திங்கள், 24 பிப்ரவரி, 2014

அரசு பேருந்தில் முன் டயர் வெடிப்பு-

Parameswaran Driver shared Kandh Praba's புகைப்படம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைங்க!இது???????!!!!!!!!..இது மட்டுமல்ல! பேருந்தின் கொள்ளளவுக்கும் அதிகமாக பயணிகளையும்,பள்ளிக்குழந்தைகளையும்,இலவச பயண அனுமதியாளர்களையும் ஏற்றிக்கொண்டு,மலைப்பாதையில்,ஹெல்பருக்காக பொருத்தப்படும் ஹெல்பர் ஸ்பிரிங் அசெம்பிளியோ,ஸ்பிரிங் மெயின்லீப் 180 டிகிரிக்கும் அதிகமாக சுழலாமல் இருக்க பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் ரப்பர் ஸ்டாப்போ,ஷேக் அப்சர்பரோ,இல்லாமல்(வாகன தயாரிப்பாளர் பொருத்தி அனுப்புகின்றனர் அது வேறு விசயம்) ஐம்பத்தைந்து நபரை மட்டுமே தாங்கும் தகுதியுள்ள பேருந்தில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அபாயமான நிலையில் ஓட்டுனரும்,நடத்துனரும் உயிரை பணயம் வைத்து பயணிக்கையில் முன் இடது ஸ்பிரிங் அசெம்பிளி பாரம் தாங்காமல் அதே சமயம் பாதுகாப்பில்லாத ஸ்பிரிங் மெயின் லீப் சுழல் கோணம் அதிக அளவு ஏற்பட்டு அதனால் நடுப்பகுதி உடைவு ஏற்பட்டு ஓட்டுனர் சாமார்த்தியத்தால் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தும் கிளை நிர்வாகம் ஸ்பிரிங் லீப் எந்த பகுதி உடைந்தது என்று குறிப்பிடாமல் பொதுவாக ஓட்டுனர் உடைத்துவிட்டார்? என்று புகார் கொடுத்து அதற்கான தண்டனையும் அதாவது ஓட்டுனர் கவனக்குறைவாகவும்,ஆஜாக்கிரதையாகவும்,அதிவேகமாகவும்? (பேருந்து அளவான பயணிகள் ஏறினாலே இஞ்சின் இழுவைத்திறன் குறைந்து அதனால் முதல் கியரிலேயே ஓட்டும்நிலை அது வேறுவிசயம்) சாலையின் தன்மைக்கேற்ப இயக்காததே உடைவிற்கு காரணம் என சரியாக விசாரிக்காமல் நீதி வழங்கி தண்டனையும் கொடுத்துள்ளது.இந்த நிர்வாகம்.அதுபேலவே முன் டயரு வெடிப்பிற்கும் காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவு,அதிவேகம் காரணமாக என்று குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிப்பார் ஓட்டுனர்.இதற்காகவே சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சமூக ஆர்வலர்கள்,சட்ட வல்லுனர்கள்,நீதியரசர்கள்,நெடுஞ்சாலைத்துறையினர்,ஓட்டுனர்,நடத்துனர்,போக்குவரத்து துறை அதிகாரிகள்,தொழில் நுட்ப பணியாளர்கள்,வாகன முதலாளிகள்,வாகன தயாரிப்பாளர்கள்,இயந்திரப்பொறியாளர் குழு,உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள்,விபத்து ஆய்வறிக்கை குழு,கல்வித்துறை சார்ந்தவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்ந்தவர்கள்,தினசரி பயணிக்கும் மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பொது விவாதம்,கருத்துக்களம், பொதுமக்கள் மத்தியில் நடத்த வேண்டும் உண்மைநிலை வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.ஒத்துழைப்போமா?
சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து TN33-2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,
ஓட்டுனரின் திறமையால் எந்த வித சேதமுமின்றி
பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று டயர் பொருத்தி இயக்கப்பட்டது.
இதில் அதிசயம் என்னவென்றால் வெடித்த டயர் Original Radial ஆகும்.
அது என்ன Radial என்கின்றீர்களா?
Nylon நூலுக்குப் பதிலாக Steel கம்பிகள் கொடுத்து தயாரிக்கப்படுவது Radial
டயர் ஆகும்.
Nylon டயரை விட அதிக தரம் வாய்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துத் கழகதில் அதிகமாக Radial டயர் வாங்கி பொருத்தப்படுகிறது.
அட இதில் தவறு என்ன?வினோதம்என்ன?. என்கிறீர்களா?.
அட Steel கம்பிகள் பொருத்தப்பட்ட புதிய Radial டயர் வேட்டுக்கிளப்பியது
மட்டுமல்ல வினோதம்.
{பிரச்சனை என்னவென்றால் வேட்டுக்கிளப்பிய Radial டயரில் மருந்துக்குக்கூட
Steel கம்பியோ வேறு எதுவுமோ கொடுக்கப்படாமல் முழுக்கமுழுக்க ரப்பரை மட்டுமேகொண்டு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சப்ளை செய்யப்பட்டதுதான். }
ம் -என்றால் மெமோ, ஆ-என்றால் தண்டனை கொடுக்கத்
தயங்காத போக்குவரத்துக்கழகஅதிகாரிகள்
மேற்கண்ட டயரை என்ன தர ஆய்வு செய்து வாங்கினார்களோ!!
[என்ன சிதம்பர இரகசியமோ!!]
யாருக்கு தண்டனையோ? யார் கண்டது?.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறுபதம்.

thanks-- www.ttsftnstc.blogspot.in

www.ttsftnstc.blogspot.in/2014/02/blog-post.html

======================================
  • நீங்கள் மற்றும் Pudumai Balakrishnan இருவரும் இதனை விரும்புகிறீர்கள்.
  • Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இந்த நிலை TN33-N2623 பேருந்திற்கு மட்டும் இல்லைங்க.ஏறக்குறைய அனைத்து பேருந்துகளுமே இதே கதியில்தாங்க ஓடுகிறது..மக்களுக்காக ஓட்டும் பேருந்து மக்களையல்லவா பலிவாங்குகிறது.எறியப்பட்டவரை குற்றம் சாட்டாமல் எய்தவர்கள் உணர வேண்டும்.
  • Pudumai Balakrishnan பணி மனை என்ன செய்கிறது? ஒரு வாகனத்தில் குறிப்பிட்ட பழுது ஏற்பட்டால் அதைக் குறிப்பிட்டு பழுது மனையில் விட்டு சீர் செய்யவேண்டுமே! இது போன்ற பிரச்சினைகளுக்கு சங்கம் போராடுவதில்லை; ஏன்! நல்ல பகிர்வு!
  • Parameswaran Driver மரியாதைக்குரிய ஐயா,எனது பணியின்போது நடந்த நிகழ்வுதாங்க,முன் ஸ்பிரிங் பட்டை உடைந்த நிகழ்வு.அதில் அந்த ஸ்பிரிங் பட்டைக்கு பாதுகாப்பான உபரி பாகங்கள் எதுவுமே இல்லைங்க.நடுப்பகுதி உடைந்து உள்ளது என்று குறிப்பிட்டு பதில் கொடுத்தேன்.அதற்கு ஏற்க முடியாது.ஓட்டுனரே பொறுப்பு என்று உத்தரவு பெற்றேன்.கழகத்தின் உள்ளக விசாரணை நடுநிலையிலிருந்து தவறிவிட்டது? என்பதே எனது குற்றச்சாட்டு.அடுத்து வற்புறுத்தி என் மீது எழுதி வாங்கப்பட்ட புகார் எழுதி அனுப்பிய திரு.பொறியாளர் அவர்கள் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்.அதற்காகவே அதனை அந்த பிரச்சனையை முடித்துக்கொண்டேன்.(பயணிகளையும்,பள்ளிக்குழந்தைகளையும் காப்பாற்றிய உள்மனது உணர்வோடு) தங்கள் மேலான சிந்தனைக்கு..ஸ்பிரிங் அசெம்பிளி நடுப்பகுதி உடைவது ஓட்டுனரே முழு காரணம் என்கின்றனர் இங்குள்ள நிர்வாகத்தினர்.(அதேபோல ஆயுட்காலம் எதுவுமே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்குமாம்.என்ன வேடிக்கை பாருங்கள்.) அதேபோல் உள்ளக விசாரணையாளர்கள் உண்மைநிலை ஆராய்வதில்லைங்க!.அதேபோல் அதிகாரிகளின் பணிவிரோத செயல்களில் ஈடுபட ஒத்துழைப்பு கொடுக்காத தொழிலாளர்கள் பலிவாங்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் ஒரே தீர்வு அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி உண்மை நிலை அறிய வேண்டும் .என்கிறேன்.தங்களது கருத்து தெரிவியுங்கள்.நன்றிங்க.
     

