சனி, 22 ஆகஸ்ட், 2015

தொல்காப்பிய மன்றம் பாரீஸ் நகரில் உதயம்.

தொல்காப்பிய மன்றம் என்னும் பன்னாட்டு அமைப்பு 
                           பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உதயம்-2015

     உலக தொல்காப்பிய மன்றத்தை    tolkappiyam@gmail.com  
                                      என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம். தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்புகளை உலகெங்கும் பரப்ப தொல்காப்பிய மன்றம் என்னும் புதிய அமைப்பு சமகால தமிழ்ச்சான்றோர்களால் துவக்கப்பட உள்ளது.நமது எல்லோருக்கும் பெருமை.. செய்தி வெளியிட்ட 2015ஆகஸ்டு 23 ந் தேதியிட்ட தி இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றிங்க..

பேராசிரியர் மு.இளங்கோவன்
பேராசிரியர் மு.இளங்கோவன்
             தொன்மைமிகு தொல்காப்பியத் தின் சிறப்புகளை உலகெங்கும் பரப்புவதற்காக ’தொல்காப்பிய மன்றம்’ என்ற அமைப்பு பாரீஸில் அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 27-ம் தேதி தொடங்கப்படுகிறது.
தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு மழவை மகாலிங்க ஐயர் முதன் முதலில் மாற்றினார்.
அமைப்பு ரீதியாக..
                 தமிழின் சிறப்புகளைச் சொல் லும் தொல்காப்பியம் குறித்து தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு இன்னமும் சரியான புரிதல் இல்லை. திருக் குறள், சிலப்பதிகாரம், கம்பராமா யணம் அளவுக்கு அமைப்புரீதி யாக தொல்காப்பியம் பிரபலப்படுத் தப்படவில்லை. இந்தக் குறையை போக்குவதற்காகவே அடுத்த மாதம் லண்டனில் ’தொல்காப்பிய மன்றம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.இதன் முன்னோட்டமாக, 
 தொல்காப்பிய மன்றத்தின் இணையதள முகவரி தொடக்க விழா புதுச்சேரியில் நடைபெற்றது. 

               தொல்காப்பிய மன்றத்தின் இந்திய பொறுப்பாளராக புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

             அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ் இலக்கண பெருமை சொல் லும் தொல்காப்பியத்தின் மகத்துவம் தமிழர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. தொல்காப்பியத்தை வலைத்தளத்தில் பதிவேற்றி அனைவரும் அதை எளிதில் படிக்க வேண்டும் என்பதற்காக, ஓலைச் சுவடியில் இருந்த தொல்காப்பியத்தையும் அதன் பிற பதிப்புகளையும் டிஜிட்டலைஸ்டு செய்து வைத்திருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் 
                         நான் கலந்து கொண்ட கருத்தரங்கில் சிவச்சந்திரன் என்ற பெரியவர் துண்டறிக்கை ஒன்றை விநியோகம் செய்தார். அதில் தொல்காப்பியத்தின் நான்கைந்து நூற்பாக்கள் அச்சிடப்பட்டிருந்தன. விசாரித்ததில், ’தொல்காப்பியத்தை அனைவரிடமும் கொண்டு செல் வதற்காக இப்படிச் செய்கிறேன்’ என்றார் பெரியவர்.

            அவரது வீட்டில் இருந்த தொல்காப்பியம் சம்பந்தப்பட்ட நூல்களைப் பார்த்து விட்டு பிரமித்துப் போய்விட்டேன். தொல்காப்பிய மன்றம் தொடங்கும் யோசனை அங்குதான் உதித்தது.

                    தொல்காப்பிய கருத்துக்களை எளிமையான வடிவில் சாமானியர் களிடமும் தமிழே படிக்காத பொறி யாளர்கள், மருத்துவர்கள் உள்ளி டோரிடமும் கொண்டு சேர்ப்பதும் தான் இந்த மன்றத்தின் முக்கிய நோக்கம். இதில் தமிழறிந்த அனை வரும் இணையலாம்.

             பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்த பன்னாட்டு அமைப்பின் தொடக்க விழா பாரீஸில் வரும் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணை நின்றவர்களையும் அறிஞர் குழு அடையாளம் கண்டு ஆண்டு தோறும் அவர்களுக்கு மலேசிய தொல் காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது பெயரில் விருது வழங்கப்படும்.
 
மூதறிஞர் குழு
               பொற்கோ (சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்), பேராசிரியர் கு.சிவமணி, பேராசிரி யர் அ.சண்முகதாஸ் (இலங்கை), இ.பாலசுந்தரம் (கனடா), சுப. திண் ணப்பன் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் சித்தார்த்தன், ம.மன்னர் மன்னன் (மலேசியா), பேராசிரியர் இ. மறை மலை, ஜீன் லாக் செவ்வியார் (பிரான்சு), சு. அழகேசன், புலவர் பொ.வேல்சாமி, சு. சிவச்சந்திரன் (லண்டன்) ஆகியோர் இந்த மன்றத்தின் மூதறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்.

              தொடக்க விழாவின்போது, முதல் கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, இங்கிலாந்து, சவுதி அரேபிய நாடுகளின் பேராசிரி யர்கள் பங்கேற்று கலந்துரையாடு கின்றனர். 

         உலக தொல்காப்பிய மன்றத்தை 
 tolkappiyam@gmail.com 
             என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

                     உலக அளவிலான மன்ற பொறுப்பாளர்களாக கி.பாரதிதா சன் (பிரான்ஸ்), மு.இளங்கோவன் (இந்தியா), ஆம்பூர் மணியரசன் (ஜெர்மனி), ஹரிஷ் (இங்கிலாந்து), சந்தன்ராஜ் (சிங்கப்பூர்), வாணன் மாரியப்பன் (மலேசியா), அர வணைப்பு கு.இளங்கோவன் (குவைத்), பழமலை கிருஷ்ண மூர்த்தி (குவைத்), த.சிவபாலு (கனடா), சுரேஷ் பாரதி (சவுதி), அருள் பாலாசி வேலு (தைவான்), அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா), தி.நா.கிருஷ்ண மூர்த்தி (அந்தமான்) ஆகியோர் செயல்பட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

google science forum -கூகுள் அறிவியல் இயக்கம்- சத்தியமங்கலம்.

          எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
                                                                                 -திருக்குறள் 110    


              எங்களுடன் இணையுங்க,தங்களுடைய ஆதரவைக்கொடுங்க....
மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம். கூகுள் நிறுவனத்தின் அளப்பரிய இலவச சேவைகளினால் இன்றைய காலத்தில் கடைநிலையிலுள்ள  சாதாரண மனிதனும் கணினி மற்றும் மின்னணு தொழில்நுட்பங்களை கற்கவும்,பயன்படுத்தவும் முடிந்தது.
          இதன் தொடர்ச்சியாக -
இருபால் மாணவர்கள், இளைய சமூகம்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்  
           கணினி மற்றும் மொபைல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடு போன்ற தகவல் தொடர்பு சார்ந்த பயனுள்ள பல விசயங்களை  INTERNET TAMIL FRIENDS SATHY - தமிழ் இணையதள நண்பர்கள் என்ற பெயரில் செயல்பட்ட வலைப்பதிவின் பெயரை 2015 ஆகஸ்டு 8ந் தேதி இன்று முதல்
'' GOOGLE SCIENCE FORUM-கூகுள் அறிவியல் இயக்கம்'' 
           என்று பெயர் மாற்றப்பட்டு சமூகநலனுக்கான தகவல்களை வெளியிட்டும் , இயக்கங்கள் நடத்தியும் கூகுள் நிறுவனத்திற்கு நன்றி செலுத்த உள்ளோம். 
       இந்த தளத்தில் தாங்களும் இணைந்துகொண்டு  மேலான ஆதரவையும் ஆலோசனைகளையும் கொடுத்து உதவுங்கள் என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  
சமூக நலன் கருதி 
உங்களது அன்பன் 
C.பரமேஸ்வரன்.செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.
 (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
சத்தியமங்கலம் ,
ஈரோடு மாவட்டம். 
தமிழ்நாடு.638402
http://googlescienceforum.blogspot.com,
 http://consumerandroad.blogspot.com,
http://konguthendral.blogspot.com,
http://paramesdriver.blogspot.com.
E - MAIL paramesdriver@gmail.com


   இன்று வரை பார்வையிட்டவர்கள் 17616