்பு,பெண்கள் பாதுகாப்பு, பயணங்களில் பாதுகாப்பு,இளைய சமுதாயத்திற்கான வருங்கால தேவைகளை பூர்த்திசெய்ய தக்க வழிகாட்டி மையம் அமைத்தல்,விளையாட்டு போட்டி வைத்தல், இளைஞர்களை ஒன்று திரட்டி ஊர்க்காவல் படை அமைப்பு,கண்கள் பாதுகாப்பு மற்றும் கண் தானம் செய்தல் விழிப்புணர்வு,சாலை பாதுகாப்பு,வேலை மற்றும் தொழில் வாய்ப்பு,விடுபட்டவர்களை இணைத்தல்,பிளாஸ்டிக் தீமைகள்,மழைநீர் சேமிப்பு,விவசாயத்தை காப்பதற்கான ஆலோசனைகள்,நூலகத்தின் பயன்கள்,வாசிப்புத்திறனை மேம்படுத்துதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,உணவே மருந்து,இயற்கையை காப்போம்,உலகமே உள்ளங்கையில் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் வலுவான வலைப்பின்னல் அமைத்தல்,குறிப்பாக அரசியல்,சாதி,மதம்,இனம்,மொழி கலப்பில்லாமல் சமூகம் என்ற பொது நோக்குடன் செயல்படுத்துதலுகான ஆலோசனைகள் என பல்வேறு விவாதங்களை நடத்த உள்ளோம்.
(10)நன்றியுரை
(11) தேசிய கீதம்...
என சுதந்திர தினத்தன்று  பல்நோக்கு நிகழ்ச்சியாக நடத்த உள்ளதால் அனைவரும் வாங்க,முன்னரே வருகையினை பதிவு செய்க.அப் போதுதாங்க நிகழ்விடம் அமைக்கவும்,உணவு ஏற்பாடு செய்யவும் இயலும்.
         


Odi Vilayadu Paapa- Patriotic songs - Tamil

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பனை மரம்-




பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

திருநீறு வகைகளும் அதன் நன்மைகளும்.

மரியாதைக்குரிய நண்பர்களே,
           வணக்கம். திருநீறு பற்றிய பதிவு இது.பதிவிட்ட நண்பர் திரு.அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
திருநீறு வகையும் அதை இடுவதால் ஏற்படும் நன்மைகளும் !
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி)
குறிக்கின்றது.வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.
திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப்
பூமியில் விழாது தாமரை இலையில்
பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம
மந்திரங்களால் சிவாக்கினியில்
எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.

2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக்
கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவத
ு அணுகல்பத் திருநீறு.

3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும்
இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக்
காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில்
எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு.

4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும்
சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத்
திருநீறு.

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின்
எஞ்சியது நீறு.நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த
நிலைக்கு அடையாளமும் ஆகும்.புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன ;
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்:
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை,உயர்ந்த நற்குணங்கள்,குறைவற்ற செல்வம்,நல்வாக்கு,நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார் பாருங்களேன்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே !

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

I LOVE SATHY-நான் விரும்பும் சத்தியமங்கலம்.



மரியாதைக்குரிய நண்பர்களே,
            வணக்கம்.

                  நான் விரும்பும் சத்தியமங்கலம் என்னும் I LOVE SATHY  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 


                இந்த அமைப்பை உருவாக்குவது பெரிய விசயமே இல்லைங்க!.நல்ல முறையில் சுயநலமின்றி,அரசியல் கலப்பின்றி,சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி  சிறுகச் செய்தாலும் சிறப்பாக செயல்படுத்தவேண்டும்.

              I LOVE SATHY -இணையதள நண்பர்கள் குழு- நிறுவனர் திரு.சதீஷ்குமார் அவர்களது ஆலோசனைப்படி வருகிற ஆகஸ்டு 15ஆம் தேதி காலை11 மணிக்கு இடம் தற்போதைக்கு,''லோகு டிரைவிங் ஸ்கூல்''வளாகம்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.
   ( நண்பர்கள் வருகையை பொறுத்து இடம் மாறுதலுக்குட்படலாம்). 
       நம்ம சத்தியமங்கலத்தில்,அரசியல்,மதம்,இனம்,சாதி,மொழி என்ற வேறுபாடின்றி மனித சமூகம் என்ற பொது நோக்கில்,அறிமுகம் மற்றும் முதல் நிகழ்வாக, '' இணையதள நண்பர்கள் குழு'' சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அது சமயம் இன்றைய சூழலுக்கேற்ப நம்ம சத்தியமங்கலத்திற்கு சமுதாய நலனுக்கான பணிகள் மற்றும் இளைய சமுதாயத்திற்கு எதிர்காலத்திற்கான வழிகாட்டும் முறைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.அப்போது சத்தியமங்கலம் பற்றிய தகவல் சிற்றேடு ஒன்றும் வெளியிடலாமா? என்பது போன்ற விவாதங்கள் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்தினையும் கூறுங்க.அனைவரின் ஆலோசனைகளையும் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்பதால், நீங்களும் வாங்க! உங்களுக்குத்தெரிந்த நண்பர்களையும் அழைத்து வாங்க!! நட்பில் இணைந்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்பதில்லைங்க,அன்றைய தினம் கூட நேரில் வந்து இணையலாம்!!!!.......