13 February, 2012
அன்பு நண்பர்களே,
tnsfthalavady.blogspot.com வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
கிராம கல்விக் குழுவின் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான பயிற்சியில், இன்று இரண்டாவது கட்டப்பயிற்சியாக ஆரம்பம்.மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவில் அருகில் உள்ள வடவள்ளி அடுத்து வேடர்நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் சார்பாக கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.
கல்வி உரிமைச்சட்டம் , பெண் கல்விச்சட்டம்,இடைநின்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு ,செயல்வழிக்கற்றல் இவைகளுக்கு அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் கட்டட வசதிகள், ஆகியன பற்றி எடுத்துரைக்கப்பட்டன.
கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் பங்காற்றல் கண்காணித்தல் இருந்தால் அரசு செய்து வரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி அரசுப்பள்ளியான இங்கு பயிலும் குழந்தைகளை மிகவும் திறமையானவர்களாக உருவாக்க முடியும்.மேலும்,
கிராம மக்களாகிய உங்களது குழந்தைகளை திறமையானவர்களாக மாற்ற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.கிராம மக்களாகிய நீங்கள் அவ்வப்போது இந்தப்பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியப்பெருமக்களை ஊக்குவித்தல் மற்றும் அரசு திட்டங்களைக் கண்காணித்தால் போதுமானது.என வட்டார வள மைய மேற்பார்வையாளர் துவக்கவுரை ஆற்றினார்.
அதற்கு முன்னதாக பள்ளி பிரார்த்தனை நேரம் நடைபெற்றது.பொதுமக்கள் கொடி ஏற்றல் மற்றும் குழந்தைகளின் பிரார்த்தனையைக் கண்டு களித்தனர்.
வேடர்நகர் அரசு துவக்கப்பள்ளி மாணவி ஒருவர் தினசரிச் செய்தித்தாள் ஒன்றில் மாவட்டச்செய்தி,மாநிலச்செய்தி,தேசியச்செய்தி மற்றும் உலகச்செய்தி எனப் பிரித்து வாசிக்கும் காட்சி மேலே உள்ள படம்.அருகில் திருமிகு.பால கிருஷ்ணன் ஆசிரியர் அவர்கள்.
கிராமக் கல்விக்குழு பயிற்சி முகாம் நடைபெறும் அறையின் பெயர்பலகை மற்றும் நடன நிகழ்ச்சிக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவக்குழந்தைகள் மேலே உள்ள படம்.
மரியாதைக்குரிய கொடைவள்ளல்,ஆமாங்க! இவர் சிக்கரசம்பாளையம் அருகில் சூரியக்குட்டை அரசுப்பள்ளிக்கு இவரது நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.இவருக்கு வயதாகி விட்ட நிலையிலும் கிராமக் கல்விக்குழுப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தன்னை அழைத்துச்செல்லுமாறு அப்பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் திருமதி.ப.லட்சுமக்காள் அவர்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் அழைத்து வந்திருந்தார்.
(இவரது பயன்மிகு உரையாடல் பின்னர் காண்போம்)
ஆசிரியர் பயிற்றுனர் மரியாதைகுரிய . சாமுண்டீஸ்வரி அவர்கள் கிராம மக்களுக்கு கட்டாயக்கல்வி மற்றும் அரசு உதவிகள்,வசதிகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
பயிற்சி முகாமில் குழுமியிருந்த ஆசிரியப்பெருமக்கள் மற்றும் கிராமக் கல்வி உறுப்பினர்கள்,பொதுமக்கள்.மேலே உள்ள படம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மற்றும் தாளவாடி வட்டாரப் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பெண் கல்வி மிக அவசியம் எனவும், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒன்றினை ஏற்படுத்தி அரசு உதவிகளுக்கு அப்பால் அதாவது காரமடை ஒன்றியம்-ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியைப் போல சர்வதேசப் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கி இங்குள்ள திறமையான ஆசிரியர்களைப் பயன்படுத்தி இப்பள்ளி மாணவர்கள் உயர்ந்த நிலை அடைய ஊர்மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த காட்சி மேலே உள்ள படம்.
எங்கள் பள்ளி மாணவர்கள் கலை நயம் மிக்கவர்கள்.பொருளாதார வசதியில் பின்தங்கியிருந்தாலும் திறமை மிக்கவர்கள் எனப் பாராட்டி மாணவக்குழந்தைகளை நடனமாட அழைப்பு விடுத்த காட்சி மேலே உள்ள படம்.
ஒன்றாம் வகுப்பு மழலைகள்.இவர்களது நாடகம் ''கோழிக்குஞ்சு'' பாச உணர்வினை வெளிப்படுத்தும் நாடகம் இது.
இடது பக்கம் நிற்பவர்தாங்க '' கோழிக்குஞ்சு'' கதாபாத்திரம்.மிக நன்றாக இருந்தது.மேலே உள்ள படம்.
இந்த கோழிக்குஞ்சு அதன் அம்மாவைத்தேடி காட்டில்- குருவி,வாத்து என ஒவ்வொரு பறவையின் அருகில் சென்று ''கீ,கீ'' எனக்குரலிட்டு ''நீ என் அம்மாவா?'' எனக் கேட்கும் விதம், அதற்கு அந்த வேறு இனப்பறவைகள் ''நான் உனது அம்மா இல்லை. என தனது உடல் அடையாளங்களின் வேறுபாட்டை உதாரணத்திற்கு காட்டும் விதம்,இறுதியாக தாய்க்கோழியிடமே சென்று ''கீ,கீ,எனக் குரலில், நீ என் அம்மாவா?'' எனக்கேட்க, அந்தக்கோழி பாசமிகுதியால் ''வாடா மகனே!'' என வாரி அணைத்துக்கொள்ள,இந்த நாடகம் குழந்தைகள் நடிப்பால் மிகவும் ரசிக்கத்தகுந்த விதத்தில் அமைந்திருந்தது.
ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் சூரிக்குட்டை அரசு துவக்கப்பள்ளிக்கு நிலம் தானமாக வழங்கிய வள்ளல் நாகப்ப கவுடர் அவர்கள் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள் அனைவருக்கும் கல்வித்திட்டம் வட்டார வள மையம் சார்பாக அளித்து வரும் வசதிகள் மற்றும் வசதிகள் பற்றி விளக்கி,பொதுமக்கள் பயன்பெறும் வழிமுறைகளை விவரித்த காட்சி.கண்காணிக்கும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள்.
சத்தி ஒன்றியம் வட்டார வள மையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள் குழந்தைகளின் கலைத்திறனைப் பாராட்டி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.அருகில் ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு.சங்கீதா அவர்கள் ,திருமிகு.சாமுண்டீஸ்வரி அவர்கள், புரவலர்,திருமிகு.நாகப்ப கவுடர் அவர்கள், ஆசிரியர் திருமிகு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேலே உள்ள படம் இடமிருந்து வலமாக.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி மற்றும் தாளவாடி வடாரப்பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள் கல்வியின் அவசியம், பொருளாதாரத்தில்தான் தீண்டாமை,பெண் அடக்குமுறை,குறிக்கோள்,இலக்கு,நேர மேலாண்மை ,திட்டமிடல் உள்ளிட்ட பல சமூகம் சார்ந்த விசயங்களை எடுத்துரைத்தார்.
பதிவேற்றம்;- PARAMESWARAN.C
TAMIL NADU SCIENCE FORUM
SATHY & THALAVADY.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக