செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம்-2012

20 February, 2012




                                            
அன்பு நண்பர்களே,

     tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.

   நமது இந்திய நாடு முழு எழுத்தறிவு பெற்ற நாடு என்ற நிலையை அடைய மைய அரசு பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.இவ்வகையில் உலக எழுத்தறிவு நாளான 08-09-2009 அன்று நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு டாக்டர்.மன்மோகன்சிங் அவர்கள் ''கற்கும் பாரதம்''-2012  SAAKSHAR BHARATH-2012 என்ற புதிய எழுத்தறிவுத்திட்டத்தினைத் துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் மகளிர் எழுத்தறிவு (Adult Female Literacy Rate) 50 சதவீதத்திற்கும் குறைந்து காணப்படும் மாவட்டங்களில் செயல்பட்டு மார்ச்-2012க்குள் எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,தொழிற்கல்வி மற்றும் தொடர்கல்வி அளித்து அவர்தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

   அகில இந்திய அளவில் கற்கும் பாரதம் திட்டம் குறித்த எழுத்தறிவு விழிப்புணர்வு கலைப்பயணம் பிப்ரவரி 20-ந்தேதி { இன்று துவக்கவிழா ஈரோடு மாநகராம் பகுத்தறிவுப் பகலவன், ஈ.வெ.ரா.பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் சொந்த இல்லத்தில் நடைபெற்றது.      



  

   தேசிய கலைப்பயணத்தை துவக்கிவைக்க வருகை தரும் மாணபுமிகு.S.காந்தி செல்வன்-குடும்பநல மற்றும் சுகாதார மத்திய இணை அமைச்சர் அவர்களை வரவேற்றனர்.
   கோலாட்டம் மற்றும் மேளதாளக் கலைக்குழுவினர்.

    துவக்கவிழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை செலுத்தும் காட்சி.

     கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் துவக்கவிழாவில் வரவேற்புரை மற்றும் துவக்கவுரை வழங்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் திருமிகு. Dr.N.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.அமர்ந்திருப்பவர்கள்.திருமிகு.M.அண்ணாதுரை,அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு) . திருமிகு.R.மணி அவர்கள்-மாவட்டத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு. திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள்,இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்கம்.புதுடெல்லி.மாண்புமிகு.S.காந்தி செல்வன்,மத்திய இணைஅமைச்சர் அவர்கள்,குடும்பநலம் & சுகாதாரம்.மேலே உள்ள படம்.
   
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு. பேரா.Dr.N.மணி அவர்கள் மாநிலத்தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தமிழ்நாடு.மேலே உள்ள படம்.
   
       மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருமிகு.பேரா.Dr.G.பாண்டே அவர்கள் இயக்குனர்,வயதுவந்தோர் கல்வி இயக்ககம்.மேலே உள்ள படம்.
மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் குடும்பநலம் & சுகாதாரம் அவர்கள் SAAKSHAR BHARAT என்னும் கற்கும் பாரதம் தேசிய கலைப்பயணத்தினை துவக்கி வைத்து உரையாற்றுகையில் இந்த திட்டத்தினை அனைவரும் பயன்படுத்தி எழுத்தறிவு,எண்ணறிவு,சமநிலைக்கல்வி,மற்றும் தொடர்கல்வி பெற்று உயர்நிலை அடைய வேண்டும்.என அறிவுறுத்தினார்.
   ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கிராம மக்களைத்திரட்டி ''எங்கள் கனவுகளில் எங்கள்கிராமம், மற்றும் எங்கள் கனவுகளில் நமது இந்தியா'' என விவாதித்து புத்தகமாகத் தயாரிக்கப்படும்.இவ்வாறு இந்தியா முழுவதும் ஆயிரம் ஒன்றியங்களில் ஒரு இலட்சம் கிராமங்களில் பெறப்படும் புத்தகங்கள் இறுதியில் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மக்கள் புத்தகங்கள் தயாரித்தனர் கல்லூரி மாணவ,மாணவியர்

  மக்கள் புத்தகங்களை கலைப்பயணக்குழுவினரிடம் ஒப்படைக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.உடனிருப்பவர் பேரா.Dr.G.பாண்டே அவர்கள்.

      கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணத்தை மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள்  கொடி அசைத்து துவக்கிவைக்கும் காட்சி.
கலைப்பயணக்குழுவினர் விபரம்.
  (1)திரு.ஆறுமுகம்-கிருஷ்ணகிரி(தலைமை) 
  (2)திரு.கருணாகரன்-கிருஷ்ணகிரி 
  (3)மரியாதைக்குரிய.கலா-கிருஷ்ணகிரி 
 (4)மரியாதைக்குரிய.ஜெயலட்சுமி-கிருஷ்ணகிரி 
 (5)திரு.சாமுவேல்-வேலூர்,
 (6)வ.விஜயரசு-தருமபுரி,
 (7) திரு.சண்முக சுந்தரம்-தருமபுரி,
 (8)திரு.ஏழுமலை-திருவண்ணாமலை,
 (9)மரியாதைக்குரிய.ராணி-திருவண்ணாமலை,    (10)மரியாதைக்குரிய.J.A.செல்வி-திருவண்ணாமலை, (11)மரியாதைக்குரிய.M.செல்வி-திருவண்ணாமலை,(12)மரியாதைக்குரிய.தமிழ்ச்செல்வி-திருவண்ணாமலை,(13)மரியாதைக்குரிய.சசிகலா-திருவண்ணாமலை,
   மாண்புமிகு.மத்திய அமைச்சர் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு ,கற்கும் பாரதம்-தேசிய கலைப்பயணம் அதன் திட்டம்,நோக்கம்,அதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கிய காட்சி.அருகில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர்,மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் அவர்கள்.மேலே உள்ள படம்.

    ''பெண்மை போற்றும் தேசமே'',என்ற பாடலுக்கு கோலாட்டம் நடனம்.

  மாண்புமிகு.S.காந்தி செல்வன்,அவர்கள்,மத்திய இணைஅமைச்சர் அவர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாநிலத்தலைவர் பேரா.Dr.N.மணி அவர்களும் கலைப்பயணக்குழுவினரின் நடனத்தைக் காணும் காட்சி.மேலே உள்ள படம்.
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டச் செயலாளர் அவர்களும்,மாவட்டத்தலைவர் அவர்களும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்களும் கலைப்பயணக்குழுவின் நிகழ்ச்சிகளைக்கண்டு களிக்கும் காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி மையப் பொறுப்பாளர் அரங்கில்!!!!


       கடந்த ஒருவார காலமாக பயிற்சி எடுத்த கலைக்குழுவினர்களுக்கு சுவையான சாப்பாடு சமைத்து வழங்கிய கிராமத்து சமையல்காரப் பெண்மணி அவர்களுக்கு பாராட்டு வழங்கிய காட்சி மேலே உள்ள படம்.
  இந்த கலைப்பயண நிகழ்ச்சியில்  (1) வள்ளியின் வழக்கு, (2)பூங்கோதை,(3)படித்த பாரதி, (4)சரஸ்வதி, (5)கொள்ளி வை, (6)பவுனு குஞ்சு,,,,, போன்ற நாடகங்களும், மேலும்    (1)கற்கும் பாரதம்.........................,(2)வீதியிலே,வீதியிலே.....................,(3)அச்சம்,மடம்,நாணம்..................(4)பெண்மை போற்றும் தேசமே................இன்னும் பல, கிராமியப்பாடல்கள், எழுத்தறிவு விழிப்புணர்வுப்பாடல்கள், கோலாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,கரகாட்டம் என கிராம மக்களைக் கவர்ந்து கல்வி விழிப்புணர்வினைக்  கொடுக்க அனைத்து கிராமங்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.என்றனர் கலைக்குழுவினர்.
  துவக்கவிழா அரங்கத்தில் நடத்திய ''வள்ளியின் வழக்கு'' நாடகத்தின் ஒரு பகுதி ....

                     


         


   மரியாதைக்குரிய.M.அண்ணாதுரை அவர்கள் கையெழுத்து பெறப்பட்ட துணி பேனரை பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
   மக்கள் கையெழுத்து பெற்ற துணி பேனரை திருமிகு.பாண்டே அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
 

     இறுதியாக நன்றியுரை ஆற்றுகிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட செயலாளர் திருமிகு.R.மணி அவர்கள்.மேலே உள்ள படம்.
      POST BY:-            PARAMESWARAN.C
                           TAMILNADU SCIENCE FORUM,
                                       ERODE DISTRICT



  




வியாழன், 16 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-06

   

15 February, 2012



     அன்பு நண்பர்களே,வணக்கம்.
                    tnsfthalavady.blogspot.com வலைப்பதிவிற்குதங்களை இனிதே வரவேற்கிறோம்.
          இன்று கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் பயிற்சிமுகாம் ஆறாம் நாள்.



   கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஆறாம்நாளான இன்று வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று துவக்கவுரை ஆற்றுகிறார் திருமிகு.ரகுபதி.ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
   

       திருமிகு. மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் வட்டார மக்கள் தங்கள் குழந்தைகளை அவசியம் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்கு கல்வி அறிவூட்ட ஆர்வம் காட்டி,அனைவருக்கும்கல்வித்திட்டத்தின் கீழ் அரசு செயல்படுத்தும் இலவச திட்டங்களை,வசதிகளை  நல்லமுறையில் பயன்படுத்தி வருங்காலத்தில் கடம்பூர் பகுதி மக்களும் நல்ல முன்னேற்றத்தைக்காண வேண்டும்.என வலியுறுத்தினார்.
    கல்கடம்பூர் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கல்வி உரிமைச்சட்டம்,பெண்கல்விச்சட்டம்,கட்டாயக்கல்விச்சட்டம் என மக்களின் நலனுக்காக இந்த அரசு சட்டங்களையே போட்டு அனைவருக்கும் கல்வித்திட்டம் வாயிலாக அரசுப்பள்ளிகளில் கட்டடம்,உபகரணங்கள் மற்றும் அருகாமைப்பள்ளி,இடைநின்றகுழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சிப் பள்ளி,மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்சிப்பள்ளி என உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.இதனைக் கண்காணித்து தங்கள் குழந்தைகள் பயன்பெற வேண்டும், என வலியுறுத்னார்.

   திருமிகு.ரகுபதி.ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கணிணியில் கல்வி சம்பந்தமான படங்களை திரையிட்டு விளக்கினார்.
  மதிய உணவு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு பெற்ற பொதுமக்கள் அனைவரும் மதிய உணவு உண்ண,பரிமாறினர் ஆசிரியப்பெருமக்கள்.
   பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளியின் மாணவக்குழந்தைகள் ''Babirie Girls'' நடனம் ஆடினர்.
       கல்கடம்பூர் கிராமக்கல்விக்குழு பயிற்சிமுகாமில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி  திறமைகளை வெளிப்படுத்திய பெரிய உள்ளே பாளையம்- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள் 1)மு.பிரியதர்ஷினி, 2)அ.சௌமியா, 3)ஒ.நந்தினி, 4)சி.கீதா, 5)சி.அனு, 6)மு.திவ்யா,
 7)சி.ஜடைசாமி, 8)ந.சதீஸ்குமார், 9)கெ.சித்தேஷ், 10)மு.பிரகாஷ், 11)ம.சுகேந்திரன்  இவர்களுடன் அப்பள்ளித். தலைமை ஆசிரியை திருமிகு..கு. சாந்தி அவர்களும் மற்றும் திருமிகு.. த.இரமேஷ்.இடைநிலை ஆசிரியர் அவர்களும் மேலே உள்ள படம்

கல்கடம்பூர் அடுத்து உள்ள பெரிய உள்ளே பாளையம்  ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி மாணவியர்   ''ஓ.ரிங்கா,ரிங்கா''   என்ற பாடலுக்கு நடனம் ஆடினர்,


  பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்  துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள்   ''சாதனை என்பது சாத்தியமே''    என்ற பாடலுக்கு நடனமாடினர்.
பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்  துவக்கப் பள்ளியின்   மாணவர்கள்    "Push,Push,Push The Air"      என்ற இசைக்கு நடனம் ஆடினர்.

பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத்   துவக்கப்   பள்ளியின் மாணவக் குழந்தைகள்  "சாதனை என்பது சாத்தியமே"   என்ற பாடலுக்கு  நடனம் ஆடிய எழில்மிகு காட்சி மேலே உள்ள படம்.


பெரிய உள்ளே பாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் மாணவக் குழந்தைகள்,  ''ரொம்ப,ரொம்ப நகையெல்லாம் கேட்க மாட்டேன்''  என்ற  கிராமியப்பாடல் பாடி நடனமாடிய  அற்புதக் காட்சி மேலே உள்ள படம்.



    


இவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவருங்க. மிக அழகான பாடல் ஒன்று பாடினாருங்க.மேலே உள்ள படம்.


  
 ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு. மெய்யப்பன் அவர்கள் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களூக்கான பயிற்சி மையத்தில் வருகை தந்து பல்வேறு வகைகளில் பேச்சாற்றல்,மொழிப்புலமை,பாடல்,நடனம் ,நடிப்பு என அவரவர் திறமைகளை வெளிப்படுத்திய அந்தப்பகுதி வட்டார அரசுப்பள்ளி மாணவ,மாணவியருக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றிய காட்சி மேலே உள்ள படம்.
  மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் கல்கடம்பூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள்.மேலே உள்ள படம்.



    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி மற்றும் தாளவாடி வட்டாரப் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் பள்ளி மாணவருக்கு பரிசு வழங்குகிறார்.மேலே உள்ள படம்.

  

 கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு..S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள் ஒரு ஆசிரியரின் சேவையினைப்பாராட்டி பரிசு வழங்குகிறார் மேலே உள்ள படம்.
  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் பள்ளி மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகிறார் மேலே உள்ள படம்.
  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மூர்த்தி அவர்கள் மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகிறார்.மேலே உள்ள படம்.

       கல்கடம்பூர் மலைப்பகுதி   கிராமக்கல்விக்குழு பயிற்சி மையத்தின் நிறைவு  நாளான இன்று கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை, மரியாதைக்குரிய  S.விஜயலட்சுமி.M.Sc.,M.Phil.,M.A.,M.Ed., அவர்கள் உரையில்  13-ந்தேதி முதல் 15-ந்தேதியான இன்றுவரை பல்வேறு பயிற்சிகள்,மாணவக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் அதற்கான ஆசிரியர்களின் வழிகாட்டும் திறன்கள் மிகவும் பாராட்டும்விதமாக இருந்தது.அதேபோல்,இங்கு மூன்று நாட்களும் வருகை தந்து  அனைவருக்கும் கல்வித்திட்டம் சத்தி வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுனர்கள் திருமிகு.ரகுபதி அவர்கள்,திருமிகு.மூர்த்தி அவர்கள் மற்றும் திருமிகு.மெய்யப்பன் அவர்களின் விரிவான விளக்கங்கள் வாயிலாக கல்வி உரிமைச்சட்டம்,பெண்கல்விச்சட்டம்,இடைநின்ற குழந்தைகளின் கல்வி,சுகாதார மேம்பாடு,செயல்வழிக்கற்றல்,மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி மற்றும் கல்விமுகாம் என அரசு செய்து வரும் பல்வேறு சலுகைகளைப்பற்றியும்,வசதிகளைப்பற்றியும் அறிந்து கொள்ள வருகை தந்த  கடம்பூர் மலைப்பகுதி வட்டாரப் பொது மக்கள் பங்களிப்பு ,மலைப்பகுதிமக்களுக்கான விழிப்புணர்வு கொடுக்க இங்கு பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்  என  அனைத்தும்  மிகச்சிறப்பாகவும்,திறமையாகவும் மலைப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் விதத்தில்  சிறப்பாக நடைபெற்றது.இந்த பயிற்சி முகாமில் பங்குபெற்று ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.
         
 பயிற்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
  பதிவேற்றம்; PARAMESWARAN.C
                  TAMIL NADU SCIENCE FORUM,
                        THALAVADY & SATHY 
                             ERODE DISTRICT.

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-05

     

14 February, 2012



   அன்பு நண்பர்களே,
                  tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம். இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சிக்கான ஐந்தாவது நாள் .

          கல்கடம்பூர் மலைப்பகுதி உயர்நிலைப்பள்ளிக்கூடம்.மேலே உள்ள படம்.


     கல்கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்வமுடன் ஆய்வு செய்யும் காட்சி மேலே உள்ள படம்.

     மரியாதைக்குரிய மெய்யப்பன், ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் கல்கடம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள கிராம கல்விக்குழு உறுப்பினர்களை வரவேற்று அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக கல்விக்கான வசதிகள் பற்றி விளக்கினார்.
   ''நாட்டாமைக்கல்வி'' என்னும் மிகச்சிறப்பான  கல்வி சீர்திருத்த நாடகம் அரங்கேற்றிய பள்ளி மாணவக்குழந்தைகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் மேலே உள்ளபடம்.


             மலைப்பகுதி பள்ளி மாணவக்குழந்தைகளின்  படைப்பாற்றலை வெளிப்படுத்திய திருமிகு.ஆசிரியர் அவர்கள்

          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.ரகுபதி அவர்கள் விளக்கவுரையை ஆவலுடன் கேட்கும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் கிராமக்கல்வி உறுப்பினர்கள், மேலே உள்ள படம்.


      ஆசிரியர் பயிற்றுனர்களான 1)திருமிகு.ரகுபதி அவர்கள் மற்றும் 2)திருமிகு.மெய்யப்பன் அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டங்களை கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் கண்காணித்து பள்ளியின் நலனுக்காக அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும்பயன்படுத்த வேண்டும் என  விளக்கினார்.
              மதிய உணவு இடைவேளை கல்கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இளைப்பாறும் காட்சி மேலே உள்ள படம்.



          ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.மெய்யப்பன் அவர்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவக்குழந்தைகளின் வில்லுப்பாட்டு அனைவருக்கும் மகிழ்வூட்டும்! என பாராட்டினார்.

          ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பசுவணாபுரம் மாணவர்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்சியளித்தது பற்றி அப்பள்ளி ஆசிரியர் விவரிக்க அதனை கேட்டறிகின்றனர் ஆசிரியர் பயிற்றுனர்கள்.

           இதோ ''பொது அறிவு தேவை'' என்பதை உணர்த்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.பங்கு பெற்ற மாணவக்குழந்தைகள் 1)சரத்பரணி.ரு. (2)கௌதம்.ப.(3)சுவேதா.கோ.(4)நியூபாரத்.சி. இவர்கள் நால்வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். ஐந்தாவதாக பரத்.சி. என்ற மாணவன் நான்காம் வகுப்பு.பயின்று வருகின்றனர்.

        கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கு.சக்திவேல்.இவர் ஓவியம் வரைவதில் மிகவும் திறமை உள்ளவர் என  அறிமுகப்படுத்தி வைக்கிறார் அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.பொ.மணி,B.Lit.,D.T.Ed.



  மேலே உள்ள இரண்டு படங்களும் மாணவன் சக்திவேல் அவர்களின் கைவண்ண ஓவியங்கள்.(இன்னும் மனித உருவங்கள்,இயற்கை காட்சிகள்,என  பல படங்கள் வரைந்துள்ளார்.)
     இன்று நடந்த இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாளவாடி,சத்தி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் ராமம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியை அப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.ஃப்ராங்க்ளின் மற்றும் தலைமை ஆசிரியை மரியாதைக்குரிய சரஸ்வதி அவர்களும் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு  சர்வதேச பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திய விதம் பற்றியும் அதேபோல இங்கும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்படுத்தி ஊர்மக்களும் ஒன்றிணைந்து பள்ளியை சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    புகைப்படம் மற்றும் பதிவேற்றம்;- PARAMESWARAN.C
                                                             TAMIL NADU SCIENCE FORUM
                                                                       SATHY-THALAVADY

        

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-04

13 February, 2012



 அன்பு நண்பர்களே,
                           tnsfthalavady.blogspot.com  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                 கிராம கல்விக் குழுவின் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான பயிற்சியில், இன்று இரண்டாவது கட்டப்பயிற்சியாக ஆரம்பம்.மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவில் அருகில் உள்ள வடவள்ளி அடுத்து வேடர்நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் சார்பாக  கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.



          கல்வி உரிமைச்சட்டம் , பெண் கல்விச்சட்டம்,இடைநின்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ,செயல்வழிக்கற்றல் இவைகளுக்கு அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் கட்டட வசதிகள், ஆகியன பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

                  
         கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் பங்காற்றல் கண்காணித்தல் இருந்தால் அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி  அரசுப்பள்ளியான இங்கு பயிலும் குழந்தைகளை மிகவும் திறமையானவர்களாக உருவாக்க முடியும்.மேலும்,




        

         கிராம மக்களாகிய உங்களது குழந்தைகளை திறமையானவர்களாக மாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.கிராம மக்களாகிய நீங்கள்  அவ்வப்போது இந்தப்பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியப்பெருமக்களை ஊக்குவித்தல் மற்றும் அரசு திட்டங்களைக் கண்காணித்தால் போதுமானது.என வட்டார வள மைய மேற்பார்வையாளர் துவக்கவுரை ஆற்றினார்.

  
        அதற்கு முன்னதாக பள்ளி பிரார்த்தனை நேரம் நடைபெற்றது.பொதுமக்கள் கொடி ஏற்றல் மற்றும் குழந்தைகளின் பிரார்த்தனையைக் கண்டு களித்தனர்.
                வேடர்நகர் அரசு துவக்கப்பள்ளி  மாணவி ஒருவர் தினசரிச் செய்தித்தாள் ஒன்றில் மாவட்டச்செய்தி,மாநிலச்செய்தி,தேசியச்செய்தி மற்றும் உலகச்செய்தி எனப் பிரித்து வாசிக்கும் காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.பால கிருஷ்ணன் ஆசிரியர் அவர்கள்.

 கிராமக் கல்விக்குழு பயிற்சி முகாம் நடைபெறும் அறையின் பெயர்பலகை மற்றும் நடன நிகழ்ச்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவக்குழந்தைகள் மேலே உள்ள படம்.


       மரியாதைக்குரிய கொடைவள்ளல்,ஆமாங்க! இவர் சிக்கரசம்பாளையம் அருகில் சூரியக்குட்டை அரசுப்பள்ளிக்கு இவரது நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.இவருக்கு வயதாகி விட்ட நிலையிலும் கிராமக் கல்விக்குழுப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தன்னை அழைத்துச்செல்லுமாறு அப்பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் திருமதி.ப.லட்சுமக்காள் அவர்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் அழைத்து வந்திருந்தார்.
      (இவரது பயன்மிகு உரையாடல் பின்னர் காண்போம்)

    

    ஆசிரியர் பயிற்றுனர் மரியாதைகுரிய . சாமுண்டீஸ்வரி அவர்கள் கிராம மக்களுக்கு கட்டாயக்கல்வி மற்றும் அரசு உதவிகள்,வசதிகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.

  பயிற்சி முகாமில் குழுமியிருந்த ஆசிரியப்பெருமக்கள் மற்றும் கிராமக் கல்வி உறுப்பினர்கள்,பொதுமக்கள்.மேலே உள்ள படம்.

       தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டாரப் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்   சமூக முன்னேற்றத்திற்கு   பெண் கல்வி மிக அவசியம் எனவும், இப்பள்ளியில் பயின்ற  முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றினை ஏற்படுத்தி அரசு உதவிகளுக்கு அப்பால் அதாவது காரமடை ஒன்றியம்-ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியைப் போல சர்வதேசப் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கி இங்குள்ள திறமையான ஆசிரியர்களைப் பயன்படுத்தி இப்பள்ளி மாணவர்கள் உயர்ந்த நிலை அடைய ஊர்மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த காட்சி மேலே உள்ள படம்.
         எங்கள் பள்ளி மாணவர்கள் கலை நயம் மிக்கவர்கள்.பொருளாதார வசதியில் பின்தங்கியிருந்தாலும் திறமை மிக்கவர்கள் எனப் பாராட்டி மாணவக்குழந்தைகளை நடனமாட அழைப்பு விடுத்த காட்சி மேலே உள்ள படம்.

       

          
             ஒன்றாம் வகுப்பு மழலைகள்.இவர்களது நாடகம் ''கோழிக்குஞ்சு'' பாச உணர்வினை வெளிப்படுத்தும் நாடகம் இது.

           இடது பக்கம் நிற்பவர்தாங்க '' கோழிக்குஞ்சு'' கதாபாத்திரம்.மிக நன்றாக இருந்தது.மேலே உள்ள படம்.

    இந்த கோழிக்குஞ்சு அதன் அம்மாவைத்தேடி காட்டில்- குருவி,வாத்து என ஒவ்வொரு  பறவையின் அருகில் சென்று ''கீ,கீ'' எனக்குரலிட்டு ''நீ என் அம்மாவா?'' எனக் கேட்கும் விதம், அதற்கு அந்த வேறு இனப்பறவைகள் ''நான் உனது அம்மா இல்லை. என தனது உடல் அடையாளங்களின் வேறுபாட்டை உதாரணத்திற்கு காட்டும் விதம்,இறுதியாக தாய்க்கோழியிடமே சென்று ''கீ,கீ,எனக் குரலில், நீ என் அம்மாவா?'' எனக்கேட்க, அந்தக்கோழி பாசமிகுதியால் ''வாடா மகனே!'' என வாரி அணைத்துக்கொள்ள,இந்த நாடகம் குழந்தைகள் நடிப்பால் மிகவும் ரசிக்கத்தகுந்த விதத்தில் அமைந்திருந்தது.

   

    ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் சூரிக்குட்டை அரசு துவக்கப்பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய வள்ளல் நாகப்ப கவுடர் அவர்கள் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
  ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள் அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக அளித்து வரும் வசதிகள் மற்றும் வசதிகள் பற்றி விளக்கி,பொதுமக்கள் பயன்பெறும் வழிமுறைகளை விவரித்த காட்சி.கண்காணிக்கும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள்.
   சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் குழந்தைகளின் கலைத்திறனைப் பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.அருகில் ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சங்கீதா அவர்கள் ,திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள், புரவலர்,திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள், ஆசிரியர் திருமிகு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேலே உள்ள படம் இடமிருந்து வலமாக.

    சூரிக்குட்டை அரசுப்பள்ளிக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய வள்ளல் திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் ஆற்றிய சிலப்பதிகார காப்பிய உரை.இங்கு அனைவரும் கற்றுக்கொண்டவை 1)கற்றலில் கேட்டல் நன்று,2)கல்வியில் அரசியல் புகுத்தக்கூடாது,3)கண்ணகியைச் சுட்டிக்காட்டி பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,4)இலக்கியத்தைக்கற்று அதன்படி நீதி தவறாமல் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் 5)தவறு இருந்து சுட்டிக்காட்டினால் அதனை திருத்திக்கொள்ள வேண்டும்.என்பது போன்ற பல சமூகம் உணர வேண்டிய பல விசயங்கள் திருமிகு நாகப்ப கவுடர் அவர்கள் எடுத்துரைத்தார்.கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மதிய உணவினைக்கூட மறந்து மதியம் இரண்டு மணிவரை திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் உரையினை ஆர்வமுடன் கேட்டனர்


           தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி மற்றும் தாளவாடி வடாரப்பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கல்வியின் அவசியம், பொருளாதாரத்தில்தான் தீண்டாமை,பெண் அடக்குமுறை,குறிக்கோள்,இலக்கு,நேர மேலாண்மை ,திட்டமிடல் உள்ளிட்ட பல சமூகம் சார்ந்த விசயங்களை எடுத்துரைத்தார்.

             பதிவேற்றம்;-    PARAMESWARAN.C
                                   TAMIL NADU SCIENCE FORUM
                                            SATHY & THALAVADY.






ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-03



அன்பு நண்பர்களே, 
      தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை இனிதே வரவேற்கிறோம்.8-2-2012 இன்று கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மூன்றாவது நாள்.இன்று சத்தி-2   மையத்தில் கிராம மக்களின் ஈடுபாடு,அரசு துவக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவக்குழந்தைகளின் திறமைகள்,ஆசிரியப் பெருமக்களின் உழைப்பு ஆகியன பற்றி இந்த வலைப்பக்கத்தில் காண்போம்.



    கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களின் பயிற்சி முகாமின் மூன்றாவது நாள் விழாவிற்கு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் அரசின் கல்விக்கான நலத்திட்டங்கள் பற்றி விளக்குகின்றனர்.

    அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரின் ஆங்கிலத்திறமையை விவரிக்கிறார் ஆசிரியர் பயிற்றுனர் சாமுண்டீஸ்வரி அவர்கள்.

   அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் அறிவியல் சம்பந்தமாக உரை நிகழ்த்திய காட்சி.

   

    கலைத்திறன்களை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவக்குழந்தைகளின் திறமைகளை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் அவர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் கண்டு களிப்புற்ற காட்சி.

    குழந்தைகளின் குரங்கும் குல்லா வியாபாரியும் நாடகக்காட்சி.




 .


     நகராட்சி துவக்கப்பள்ளியில் மூன்றாவது வகுப்பு பயிலும் க.சொர்ணப்பிரியா என்ற மாணவிடம்  குழந்தைத் தொழிலாளர் பற்றிய பாடல் பாடச்சொல்லிக் கேட்கிறார்  ஆசிரியை ஒருவர்.அந்தக்குழந்தையும் (க.சொர்ணப்பிரியா-மூன்றாம் வகுப்பு-நகராட்சித்துவக்கப்பள்ளி) சிட்டுக்குருவி தலையிலே பனங்காயைப்பாருங்க,பனங்காயைப்பாருங்க  சிற்றெறும்பு முதுகிலே பாறாங்கல்லைப்பாருங்க,பாறாங்கல்லைப்பாருங்க,  பத்து வயது முடியுமுன்னே குடும்ப பாரம்தானுங்க,குடும்ப பாரம் தானுங்க   என்பிஞ்சுக்கை உழைச்சாத்தான் நாளும் ஜீவன் வாழுங்க,நாளும் ஜீவன் வாழுங்க! என்ற இந்த  கொடூர மனதுடையோர் கல் மனதையும் இளக வைக்கும் குழந்தைத்தொழிலாளர் கொடுமை பற்றிய பாடல் இன்றைய பயிற்சி நாளின் மிகச்சிறப்பானதொரு இடத்தைப்பிடித்தது எனலாம்.
    குழந்தைகளின் வில்லுப்பாட்டு சிறப்பாக இருந்தது.




       வேப்பிலை நடனமாடும்  மாணவிகளுடன் ஆடுவோர்  பயிற்சி அளித்த உள்ளூர் கிராம இளைஞர்கள்.மேலே உள்ள படம்.
     பள்ளிக்குழந்தைகளின் நடனத்திற்கு   ஊக்கம் கொடுக்கும் ஆசிரியையின் பத்ரகாளி வேடம்.மேலே உள்ள படம்.


   
மரியாதைக்குரிய துவக்கக்கல்வி அதிகாரி அவர்கள் குழந்தைகளைப்பாராட்டியதோடு அரசின் 1)கல்வி உரிமைச்சட்டம் 2)பெண் கல்விச்சட்டம் 3) இடைநின்ற குழந்தைகளின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதாரம் 4)கட்டாயக்கல்விச்சட்டம்  உட்பட அரசின் அனைவருக்கும்  கல்விக்கான இலவசம்,நலம்,வசதிகள்,அருகாமைப்பள்ளிகள்,கட்டடவசதிகள்,என பல சிறப்பான திட்டங்கள் பற்றி கிராம மக்களிடையே விவரித்த காட்சி,மேலே  உள்ள படம்





    ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை அவர்கள் விடுகதைப் புதிர் போட்ட காட்சி மேலே உள்ள படம்.


  





     அரசு துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் அழகான தமிழ்மொழிசிறப்புப் பாடல் ஒன்று பாடிய காட்சி மேலே உள்ள படம்.

  கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தந்த பெரியவர் ஒருவர் கல்வியை வலியுறுத்தும் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப்  பாடி மையத்தினை மெய் சிலிர்க்க வைத்த காட்சி மேலே உள்ள படம்.

     


   பள்ளிக்குழந்தைகளின் திறமைகளைக் கண்ணுற்ற பெண்மணி ஒருவர் வழிகாட்டிய ஆசிரியப்பெருமக்களைப் பாராட்டிய காட்சி மேலே உள்ள படம்.


    கிராமக்கல்விக்குழு உறுப்பினர் பயிற்சியில் பங்கேற்றவர் பாராட்டியதோடு பள்ளிக்குழந்தைகளுக்கு பாராட்டுப் பரிசுத்தொகை வழங்கினார்.
      ரங்க சமுத்திரம் பகுதி பள்ளிக்குழந்தைகளும் திறமையானவர்களே,என பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் கிராமக்கல்வி உறுப்பினர்.அருகில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்.
   

   


  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த கிராம இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் காட்சி மேலே உள்ள படம்.
     வேப்பிலை நடனம் பள்ளிக்குழந்தைகளுடன் ஆடிய இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.மேலே உள்ள படம்.

 
     பள்ளி மாணவி ஒருவர் கல்வி எங்களுக்கு சுமையில்லை எனப் பாடிய காட்சி மேலே உள்ள படம்.

   அறிவியல் சம்பந்தமான மற்றும் கல்வி விழிப்புணர்வு கொண்ட ஒளிப்படங்கள் திரையிட்டனர்.
                  பதிவேற்றம்;- PARAMESWARAN.C
                                TAMIL NADU SCIENCE FORUM,
                                     SATHY & THALAVADY,
                                      ERODE DISTRICT.