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

தமிழில் தட்டச்சு செய்ய தமிழ்'99 முறையே சிறந்தது.

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.
              சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இணையத்தில் தமிழில் எழுத எளிமையான வழி தமிழ்'99 முறை தட்டச்சுதாங்க.கீழே உள்ள இணைய எழுதி என்னும் கட்டத்தை ஒரு கிளிக் செய்யுங்கள்.தோன்றும் இணைய விசைப்பலகையில் தட்டச்சு செய்து காப்பி மற்றும் பேஸ்ட் செய்யுங்கள்.















                       

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

நமது பயன்பாட்டின்வேதிப்பொருட்களில் சில.

மரியாதைக்குரியவரே, 
             வணக்கம்.
                   கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம், 
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் சிலவற்றின் வேதியியல் பெயர்கள்:
நீர்த்த சுண்ணாம்பு - Calcium Hydroxide
பிளீச்சிங் பவுடர் - Calcium Oxychloride
காஸ்டிக் சோடா - Sodium Hydroxide
கல் உப்பு – Sodium Chloride
எப்சம் - Magnesium Sulphate
ஜிப்சம் - Calcium Sulphate
வினிகர் - Acetic Acid
பேக்கிங் பவுடர் - Sodium Bicarbonate
வாஷிங் சோடா - Sodium Carbonate
வெள்ளை சர்க்கரை- Sucrose

ஹேர்... டை எச்சரிக்கை

மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம்.  
                         சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.ஹேர்... டை எச்சரிக்கை...தலைக்கு ஆபத்து
                                   தலைக்கு அடிக்கிற மயிர் சாயத்தால்  உடல் எப்படி பாதிக்கும்னுசந்தேகப்படுறீங்களா?
ஹேர்டை ல இருக்கிற ரசாயன பொருட்கள் மயிர்க்கால்கள் வழியே ரத்தத்தில் கலந்து அதனால் உடல் உறுப்புகளை பாதிக்குமாம்..
வெயில்ல போறப்ப தோல் பகுதி அலர்ஜியாகும் என்கிறார்கள்.
  முகத்தில் கருப்பு விழுறதுனு நிறைய பேரை பாத்ருக்கேன் நான்.. இயற்கையை இயற்கையா வளர விடுங்களேன்.. நரை விழுந்தால் என்ன

ஆல்கஹால்.....எச்சரிக்கை

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
             சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !
இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது. ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது. இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

2.அதிக இரத்த அழுத்தம் :
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

3.அதிக எடை :
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

4.இதய நோய் :
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

5.அனீமியா :
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

6.மன அழுத்தம் ;
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

7.மூட்டு வலி :
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

8.கணைய பாதிப்பு :
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

9.நரம்பு பாதிப்பு :
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.

செல்போன் வரலாறு-

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  மொபைலின் முழு வரலாறு இதுதான்...!
இன்றைக்கு மொபைல் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் அனைவரும் லேன்ட்லைன் போனில் ஹலோ ஹலோனு கத்திக் கொண்டு இருந்திருப்போம்.

மேலும் லேன்ட்லைன் போனின் பில்லை பார்த்து மயக்கம் அடைந்தவர்கள் ஏராளம் உண்டு தமிழ்நாட்டில்.

அவையனைத்தையும் இன்று உடைத்து லேன்ட்லைன் என்றால் என்ன என்று கேட்கப் போகும் தலைமுறை வர இன்னும் தூரமில்லை எனலாம் இதற்கு முதற்காரணம் மொபைல் தான்.

இன்று ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920
இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது

1947
ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1955
காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1969
பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973
மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979
ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983
டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984
விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989
மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990
2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991
அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992
மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996
மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997
எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000
இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001
வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002
டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.

2004
மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006
மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007
ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2008
டச் ஸ்கிரின் மொபைல் வந்து கலக்கியது.

2010
ஆண்ட்ராய்டு மொபைல் உலகை தனதாக்கியது.

2014
எதிர்கால தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு மொபைல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள் :-

 மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம் சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

சனி, 15 பிப்ரவரி, 2014

ATM எனப்படும் Automatic Teller Machine-


மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



     ATM எனப்படும் Automatic Teller Machine-ஐ  கண்டுபிடித்த இந்தியர்.
            ATM-ஐ முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இவர் ஒரு இந்தியரும் ஆவார்.. இந்த ATM இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன். வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.
                           1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ATM முதல் முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது. ஆறு இலக்கம் கொண்ட ”PIN ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” PIN ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன். இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

தேங்காய் எண்ணையே இல்லை

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.
               சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது .. கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை

சர்க்கரை நோயும்-இயற்கை மருத்துவமும்.

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

சர்க்கரை நோயும்... இயற்கை மருந்தும்...
1. மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாத நோய்களுக்கு ஒரே மருந்து இயற்கை மருந்து தான்.

சர்க்கரை நோயாளிகள் காலை 2, மதியம் 3, இரவு 4 மாத்திரைகள் என தினந்தோறும் மருந்து சாப்பிட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஒரு இயற்கை மருந்து முருங்கை சாறு. சர்க்கரை நோயாளிகள் முருங்கை கீரை சாறை 20 மிலி அளவு தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

2. சர்க்கரை நோயாளிகள் பலவிதமான மாத்திரைகள் சாப்பிட்டும் நோயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

முருங்கை கீரையை பொரியல் செய்து அதில் எள்ளு பிண்ணாக்கு தூள் ஆகியவற்றை கலந்து உணவில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

இதில் தேவைக்கு தக்கவாறு, நோய்க்கு தக்கவாறு உணவை எடுத்துக்கொள்ளவும். உணவு முறையை முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.

3. சர்க்கரை நோயாளிகள் பகல், இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டிருப்பார்கள். இதனால் இரவில் தூக்கம் கெடும். அதிக தொந்தரவு ஏற்படும்.

இதற்கு ஒரே தீர்வு முருங்கை பிசின், ஆவாரம் பிசின் ஆகியவற்றை சமஅளவில் தூள் செய்து காலை, மாலையில் நோய்க்கு தக்கவாறு பசும் பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இதை சாப்பிட்டு வரலாம். இதனால் அடிக்கடி சிறுநீர் போவதை கட்டுப்படுத்தலாம்.

தயிரிலுள்ள சத்துக்கள்.

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்..சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.
* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்....

கண்தானம் செய்வது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
                    சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கண் தானம் பற்றி இந்த பதிவில் கண்போம்.

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1. ஒருவர் இறந்த 4&6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20&30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.