ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அனைவருக்கும் அறிவியல்


மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 இனி வருங்காலங்களில்
 
                          ''அனைவருக்கும் அறிவியல்'' 
                                             என்னும்
             http://ariviyalkarpom.blogspot.in 
 
             வலைப்பதிவிலும் -எளிமையான அறிவியல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என
தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளையும்,அறிந்துகொண்ட அறிவியல் உண்மைகளையும்,தேவையின்போது தேடல்களால் கிடைக்கும் அறிவியல் உண்மைகளையும்,அறிவியல் புதுமைகளையும்,அனுபவ அறிவியல்களையும் கல்வியறிவு,படிப்பறிவு,ஏட்டறிவு,எழுத்தறிவு,அனுபவ அறிவு,அதாவது பட்டறிவு,பகுத்தறிவு,குடும்ப அறிவு,மனித உறவுக்கான அறிவு,மனவலிமைக்கான அறிவு என பலதரப்பட்ட அறிவியல்களையும்  பகிர்ந்து கொள்ளுங்க.அனைவருக்கும் பயன்படுங்க.....
     என 
அன்புடன் 
 அறிவியல் ஆர்வலர்கள்.
தேதி;-28-10-2013

கட்டாயத் தேவை கண்டுபிடிப்பின் தாய்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி 
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வானவியல்  உருவானது எப்படி?என்று இந்த பதிவில் காண்போம்.
                          ‘அல்ஜிபர்வெஹல் முஹபலா’
                           அப்படியென்றால் என்ன?
                   அதுதான் ‘அல்ஜீப்ரா’ என்ற கணிதத்தின் முன் பெயர்.  இப்போது ஆங்கிலத்தில் அல்ஜீப்ரா என்று அழைக்கப்படும் கணிதம் ஒரு அரேபியக் கணித வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அது ஆங்கில மொழிவழக்குக்கேற்பத் சிதைவுபடுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் அரேபியர்கள் கணித அறிவியலில் முன்னணியிலிருந்தனர். அதனோடு அதன் கிளை நூலான வானவியலிலும் சிறப்புற்று விளங்கினர்.
‘ஆல்டிபரான்’ (Aldeberan) , ‘அல்டெயர்’ (Altair) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெயர்கள் அராபியப் பெயர்கள்தாம். இந்த விண்மீன்கள் முறையே தமிழில் ‘ரோஹிணி’, ‘திருவோணம்’ என அழைக்கப்படுகின்றன.
அது எப்படி அராபியர்கள் வானவியலில் சிறந்து விளங்கினர்? 
                         பாலை வனத்தில் பயணம் செய்வது கடலில் பயணம் செய்வது போலத்தான். அராபியர்களுக்குக் கடலில் மட்டுமல்லாது பாலைவனங்களிலும் பயணம் செய்வது கட்டாயம். 
                இரவில் திசை காண்பது எப்படி? வானவியல்தான் துணை நின்றது. மாலுமிகள் சென்ற நூற்றாண்டின் பெரும் பகுதியில் Sextant என்ற வானவியல் கருவியைப் பயன்படுத்திக் கப்பலின் இருப்பிடத்தை அறிந்தனர். 
          இப்போது Geo Positioning System (GPS)என்னும் புவியிடங்காட்டி  மூலம் தங்கள் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணித்துப் பாதை மேற்கொள்கின்றனர்.
        நம் தமிழக மீனவர்களும் அனேக விண்மீன்களையும் விண்மீன் கூட்டங்களையும்(constellations) காண்பிப்பார்கள். ஆனால் அவற்றின் வடமொழிப் பெயர்களை அறியமாட்டார். கார்த்திகைக் கூட்டம் என்ற (Pleiades cluster) விண்மீன் கூட்டங்களை ஆறாங்கூட்டம் என்றும், Canopus என்ற விண்மீனை அகஸ்தியர் என்றும் பெயர் சொல்வர்..
ஒவ்வொரு மாதத்தையும் தேதியையும் அப்போது கீழ் வானில் உதிக்கும் விண்மீனையும் கணக்கில்கொண்டு அப்போதைய நேரம் என்ன என்று துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வர். 
                    அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மீனவர்களிடம் கைக்கடிகாரம் கூடக் கிடையாது. சாதாரணக் கடிகாரங்களைக் கட்டுமர மீனவர் பயன் படுத்த இயலாது. விலையேற்றமான நீர்புகாக் கடிகாரங்கள் எளிதில் கிடைப்பதில்லை. திசை காட்டும் கருவி அல்லது transistor பற்றியும் யாரும் அறியவில்லை. 
                  புயல் சின்னங்களையும் கடல் சீற்றத்தையும் கொண்டு கால நிலையை அறியும் ஆற்றல் பெற்றிருந்தனர்.  இத்தகைய தனித் திறன்கள் இன்றைய சூழ்நிலையில் பயனில் உள்ளனவா அல்லது தெரிந்துகொண்டுள்ளனரா? என்பது தெரியவில்லை.
     இன்னும் நமது ஊரிலேயே திசைகளைத்தானே குறிச்சொல்லாக அடையாளம் காட்டுகின்றனர்.உதாரணமாக தெற்கே போய் வடக்கே ஈசானி மூலையில் செல் என்பது. பழைய சோற்று நேரம் என்பது.ஒரு பனைப்பொழுது நேரம் என்பது.கோழி கூவும் நேரம் என்பது.நடுசாமம் என்பது.அந்தி சாயும் நேரம் என்பது.ஏழைகள் பொழுது என்பது.பணக்காரர்கள் பொழுது என்பது இன்றும் நமது கிராமப்பகுதிகளில் வழக்கச்சொல்லாக புழக்கத்தில் உள்ளது.அல்லவா?அதுபோலவேதாங்க....
             இப்ப தெரிந்துகொண்டீர்களா?! தேவையே தேடலின் ஆதாரம்.,
        ‘கட்டாயத் தேவை கண்டுபிடிப்பின் தாய்’ (Necessity is the mother of invention) .                              என்பதை............

வானவியல்-கோள்களும்-துணை கோள்களும்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி 
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

வானவியல் - கோள்களும் துணைக்கோள்களும் (Planets and Satellites)


கோள்கள்படங்கள்துணைக் கோள்கள்
புதன்-
சுக்கிரன்-
பூமிசந்திரன் (Moon)
செவ்வாய்போபோஸ் (Phobos)
டைமோஸ் (Deimos)
வியாழன்மெடிஸ் (Metis)
ஆட்ரஸ்டீ (Adrastea)
அமல்தியா (Amalthea)
தெபே (Thebe)
லொ (lo)
ஈரொபா (Europa)
கனிமெடெ (Ganymede)
கால்லிஸ்டொ (Callisto)
லெடா (Leda)
ஹிமலியா (Himalia)
லைசிதியா (lysithea)
எலோரா (Elara)
அனன்கே (Ananke)
கார்மே (Carme)
பசிபியா ஸினொபே (pasiphae Sinope.).
சனி அட்லஸ் (Atlas)
ப்ரோமெதியஸ் (prometheus)
பான்டோர (pandora)
எபிமெதியஸ் (epimetheus)
ஜானுஸ் (janus)
மிமாஸ் (mimas)
என்ஸெலாடுஸ் (enceladus)
தேதிஸ் (tethys)
டெலெஸ்டோ (telesto)
கலிப்ஸோ (calypso)
டையோன் (dione)
ஹெலென் (helene)
ரேயா (rhea)
டைடன் (titan)
ஹைப்ரையோன் (hypreion)
ஐயாபெடுஸ் (Iapetus)
போயபே (phoebe.).
யுரேனஸ்கோர்டெலியா (Cordelia )
ஒபேலியா (ophelia)
பையங்கா (bianca)
க்ரெஸ்ஸிடா (cressida)
டெஸ்டெமொன் (desdemone)
ஜுலியெட் (juliet)
போர்டியா (portia )
ரோசலின்ட் (rosalind)
பெலின்டா (belinda)
புக் (puck)
மிரன்டா (miranda)
ஏரியல் (ariel )
உம்பேரியல் (umbriel )
டைடானியா (titania )
ஒபேரொன் (oberon.).
நெப்டியூன் நையட் (Naiad)
தலஸ்ஸா (Thalassa )
டெஸ்பினா (despina)
கலட்டீ (galatea)
லரிஸ்ஸா (larissa )
ப்ரோடியஸ் (proteus)
ட்ரிடோன் (triton)
நெரியத் (nereid).
புளூட்டோசரொன் (Charon).

வானவியல்-தெரிஞ்சுக்கோங்க!

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.
       ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.வானவியல் பற்றி படிக்க அல்லது கற்க ஆரம்பித்தால் அது எங்கு சென்று முடியும்? என்றெல்லாம் சொல்வது சிரமமான காரியம்தாங்க.இருப்பினும் இதோ எனக்கு தெரிந்த சில விசயங்களை பதிவு செய்கிறேன்.பயன் பெற வேண்டுகிறேன்.

*நிலவின் பகல் வெப்ப நிலை 100டிகிரி செல்சியஸ். இரவு வெப்பநிலை 80டிகிரி செல்சியஸ்.
*சூரியனுக்கு மிகத் தொலைவில் உள்ள கோள்- புளுட்டோ.
*சூரியனை ''கோள்கள்'' வட்டப்பாதையில் சுற்றுவதாகச் சொன்னவர் நிகோலஸ் கோபர்நிக்கஸ்.
*சூரியனின் மேற்பரப்பு 6 .087 x10mela18  சதுர மீட்டர்.
*.நிலவின் ஆரம் 1738 கி.மீ.
* .பூமியிலிருந்து சந்திரன் 3 .844 x10 மேல 8 m .
* .பூமியின் பரப்பு 510,100,500 சதுர கி.மீ. ஆகும்.
* .பூமியை விட சூரியனின் பரப்பு 12 ,௦௦௦ மடங்கு பெரியது.*..அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் அடங்கி உள்ளன.
* .புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.
*.சூரியன் என்பது நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரம் ஆகும்.
 *.கோள்கள் என்பது அண்டத்தில் வெடித்து சிதறிய துகள்கள் ஆகும்.
* .நாம் வாழும் நட்சத்திர மண்டலத்தின் பெயர் பால் வழி (MILKY WAY ) ஆகும்.
* .சூரியனின் விட்டம் 1 ,392 ,520  கி.மி.
* .ஓர் ஒளி ஆண்டின் தூரம் சுமார் 5 .88 மில்லியன் மில்லியன் மைல்.
* .வியாழனுக்கு 16 துணைகோள்கள் உள்ளன.
*.சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும்.
*.வியாழனுக்கும் சூரியனுக்கும் இடையே 778 ,333 ,௦௦௦ கி.மி.தொலைவு உள்ளது.
33 .வியாழன் சூரியனை சுற்ற 4 ,332 .62  நாட்கள் (சுமார் 12 வருடம்)ஆகும்.
34 .வியாழனை (jupiter) கடவுளாக கும்பிட்டவர்கள் ரோமானியர்கள் ஆவர்.
35 .சூரியன் தன்னைத் தானே சுற்ற ஆகும் காலம் 25 நாள், 9 மணி, 7 நிமிடம்.
36 .ஒளிக் கதிர்கள் செல்லும் வேகம் 300,௦௦௦ கி.மி.(நொடிக்கு) ஆகும்.
37 .சூரிய ஒளிக்கதிர் பூமியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள் ஆகும்.
38 .புதன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 88  நாட்கள் ஆகும்.
39 .மிகவும் பிரகாசமான கோள் வெள்ளி (venus) ஆகும்.
40 .காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் எனப்படும் கோள் வெள்ளி ஆகும்.
41 .சனி கோளைக் கண்டுபிடித்தவர் கலிலியோ ஆவர்.
42 .சூரியனில் இருந்து வெள்ளியின் தொலைவு 108,208,900 கி.மீ.
43 .பூமி ஐந்தாவது பெரிய கோள் ஆகும்.
44 .பூமிக்கு உள்ள ஒரே துணைக்கோள் சந்திரன் ஆகும்.
45 .சந்திரன் தன்னைத்தானே சுற்ற 27 நாட்கள் 7 மணி 14 நிமிடம் 11 .49 விநாடி காலம் ஆகும்.
46 .சந்திரன் பூமியைச் சுற்ற 29 அரை நாட்கள் ஆகும்.
47 .சுற்றுப்புறத்தில் வளையத்தைக் கொண்டுள்ள கோள் சனி ஆகும்.
48 .யூரேனஸைக் கண்டுபிடித்தவர் சர்.வில்லியம் ஹார்சல். மார்ச் 13,1781 .
49 .அதிக தொலைவில் ஆனால் சாதாரண கண்ணால் காண முடிந்த கோள் சனி(saturn) ஆகும்.
50 .யுரேனஸீக்கு 15 துணைகோள்கள் உள்ளன.
 51 .அதிக துணைக்கோள்களைக் கொண்டுள்ள கோள் சனி, 22  துணைகோள்கள் ஆகும்.
52 . மிகத் தொலைவில் உள்ள கோள் (சூரியனிலிருந்து) புளுட்டோ ஆகும்.
53 .சூரியனிலிருந்து புளுட்டோவின் தொலைவு 5,913,510,000 கி.மீ. ஆகும்.
54 .சூரியனிலிருந்து நெப்டியூன் உள்ள தொலைவு 4 ,497,070,000 கி.மீ. ஆகும்.
55 .மிகக் குளிர்ச்சியான கோள் புளுட்டோ  (-214 டிகிரி c ) ஆகும்.
56 .புளுட்டோ சூரியனை சுற்ற 248 .54 வருடங்கள் ஆகும்.
57 .மிகவும் வெப்பமான கோள் வெள்ளி. அவை 462 டிகிரி c (864 டிகிரி F)
ஆகும்.
58 .மிகவும் வேகமான கோள் புதன் ஆகும். அதன் வேகம் 172248 கி.மீ /மணி ஆகும்.
59 .சூரியனிலிருந்து பூமியை வெப்பம் வெப்பக் கதிர்வீசல் மூலம் அடைகிறது.
60 .பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது தோன்றும் கிரகணம் சூரிய கிரகணம்.
61 .சந்திர கிரகணம் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது வரும்.
62 .சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை தினம் அன்றுதான் தோன்றும்.
63 . பெளர்ணமி தினம் மட்டுமே தோன்றும் கிரகணம் சந்திர கிரகணம் ஆகும்.
64 .சிவப்புக் கோள்கள் எனக் அழைக்கப்படுவது செவ்வாய் ஆகும்.
65 .சூரியனில் உள்ள வாயுக்கள் ஹீலியம், ஹைட்ரஜன் ஆகும்.
66 .வானவியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் சந்திரசேகர் ஆவார்.
67 .சூரியனிலிருந்து வரும் ஒரு தீங்கு வாய்ந்த கதிர் புற ஊதாக் கதிர்கள் ஆகும்.
68 .சந்திரசேகரின் வான ஆராய்ச்சி நட்சத்திரங்களின் தொலைவு பற்றியது ஆகும்.
69 .வானில் இருந்து பார்த்தால் பூமியின் பரப்பு 240 சதுர கி.மீ.சமதளமாக தெரியும்.
70 .பூமி 23 அரை  டிகிரி சாய்ந்தபடி சுற்றுகிறது.
71 .மிகவும் பிரகாசமான நட்சத்திரம் சிரியஸ் ஆகும்.
72 .பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்  பிராக்ஸீமா ஆகும்.
73 .பூமியிலிருந்து  பிராக்ஸீமாவின் தொலைவு 4.3 ஓளி ஆண்டு ஆகும்.
74 .நாய் நட்சத்திரம் (Dog Star ) என்று அழைக்கப்படுவது சிரியஸ்.
75 .இடிமுழக்கம் பூமியில் மட்டும் கேட்கும்.
76 .ஹேலி வால் நட்சத்திரம் 76  ஆண்டுக்கு ஒரு முறைதான் தெரியும்.
77 .லீப்  வருடம் நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் வரும்.
78 .லீப் வருடம் என்பது 366  நாட்கள் கொண்ட வருடம் ஆகும்.
79 .ரோமானியர்கள் போர்கடவுளாக செவ்வாய் கோளை வணங்கினார்கள்.
80 .சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய கோள் சனி ஆகும்.
81 .சனி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 10 ,759 .06 நாட்கள் (சுமார் 30 வருடங்கள்) ஆகும்.
82 .நீரை விட லேசான கோள் சனி ஆகும்..
83 .முழுவதும் கோளங்களாக உள்ள கோள்கள் புதன், வெள்ளி, புளுடோ ஆகும்.
84 .தன்னைத் தானே சுற்ற அதிக நேரத்தை எடுத்துகொள்ளும் கோள் வெள்ளி ஆகும்.
85 .பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவு 384 ,400 கி.மீ. ஆகும்.
86 .சந்திரனுடைய பரப்பளவு 376 ,284 சதுர கி.மீ. ஆகும்.
87 .பூமியிலிருந்து எப்போதும் 59 சதவீதம் சந்திரனின் பரப்பை காணமுடியும்.
88 .பூமி சூரியனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர்(147 ,097 ,000 கி.மீ.) மாதத்தில் தான்.
89 .பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை(152 ,099 ,000 கி.மீ.) மாதத்தில் தான் ஆகும்.
90 .பூமியின் வயது சுமார் 4 ,600 (4 .6 மில்லியன் ) வருடங்கள் ஆகும்.
91 .சாதாரணமாக நட்சத்திரத்தின் வாழ்நாள் சுமார் 10 மில்லியன் வருடம் ஆகும்.
92 .நமது நட்சத்திர மண்டலத்தின் மத்தியில் இருந்து சூரியன் உள்ள தொலைவு 32 ,000 ஒளி ஆண்டு ஆகும்.
93 .ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் ஒரு சுற்று முடிக்க ஆகும் காலம் ஆகும்.
94 .சூரியனின் சுற்று வேகம் நொடிக்கு 250 கி.மீ. ஆகும்
95 .சூரியனில் இருந்து சக்தி கிடைப்பது வாயுக்களின் அணுக்கரு பிணைவு மூலம் ஆகும்.
96 .சூரியன் 5 மில்லியன் வருடம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
97 .சந்திரனில் மலைகள் உண்டு.
98 .சந்திரனில் உள்ள உயரமான மலை லிப்னிட்ஸ் (Liebnitz ) ஆகும். அதன் உயரம் 10 ,600 மீ. ஆகும்.
99 .சந்திரனின் வெப்பநிலை பகல் (+100 டிகிரி C ) இரவு (-180 டிகிரி C) ஆகும்.
100 .நிலாவின் வெளிச்சம் பூமியை அடைய 1.3  நொடிகள் ஆகும்.
101 .தற்போது புதிதாக பத்தாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள் D .V .82 .ஆகும்.
102 .சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5812 கெல்வின் ஆகும்.
103 .சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு 14 ,95 ,97 ,900 கி.மீ. ஆகும்.
104 .சூரியன் பூமிக்கு அருகில் குளிர்காலத்தில் வரும்.
105 .எப்போதும் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே பூமியில் தெரியும்.
 
106 .இந்தியாவின் முதல் புகழ் பெற்ற வானவியல் அறிஞர் ஆரிய பட்டர்.
  107.இந்திய வானவியல் நிபுணர் பாஸ்கரா.
  108.பூமியை மையமாகக் கொண்டு, கோள்கள் மற்றும் சூரியன் சுற்றுகிறது எனக் கூறியவர் டாலமி.
  109.கோள்கள் சூரியனை நிளவட்டப் பாதையில் சுற்றுவதை கூறியவர் கெப்ளர்.
  110.சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை ஒன்பது.
  111.சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன். அதன் தூரம் 57 ,909 ,100 கி.மீ.
  112.தூரத்தை அளக்க வானவியலில் பயன்படுத்தும் அலகு ஒளி ஆண்டு, ஆஸ்ட்ரானமிகல் யூனிட்.
  113.ஒரு ஆஸ்ட்ரானமிகல் யூனிட் என்பது சுமார் 150 மில்லியன் கி.மீ.(149 ,60 ,0000 ) தூரம் ஆகும்.
  114.ஆஸ்ட்ரானமிகல் யூனிட் (A .U.) என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவை வைத்து உருவாக்கப் பட்டது.
  115.ஓர் ஒளி ஆண்டு என்பது ஓர் ஆண்டில் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.
116 .ஓர் ஒளி ஆண்டு என்பது 60,௦௦௦ A .U.  ஆஸ்ட்ரானமிகல் யூனிட்டுக்கு சமம்.
117 .சூரிய வெள்ளொளியில் உள்ள நிறங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.
118 .சந்திரனின் பரப்பை முதலில் தொலைநோக்கியால் கண்டவர் கலிலியோ.
119 .ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது 250 ஆண்டுகள் ஆகும்.
என அன்பன்,பரமேஸ் டிரைவர்-தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

சனி, 26 அக்டோபர், 2013

ஐசான் செய்திகள்-நாளிதழ்களில்

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் காண்க......

(1)மாலைமலர் செய்தி இது.
திருப்பூர், அக்.24-

வால் நட்சத்திரத்திலேயே மிகப்பெரிய வால்நட்சத்திரம் ஐசான் வால் நட்சத்திரமாகும். வருகிற நவம்பர் மாதம் 28–ந் தேதி மாதம் பூமியில் தெரியப்போகிறது.

ஐசான் வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21–ந் தேதி வான வியலாளர்கள் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோவிசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக் கொண்டே இதற்கு ஐசான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசான் வால் நட்சத்திரம் இதுவரை வந்த வால் நட்சத்திரங்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும் ஆகும். இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது சுமார் 470 கோடி ஆண்டுகள்.
இதன் வாலின் நீளம் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 கி.மீ. நவம்பர் மாதம் 22–ந் தேதி சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது.
அதன்பிறகு நவம்பர் 28–ந் தேதி பூமிக்கு மிக அருகில் வரப்போகிறதாம். ஐசான் வால் நட்சத்திரம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சூரிய குடும்பத்திற்குள் புதிதாக நுழைய உள்ளது. இந்த நட்சத்திரம் இப்போது பூமியில் தெரிய உள்ளது. இது ஒரு அரிய வானவியல் நிகழ்வாகும்.
டெலஸ்கோப் மூலம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துப் பகுதியினரும் கண்களால் பார்க்கக்கூடிய வால் நட்சத்திரம் இதுதான். இதே போன்ற வால் நட்சத்திரங்கள் தெரிந்தால் பாதகம் ஏற்படும் என்ற மூட நம்பிக்கை காலம் காலமாக மக்களிடையே இருக்கிறது.
இந்த மூட நம்பிக்கையை போக்கும் வகையில் மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் என்ற அமைப்பும், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பும் ஐசான் நிகழ்வை இந்தியா முழுவதும் மக்களிடையே கொண்டு சென்று அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன்படி ஐசான் என்ற வால் நட்சத்திரத்தை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ”ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்” என்ற பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாநில பயிற்சி முகாமை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் தேஜா மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து திருப்பூர் ஜெய் வாபாய் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடத்தியது.
அறிவியல் பிரசார ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஊட்டி ரேடியோ வானவியல் மையத் தலைவர் பேராசிரியர் மனோகரன் சிறப்புரையாற்றினார். பெங்களூரிலுள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முத்துமாரியப்பன் சூரிய குடும்பம் குறித்தும், கல்பாக்கம் அணு ஆற்றல் துறையைச் சார்ந்த விஞ்ஞானி பார்த்த சாரதி வால்நட்சத்திர அறிவியலின் வரலாறு குறித்தும் முன்னாள் அறிவியல் இயக்க செயலாளர் ராமலிங்கம் ஐசான் வால் நட்சத்திரம் குறித்தும் பேராசிரியர் மோகனா வானவியலும் ஜோதிடமும் குறித்தும் பேசினார்கள்.
ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கல்பாக்கம் அணு ஆற்றல் துறையை சார்ந்த விஞ்ஞானி பார்த்தசாரதி பேசும்போது கூறியதாவது:–
ஐசான் வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே ஒரு அழுக்கான பனிப்பந்தாகும். இது சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் ஊரட் மேகம் என்ற பகுதியிலிருந்து புதிதாக வருகிறது. ஆரம்பத்தில் இதற்கு வால் கிடையாது.
வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட வியாழன் கோளின் தூரத்தினை அடையும்போது சூரிய கதிர் வீச்சினால் இந்த பனிப்பந்து ஆவியாக ஆரம்பித்து வாயுக்களையும் தூசுகளையும் வெளியிட ஆரம்பிக்கிறது.
இவை சூரியனின் கதிர் வீச்சு அழுத்ததினால் சூரியனுக்கு எதிர்புறமாகத் தள்ளப்பட்டு வால் போன்ற தோற்றத்தை பெறுகின்றன. சூரியனுக்கு அருகே செல்லச் செல்ல சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு அழுத்தம் போன்றவை அதிகமாவதால் வாலின் நீளமும் பிரகாசமும் அதிகமாகும்.
ஐசான் வால் நட்சத்தி ரத்தை அக்டோபரில் இருந்து தொலை நோக்கி மூலம் காணலாம். நவம்பர் 2–வது வாரத்திலிருந்து அதிகாலை கிழக்கு அடிவான் அருகே இதனை நாம் வெறும் கண்களினால் காணலாம். நகர் புறங்களில் ஒளி மாசு அதிகம் இருப்பதாலும், கட்டிடங்கள் அடிவானை மறைப்பதாலும் பார்க்க கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
ஆனால் ஐசான் வால் நட்சத்திரத்தை கிராமப்புறப் பகுதிகளில் நன்கு காணலாம். அதன்பிறகு நவம்பர் 4–வது வாரத்தில் சூரியனுக்கு அருகே ஐசான் சென்றுவிடும். இதனால் இதை முழுவதுமாக காண முடியாவிட்டாலும் அதன் வாலின் ஒரு பகுதியைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐசானை உலகில் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. இது சூரியனை உரசிச் செல்லும் வால் நட்சத்திரமாகும். நவம்பர் 28–ந் தேதி ஐசான் சூரியனுக்கு மிக அருகில் சூரியனை உரசிச் செல்கிறது. அப்போது அதன் வெப்ப நிலை சுமார் 2000 டிகிரி செல்சியஸை (இரும்பின் உருகு நிலையை விட அதிகம்) அடையக்கூடும் .
சூரியனிலிருந்து அதன் தூரம் வெறும் 1.2 மில்லியன் கி.மீ. ஆதலால் சூரியனின் ஈர்ப்பு விசை ஐசானை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஐசானின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகின்றனர்.
அவ்வாறு தப்பிப் பிழைத்தால் டிசம்பர் மாதம் முதல் வார பிற்பகுதியில் ஒரு கண்ணைக் கவரும் வால் நட்சத்திரமாக ஐசான் வெளிப்படும். அது தொடர்ந்து ஜனவரி மாதம் 2–வது வாரம் வரை வெறும் கண்களுக்குத் தென்படும்.
தற்போது மணிக்கு 1 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இது நவம்பர் மாதம் 28–ந் தேதி மணிக்கு 13 லட்சம் கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றித் திரும்புகிறது.
இதன் அளவு அதிக பட்சமாக 6 கி.மீ.க்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐசானின் பாதை பூமியின் பாதைக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே, இந்த வால் நட்சத்திரம் பூமியில் மோதுவதற்கு அறவே வாய்ப்பு இல்லை.
வால் நட்சத்திரங்கள் எப்போது தோன்றும்? அவற்றிற்கு என்ன பாதைகள் உண்டு? என்பதையெல்லாம் அக்காலத்தில் மக்கள் அறிந்திருக்க முடியாது. எனவே அவை திடீரென வானில் தோற்றம் தருவதைக் கண்டு அவர்கள் அச்சம்கொண்டு அவற்றை தீய சகுனமாகக் கருதினர்.
தற்போது ஆண்டுதோறும் பல வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. கடந்த 400 ஆண்டுகளில் சுமார் 5000 வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 சிறு வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
எனவே இவற்றைப் பற்றி அச்சப்பட தேவையில்லை.கண்களுக்கு விருந்தளிக்க உள்ள ஐசான் வால் நட்சத்திரத்தை அச்சமின்றி அனைவரும் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.


(2)தி இந்து செய்தி
  
ஐசான் வால்நட்சத்திரத்தைக் காண்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை வானில் உலா வர இருக்கிறது ஐசான் வால்நட்சத்திரம். இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டு களிக்க, பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வால்நட்சத்திரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
ஐசான் வால்நட்சத்திரம் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த உதயன் 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
"செப்டம்பர் 2012ல் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) தான் இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தது. எனவே அதற்கு ஐசான் என்று பெயரிடப்பட்டது.
சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள 'ஊர்ட்' எனும் மேகப் பகுதியில் இருந்து வரும் ஒரு புதிய வால்நட்சத்திரம் இது. மேலும், பவுர்ணமி நிலவின் பிரகாசத்தை விட மிக அதிக பிரகாசமாக இந்த வால்நட்சத்திரம் இருக்கும் என்று நம்பப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
கடந்த 200 ஆண்டுகளாக நாம் பார்த்த வால்நட்சத்திரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இந்த ஐசான் வால்நட்சத்திரம். மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.
அதனால் அது சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.
இந்த வால்நட்சத்திரம் பூமியில் மோத வாய்ப்பு இல்லை. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த வால்நட்சத்திரம் வானில் புலப்படும்.
அப்போது தொலைநோக்கி, பைனாகுலர் போன்றவற்றின் மூலம் இதை நாம் காண முடியும். வெறும் கண்களாலும் இதை நாம் பார்க்கலாம்.
இந்த வால்நட்சத்திரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதைக் கண்டு களிக்க உதவும் விதமாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுக்க பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
சென்னையில், நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கடற்கரையில் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த வால்நட்சத்திரத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்க அறிவியல் இயக்கத்தின் தொண்டர்கள் உதவுவார்கள்". இவ்வாறு உதயன் கூறினார்.
Keywords: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஐசான் வால் நட்சத்திரம்.
 
(3) தின மணி செய்தி
 

நவம்பரில் ஐசான் வால்நட்சத்திரத்தை கண்டுகளிக்கலாம்

First Published : 24 September 2013 03:00 AM IST
வரும் நவம்பர் மாதத்தில் ஐசான் வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் கண்டுகளிக்கலாம் என திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கோவை தேஜா சக்தி மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி சார்பில் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த மாநில அளவிலான பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை துவங்கியது.
அறிவியல் கல்வி, பிரசார இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். தேஜா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் என்.ஜே.ஆர்.முனிராஜ், அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ. ஈசுவரன்,செயலாளர் ஸ்ரீரங்கன், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் அ.போஜன் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்.மணி துவக்கிவைத்தார்.
  ஐசான் வால்நட்சத்திரம் குறித்து ஊட்டி ரேடியோ வானியல் ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் பி.கே.மனோகரன் பேசியது:
 வால்நட்சத்திரம் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள். வால்நட்சத்திரம் பற்றிய புரிதல் இல்லாததால் பழங்காலத்தில் அதனை அபசகுணமாக அச்சமடைந்தனர். வால்நட்சத்திரம் வரப்போகுது என்றால் உலகத் தலைவர்களில் யாராவது மறையப்போகிறார்கள், நாட்டில் பஞ்சம் வரப்போகிறது என மக்கள் நம்பினர்.
 நவம்பர் மாதம் வரப்போகின்ற ஐசான் வால்நட்சத்திரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் வானவியலாளர் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோ விசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக்கொண்டே இதற்கு ஐசான்(ஐநஞச: ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ஞல்ற்ண்ஸ்ரீஹப் சங்ற்ஜ்ர்ழ்ந்) என்று பெயரிட்டுள்ளனர் என்றார்.
  இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின்(பெங்களூரு) விஞ்ஞானி சி.முத்துமாரியப்பன் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஒளி ஒலி காட்சி மூலம் விளக்கினார்.
ஐசான் நிகழ்வையொட்டி ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை  அவர் துவக்கி வைத்தார்.
 இது குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பார்த்தசாரதி கூறியது:
நவம்பர் 2-ஆவது வாரத்தில் ஐசான் வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதைப் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது.
 சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வை யாரும் பார்த்திருக்க முடியாது. பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
  செவ்வாய்க்கிழமையும் இது தொடர்பான பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
(4)தினமணி செய்தி இரண்டாவது செய்தியிட்டது.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்த பயிற்சிப்பட்டறை

First Published : 23 September 2013 02:22 AM IST
ஐசான் என்ற வால்நட்சத்திரம் குறித்த பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள் செவ்வாய்க்கிழமை இரு தினங்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆ.ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசான் என்ற வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் புதியதாக நுழைய இருக்கிறது. இதனுடைய வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நட்சத்திரம் மிகுந்த பிரகாசமானது. இப்படி மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் பூமியில் தெரிய இருக்கிறது.
இது ஒரு அறிய வானியல் நிகழ்வாகும். மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு இணைந்து ஐசான் நிகழ்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அறிவியல் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் செப்டம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 3 ஆசிரியர்கள் வீதம் 90 பேர், ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 25 பேர், கோவை தேஜா சக்தி கல்லூரி மாணவிகள் 25 பேர் என 150 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊட்டியில் உள்ள ரேடியோ வானவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் பி.கே.தினகரன் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானி(பெங்களூரு) முத்துமாரியப்பன் தொடங்கி வைத்து, சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றி சிறப்புரையாற்றுகிறார்.
வால்நட்சத்திரத்தின் வரலாறு குறித்து கல்பாக்கம் அணுமின்  நிலையம் எஸ்.பார்த்தசாரதி, வானவியலும் சோதிடமும் குறித்து பேராசிரியர் சோ.மோகனா, ஐசான் வால்நட்சத்திரம் குறித்து சென்னை சி.ராமலிங்கம், மதுரை எல்.நாராயணசாமி சூரிய குடும்பம் குறித்து ஒளி, ஒலி காட்சி மூலமாக விளக்க உள்ளனர்.
திங்கள்கிழமை இரவு 7 முதல் 10 மணி வரையிலும் 24-ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் டெலஸ் கோப் மூலமாக வான் நோக்கல், வால் நட்சத்திரம்(ஐசான்) குறித்து விளக்கப்பட உள்ளது. மாவட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐசான் வால் நட்சத்திரம்-பெயர் காரணம்.

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
             ஐசான் வால் நட்சத்திரம் பெயருக்கான காரணம் இங்கு பதிவு செய்துள்ளோம்.கண்டுணர்க.

ஐசான் (வால்வெள்ளி)

C/2012 S1
ISON Comet captured by HST, April 10-11, 2013.jpg 2013 ஏப்ரல் 10-11 இல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியூடாக எடுக்கப்பட்ட சி/2012 எஸ்1 இன் படம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): 04-மீ தெறிப்பியைக் கொண்டு
வித்தாலி நெவ்ஸ்க்கி,
அர்த்தியோம் நவிச்சோனக்
(உருசியா)
ஆகியோர்
கண்டுபிடித்த நாள்: 21 செப்டம்பர் 2012
சுற்றுவட்ட இயல்புகள் 
Epoch: 14 டிசம்பர் 2013
(யூநா 2456640.5)
ஞாயிற்றண்மைத் தூரம்: 0.01244 வாஅ (q)
மையப்பிறழ்ச்சி: 1.0000020
சுற்றுக்காலம்: வெளியேற்றப் பாதை (epoch 2050)
சாய்வு: 62.39°
அடுத்த அண்மைப்புள்ளி: 28 நவம்பர் 2013

சி/2012 எசு1 (C/2012 S1, ISON) அல்லது ஐசான் வால்வெள்ளி என்பது சூரியனைச் சுற்றிவரும் ஒரு வால்வெள்ளியாகும். இது 2012 செப்டம்பர் 21 அன்று பெலருசைச் சேர்ந்த வித்தாலி நெவ்ஸ்கி, உருசியாவைச் சேர்ந்த ஆர்த்தியோம் நோவிசோனக் ஆகியோரால் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்க்கு பன்னாட்டு அறிவியல் ஓளிமப் பிணையத்தில் உள்ள 0.4 மீட்டர் (16") பிரதிபலிப்பு தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டது. இதன் உட்கரு 5 கிலோமீட்டர் (3.1 மைல்) விட்டமுடையது என கணிக்கப்பட்டுள்ளது.

