சனி, 15 பிப்ரவரி, 2014

ATM எனப்படும் Automatic Teller Machine-


மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



     ATM எனப்படும் Automatic Teller Machine-ஐ  கண்டுபிடித்த இந்தியர்.
            ATM-ஐ முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இவர் ஒரு இந்தியரும் ஆவார்.. இந்த ATM இயந்திரம் உருவான கதை சுவராஸ்யமானது. ஒரு நாள் அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது,வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார் பாரன். வீடு திரும்பிய பாரன் குளிக்க சென்றார்.குளித்துகொண்டிருந்த பாரனுக்கு,இன்றைக்கு அவசரதேவைக்கு பணம் எடுக்கமுடியாமல் போனதைப் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சிந்தனையின் போது உதித்ததுதான் இந்த ஏ.டி,எம், இயந்திரம்.
                           1967-ம் ஆண்டு ஜூன் 27 அன்று வடக்கு லண்டனில் “பார்கிளேஸ் வங்கியில்” பாரன் உருவாக்கிய ATM முதல் முதலில் நிறுவப்பட்டது. ரசாயனக் குறி இடப்பட்ட சிறப்புக் காசோலையையும்,ஆறு இலக்கம் கொண்ட ” பின் ” எண்ணையும் கொண்டு அந்த இயந்திரத்தில் இருந்து பணம் பெற முடிந்தது. ஆறு இலக்கம் கொண்ட ”PIN ” நம்பரை நினைவில் வைத்துக்கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது, எனவே அதை 4 இலக்கம் கொண்ட எண்களாக மாற்றி தாருங்கள் என்று மனைவி ”கரோலின்” கூறியதை ஏற்று,ஆறு இலக்கம் கொண்ட ” PIN ” நம்பரை நான்கு இலக்கமாக குறைத்தார் பாரன். இத்தனைக்கும் சொந்தக்காரரான ”ஜான் ஷெப்பர்ட் பாரன்” இந்தியாவில் ஷில்லாங்கில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக