06 January, 2012
23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி
அன்பு நண்பர்களே,வணக்கம்.
tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
'' விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்''
23-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-
(1) ரோட்டரி கிளப் தாளவாடி, (2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி, (3)காவல்துறை தாளவாடி, (4)சத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம், இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர்.
தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
(1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி, (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம், (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை, (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.
தாளவாடி வட்டார அனைத்து பள்ளிகள்,
(1)அரசு மேல்நிலைப்பள்ளி-தாளவாடி (2) அரசு உயர்நிலைப்பள்ளி-சிக்கள்ளி, (3)புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி - சூசைபுரம், (4) புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி-திகனாரை, (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-காஜனூர் -ஆகிய அனைத்து பள்ளிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்கள் இட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தனர்.
அனைத்து பள்ளிக்குழந்தைகள்&ஆசிரியர்கள் குழுவின் பேரணியை தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாத்தினுள் ''கொடி அசைத்து துவக்கி வைக்கிறார்'' திருமிகு.M.சிங்காரவேலு B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள்.அருகில் தாளவாடி பஞ்சாயத்துத்தலைவர் அவர்கள் மற்றும் திகினாரை பஞ்சாயத்து தலைவர் திருமிகு. காளநாயக்கர் அவர்கள்.இவர்களுடன் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள்&பணியாளர்கள்,பொது மக்கள்.(மேலே)
பேரணியில் கலந்து கொண்ட பள்ளிக்குழந்தைகள் பேருந்து நிலையத்தினுள் ,(வெயில் காரணமாக).(மேலே)
பள்ளிக்குழந்தைகள் ''மத ஒற்றுமைக்கு நல்லிணக்கமாக விளங்கும்'' கோவில்கள் முன்பு ''சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்'' வந்த காட்சி.(மேலே)
''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் குழு''
திருமிகு.சாந்தமல்லப்பா -ரோட்டரி கிளப் தாளவாடித் தலைவர் -அவர்கள் தலைமையுரை ஆற்றிய காட்சி.(மேலே)
திருமிகு.M.சிங்காரவேலு.B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமங்கலம் அவர்கள் சாலைப்பாதுகாப்பின் அவசியத்தையும்,விபத்திலிருந்து நம்மைக்காத்துக்கொள்வது பற்றியும் சிறப்புரை ஆற்றிய காட்சி.(மேலே).
தாளவாடி(CIRCLE) காவல்துறை ஆய்வாளர் திருமிகு.கா.தங்கவேல் -அவர்கள் போக்குவரத்துக்குற்றங்களும்,சட்டங்களும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)
திருமிகு.S.வியானி (DIVINE & ROTARY CLUB)அவர்கள் தனிநபர் வாகனக்குறைப்பின் அவசியத்தையும், அதனால் போக்குவரத்து நெரிசல் குறைவும்,சுற்றுச்சூழல் மாசு குறைவும் பற்றி விவரித்த காட்சி.(மேலே)
திருமிகு. அந்தோணி முத்து-(PALM-2 & TNSF) அவர்கள் அங்குள்ள கன்னட மொழி மட்டும் தெரிந்த மக்களுக்காக ''கன்னடமொழியில்'' சாலை விபத்துக்கு நமது அறியாமை ,தெரிந்தும் செய்யும் தவறுகள் பற்றியும் - சாலைப் பயணத்தின் பாதுகாப்பு பற்றியும் கன்னடமொழியில் விவரித்த காட்சி.(மேலே)
திருமிகு.மனோஜ் ஆசிரியர் மற்றும் குழுமத்தினர்- டிவைன் மெட்ரிக் பள்ளி ஆகியோர் சாலை விழிப்புணர்வுப்பாடல் பாடிய காட்சி.(மேலே)
திருமிகு. A.P.ராஜ் (TNSF)அவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் சமூக அக்கறையின்பேரில் சாலைப்பாதுகாப்பு விழா எடுத்த (1)ரோட்டரி கிளப்,(2)தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,(3)தாளவாடி காவல்துறை,(4)கோபி மற்றும் சத்தி வட்டார போக்குவரத்துத்துறை இவர்களுடன் துணை நின்ற சத்தி&கோபி வட்டஓட்டுனர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள்,தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர்&உரிமையாளர்கள்,பொதுமக்கள்,பேரணியில் கலந்து கொண்ட அனைத்துப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும்ஆசிரிய,ஆசிரியைப் பெருமக்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் சாலை பாதுகாப்பு பற்றி கட்டுரைகள் எழுதிக்கொடுத்த அனைத்து மாணவ,மாணவியருக்கும் நன்றி! நவிழ்ந்த காட்சி.(மேலே)
வரவேற்புரை வழங்கிய திருமிகு.பரமேஸ்வரன்(TNSF) அவர்கள் '' விபத்துக்குக்காரணங்கள்-விபத்தைத்தவிர்க்க நமது பங்கு'' என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதிய அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் அவரவர் பயிலும் பள்ளிகளின் இந்த வருடம் நடைபெறும் ஆண்டு விழாவின்போது பாராட்டுச்சான்றும்,பரிசும் வழங்கப்படும் என அறிவித்த காட்சி.மேலும் சூசைபுரம் மேல்நிலைப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு இயக்கம் (R.S.P) மற்றும் டிவைன் மெட்ரிக் பள்ளியில் சாலைப்பாதுகாப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அறிந்து பாராட்டு நல்கிய காட்சி.(மேலே)
23-வது சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
நாள்;- 06-01-2012.
விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்.
நாள்;- 06-01-2012.
இடம்;- தாளவாடி பேருந்து நிலையம்.
நேரம்;-காலை 10-00மணி முதல் 12-00மணிவரை. தலைமை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
தலைவர்- ரோட்டரி சங்கம்-தாளவாடி.
முன்னிலை;- திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி,
வரவேற்புரை;- திருமிகு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
தலைவர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி,
தலைமையுரை;- திருமிகு.சாந்தமல்லப்பா அவர்கள்,
தலைவர்-ரோட்டரி கிளப் - தாளவாடி.
சிறப்புரை;- திருமிகு. சிங்காரவேலு அவர்கள்,
மோட்டார் வாகன ஆய்வாளர் -சத்தியமங்கலம்.
திருமிகு.கா.தங்கவேல் அவர்கள்,
காவல்துறை ஆய்வாளர் - தாளவாடி(CIRCLE).
திருமிகு.அரிமா.K.லோகநாதன் அவர்கள்,
தலைவர்- கோபி & சத்தி வட்ட ஓட்டுனர்பயிற்சிப்பள்ளி.
திருமிகு.S.மரிய அருள் வியானி அவர்கள்,
டிவைன் பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் - தாளவாடி.
திருமிகு.அந்தோணி முத்து அவர்கள்,(PALM-2)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.
விழிப்புணர்வுப்பாடல்;-
திருமிகு.மனோஜ் ஆசிரியர்,மற்றும்
குழுமத்தினர்
டிவைன் மெட்ரிக் பள்ளி - தாளவாடி.
நன்றியுரை;-திருமிகு.A.P.ராஜூ அவர்கள்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாளவாடி.
நன்றிகள்;-
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம் அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
(2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
''தாளவாடி வட்டார சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு''
சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகள்;-
(1)திருமிகு.சகாயம்-சூசைபுரம் அவர்களுக்கும் (ஒலிபெருக்கி உதவி மற்றும் மின்தடை ஏற்பட்டவுடன் உடனடியாக ஜெனரேட்டர் உதவி செய்தமைக்கு),
(2)திருமிகு.சேத்தன் பிரஸ்-தாளவாடி அவர்களுக்கும் (வேலைப்பளு இருப்பினும் சமூக நலனுக்கான நிகழ்வு என அறிந்து உடனடியாக பத்திரிக்கை 2000 எண்ணிக்கை அச்சடித்துக்கொடுத்தமைக்கு)
''தாளவாடி வட்டார சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்குழு''
சார்பாக மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
ROTARY CLUB OF THALAVADY,
TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
ASSOCIATION OF DRIVING SCHOOLS,
ALL SCHOOLS OF THALAVADY.
TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY,
POLICE DEPARTMENT-THALAVADY CIRCLE,
REGIONAL TRANSPORT OFFICE-GOBI & SATHY,
ASSOCIATION OF DRIVING SCHOOLS,
ALL SCHOOLS OF THALAVADY.
======================================================================
tnsfthalavady.blogspot.com // paramesdriver.blogspot.com // konguthendral.blogspot.com //
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக