புதன், 14 டிசம்பர், 2011

உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்


சினை மாட்டுக்கான தீவனம் மற்றும் பராமரிப்பது

Archive for the ‘கால்நடை வளர்ப்பு’ Category

மாட்டு அம்மை

பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?
(கேள்வி : தேவராஜ், வேளத்தூர், பாபாநாசம், தாஞ்சவூர் மாவட்டம்)
காம்பில் கொப்பளம் உள்ளது. “மாட்டு அம்மை”(cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றையும் அரைத்தும் காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்.
பதில்  [...]

ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன?

(கேள்வி  : தெய்வாணை, அருப்புகோட்டை, விருதுநகர்)
புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

சினை மாட்டுக்கான தீவனம் மற்றும் பராமரிப்பது

மாடு 8 மாத சினையாக உள்ளது. எந்த மாதிரியான தீவனம் கொடுப்பது? எப்படி பராமரிப்பது?
(கேள்வி  : பழனிச்சாமி, செம்மேடு, கோயம்பத்தூர் மாவட்டம்)
முதலாவது 7 மாதம் முடிந்த உடனே பால் கறப்பதை நிறுத்துவது நல்லது. மேலும் சத்துள்ள சரிவிகித கலப்பு தீவனம் கொடுக்க வேண்டும். பசுந்தீவன புல் குறைந்தபட்சம் 10 கிலோ கொடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் அதற்கு கிடைக்கும்படி வைக்க வேண்டும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print [...]

மாட்டின் மேல் அதிகமாக ஈ இருக்கிறது? என்ன செய்யலாம்?

(கேள்வி : சேகர், கொளத்தூர், ஆரணி, திருவண்ணாமலை)
சோற்று கற்றாழையின் சோற்றை எடுத்து நன்கு தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து பின் நீரால் கழுவவும். 2 அல்லது 3 நாட்களை தொடர்ந்து செய்யவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

4 மாத சினை மாடு பால் கறக்குது ஆனால் தீனி எடுக்க வில்லை?

(கேள்வி: சேகர், கொளத்தூர், ஆரணி, திருவண்ணாமலை)
மாட்டிற்கு காய்ச்சல் உள்ளதா என்று உஷ்ண மானியை (Thermometer)கொண்டு கண்டு கொள்ளவும். காய்ச்சல் இருப்பின் கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறவும். தீனி எடுக்கவில்லையென்றால் ஹமாலயன் பெத்திசா(Himalayan Bathisa) என்ற மருந்தினை வாங்கி 50 கிராம் எடுத்து சிறிது வெல்லத்துடன் கலந்து உருண்டையாக்கி உள்ளுக்குள் தினமும் காலையும் மாலையும் 3 அல்லது 4 நாட்களுக்கு கொடுக்கவும்.
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print [...]

மாட்டிற்கு மடிநோய் வந்துள்ளது? அதற்கு என்ன செய்யலாம்?

(ரத்தினம், மேலூர்)
மடிநோய் வருவதற்கு முக்கிய காரணம் அது கட்டுத்துறை சுத்தமாக இல்லாததுதான். சுத்தமின்மை கிருமிகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்றது.
கட்டுத்துறை எப்பொழுதும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும்.
சாணம், மூத்திரம் அடிக்கடி அகற்றப்பட வேண்டும்.
மடி நோய் வந்துள்ள மடியில் வீக்கம் இருந்தால் கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்முன்றையும் மைய அரைத்து வீங்கி உள்ள மடியின் பக்கம் தடவவும்.
பால் கறப்பவர் பால் கறப்பதற்கு முன் தன்னுடைய கையை நன்றாக சோப்பினால் கழுவி சுத்தமாக துடைத்து பின் பால் கறப்பத [...]

தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்?

(சகாதேவனம், திருவாச்சியூர், ஆத்தூர், சேலம்)
கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும்.
முகவரி – கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி
Print PDF

கூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை


கூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை


            கூமுட்டை என்பது கரு இல்லாத அதாவது குஞ்சு பொரிக்க முடியாத முட்டையாகும். இதை அடை வைத்த 5வது நாளில் கண்டுபிடித்து உணவுக்கு பயன்படுத்தலாம். இதனால் 21 நாள் காத்திருந்து பின் நாற்றமடிக்கும் போது தூக்கி எறிய வேண்டிய அவசியம் இருக்காது.

            1. ஒரு நோட்டு அட்டையை எடுத்துக் கொண்டு அதன் மத்தியில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு துவாரம் ஏற்படுத்த வேண்டும்.
            2. துவாரத்தின் மீது 5வது நாள் அடை முட்டையை வைத்து அடியில் டார்ச் விளக்கு ஒளி பாய்ச்ச வேண்டும்.
            3. கருக்கூடிய முட்டையில் கருப்பான கருவிலிருந்து சிவந்த இரத்தக் கோடுகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
            4. கரு கூடாத முட்டையில் வெளிச்சம் அப்படியே வெளியே செல்வதால் மஞ்சள் நிறத்தில் எவ்வித கரு வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். இதை எடுத்து உணவிற்கு பயன்படுத்தலாம்.
            5. இந்த சோதனையை இரவில் அல்லது இருட்டு அறையில் செய்து பார்க்க வேண்டும்.