பெயர்க் காரணம்

இவ் வால்வெள்ளிC/2012 S1, ISON என்று பெயர் பெற காரணம் உண்டு.
பெயரின் பகுதி காரணம்
C காலமுறையரற்ற(non-periodic) வால்வெள்ளி
2012 கண்டுபிடிக்கபட்ட ஆண்டு
S செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதி (half-month)
S1 செப்டம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி
ISON சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) - வால்வெள்ளி கண்டுபிடிக்க பட்ட இடம்.

சிறப்பம்சங்கள்

சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள ஊர்ட் எனும் மேகப் பகுதியில் இருந்து இவ்வால்வெள்ளி வருகிறது.கடந்த 200 ஆண்டுகளில் பூமி கண்ட வால்வெள்ளிகள் யாவும் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இவ்வால்வெள்ளி.. மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது. அதனால் அது சூரியக் குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.
Orbital position of C/2012 S1 on 11 December 2013 after perihelion.
Visualization of the orbit of comet ISON as it moves into the inner Solar System in 2013.
 
நன்றி;-தமிழ் விக்கிப்பீடியா.ஆர்க்.
  http://ta.wikipedia.org.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-கருத்தாளர் பயிற்சி முகாம்

மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.
          தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி-வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

    ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய மாவட்ட அளவிலான கருத்தங்கு அழைப்பிதழ் காண்க.
           

சனி, 14 செப்டம்பர், 2013

21-வது NCSC வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்-2013

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் சார்பாக - சத்தியமங்கலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மேல்நிலை பள்ளியில், 21-வது  NCSC -வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் விவரம் இங்கு காண்போம்.
               
              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தியமங்கலம் 
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   
             இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீராகவேந்திரா  மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக 21 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது.


              இந்த பயிற்சி முகாமிற்கு திரு.உமாசங்கர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை நிகழ்த்தினார்.




                    திரு.சண்முகநாதன் PRO அவர்கள் ஸ்ரீராகவேந்திரா மேல்நிலை பள்ளி -சத்தியமங்கலம் .முன்னிலை வகித்து முன்னுரை நிகழ்த்தினார்.
  

              திரு.S.C.நடராஜன் -சுடர் தொண்டு நிறுவன இயக்குனர் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.


        முனைவர்.N.மணி அவர்கள்,மாநில தலைவர்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.மற்றும் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் .துவக்கவுரை நிகழ்த்தி கருத்துரை வழங்கினார்.
      

                  திருமதி.K.காந்திமதி அவர்கள் NCSC மாவட்ட ஒருங்கிணைப்பாளர் -தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பு.National Childrens Science Congress அறிமுகவுரை நடத்தினார்.
          
                  துளிர் இல்லம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களை முனைவர் .நா.மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநில தலைவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

                திரு.தாமரை செல்வன் அவர்களை திரு.நடராஜ் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து காகிதக்கலை பற்றிய செய்முறைகளுக்கு அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

      
      கடந்த கால NCSC மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்து அதன் பலனை அந்த மாணவர்கள் அனுபவிக்கும் வாய்ப்புகளை பற்றி விளக்குகிறார் .




        NCSC -பயிற்சி கொடுக்கும் அறிஞர் ஒருவர்.


     திரு.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட செயலாளர்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் திரு.உமாசங்கர் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம்-முன்னாள் தலைவர் அவர்களும் பயிற்சி நிகழ்வை பார்வையிடும் காட்சிங்க!.
   


               நன்றியுரை;- திரு.C.பரமேஸ்வரன்- அவர்கள் தலைவர்  -தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.இந்த வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமிற்கு ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுபது பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
     விண்ணப்பம் கொடுக்க வேண்டிய கடைசி தேதி; 30-செப்டெம்பர்-2013.
  விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி;-
             திருமதி.K.காந்திமதி அவர்கள்,
            W/O முனைவர்.N.மணி அவர்கள்,
          59/1K.K.நகர்,
சென்னிமலை ரோடு,
ஈரோடு-638009
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி# 9443983977
   அல்லது விண்ணப்பம் நேரில் கொடுக்க வேண்டிய முகவரி;-
                 திரு.சக்ரவர்த்தி அவர்கள்,BRT மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டத்தலைவர்.RMSA அருகிலுள்ள ஈரோடு BRCஆபீஸ்.
மேலும் கூடுதலான தகவல்களுக்கு அணுக வேண்டிய அலைபேசி எண்கள்;-
(1)திரு.உமாசங்கர் அவர்கள்-94424471633 
(2)திரு.R.M.சுப்ரமணியம் அவர்கள்-9442930360
           ''ஆற்றல்'' பற்றிய கூடுதல் தகவல் ஆங்கிலமொழியில் பெற www.ncsc2010tnsf.blogspot.com என்ற வலைப்பக்கம் செல்க.மற்றும்
www.tnsferode.blogspot.com வலைப்பக்கம் செல்க.   
                        பதிவேற்றம்=சி.பரமேஸ்வரன்-
                        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                     தாளவாடி -ஈரோடு மாவட்டம்.