கூமுட்டைக்கான காரணம்:
            1. கோழி இறக்கை கொள்ளும் அளவிற்கு மேல் அதிகமாக முட்டைகள் அடையில் வைத்தால் உஷ்ணம் பெறாத முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும்.
            2. நாள் பட்ட பழைய முட்டை, கூமுட்டை ஆகிவிடும் என்பதால் கோழியிடும் கடைசி 10 முதல் 12 முட்டைகளை அடைக்கு வைக்க வேண்டும்.
            3. சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும். 

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்

      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.


தேவையான பொருட்கள்
      1. ஒரு பழைய பானை
      2. கிழிந்த கோணி/சாக்கு
      3. காய்ந்த சாணம்
      4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்



கரையான் உற்பத்தி செய்முறை

      மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.
      ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.



கரையான் செயலாற்றும் முறை

      இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
      பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.
      கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.
      சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள்

      கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.
      அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
      முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.


2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.


3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

      இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

பசு எருமை கருவூட்டல் .. கவனிக்கவேண்டியவைகள்

பசு எருமை கருவூட்டல் .. கவனிக்கவேண்டியவைகள்

- மரு. R.V.விஜயக்குமார், கால்நடை உதவி மருத்துவர், கால்நடைமருந்தகம், திருமலைப்பட்டி,நாமக்கல். 
 தொலைபேசி எண் ; 9 443 217 843
சரியான சினைத் தருணத்தை அறிந்து கருவூட்டல் செய்வதன்மூலம் பெரும்பாலான மாடுகளின் சினைப் பிடிக்கும் தன்மையை அதிகரித்து விடலாம். மேலும் பசு கிடாரியை 2 வயதிலும், எருமைக் கிடாரியை 3 வயதிலும் கன்று ஈன வைக்க வேண்டும். கன்று ஈன்ற பசுவை 2 மாதத்திற்குள்ளும், எருமையை 3 மாதத்திற்குள்ளும் சினை பிடிக்க வைக்க வேண்டும்.இப்படிச் செய்வதே இலாபகரமான பண்ணை மேலாண்மையாகும்.
சினைத் தருண அறிகுறிகள்:.

1.
அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும்.

2.
பிறப்பு உறுப்பிலிருந்து, எண்ணெய் போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு காணப்படும்.


3.
மாடுகள் அமைதியற்று காணப்படும்.

4.
இருப்புக்கொள்ளாமல் ஓடும், சில சமயங்களில் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் உண்டு.

5.
உட்கொள்ளும் தீவனத்தின் அளவு குறையும்.

6.
வாலைத்தூக்கிக் கொண்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.

7.
பிற மாடுகளை நுகர்ந்து பார்க்கும்.

8.
அருகில் உள்ள மாடுகளின் மீது தாவுவதோடு மற்ற மாடுகளை தன்மீது தாவ அனுமதிக்கும்.

9.
பிறப்பு உறுப்பின் உதடுகள் தடித்தும், சிவந்தும், வழவழப்புடனும் காணப்படும்.

10.
பால் மாடுகளில் பாலின் அளவு குறைந்து சினைத் தருணம் முடிந்த உடன் அதிகரிக்கும்.

ஊமை சினைப் பருவம்: 21 நாட்களுக்கு ஒருமுறை பருவத்திற்கு வந்துகொண்டிருக்கும். ஆனால் பருவ அறிகுறியை வெளிக்காட்டாது. கிடாரிகளிலும், கன்று ஈன்ற எருமைகளிலும் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.வெயில் காலங்களில் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.
இந்த சினைத்தருண அறிகுறிகள் மாட்டிற்கு மாடு வேறுபட்டும், பருவகாலம், பாலின் அளவு, தீவனத்தின் தன்மை போன்ற காரணிகளால் வேறுபட்டும் காணப்படும். பொதுவாக மாடுகள் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் தனமையானது வெப்பநிலை குறைந்த நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படும். எனவே, மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் 10 நிமிடங்கள் கவனமாக கண்காணித்து பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உற்று நோக்குவது அவசியம். பலரது கறவை மாடுகளின் பராமரிப்பை வேலையாட்கள் கவனிப்பார்கள். இச்சூழ்நிலையில் சினை தருணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

வருடம் முழுவதும் எருமைகள் சினைக்கு வந்தாலும், பொதுவாக வருடத்தில் 8 மாதங்கள் மட்டுமே சினைத்தருண அறிகுறிகளை மிகவும் வெளிப்படுத்தும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்களுக்கு அவை சினை தருண அறிகுறிகளை அவ்வளவாக வெளிக்காட்டாது. மழைக்காலங்களில் அதிகப்படியாக சினைத் தருண அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

எருமைகள் சினைப் படிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் எருமை மாடு வளர்ப்போர் சினைத் தருணத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் அதற்கு சினை ஊசி போடுவது கிடையாது. எருமைகளில் ஊமை சினை பருவம் அதிகம் இருக்கும். ஆகவே சினை தருண அறிகுறிகளை அனைத்தையும் தெரிந்துகொண்டு இக்கட்டுரையில் கொடுக்குப்பட்டுள்ள
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் பகுதியை பின்பற்றினால் சினை தருணத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள்

ஒரு பருவத்தை தவறவிட்டால் 20 நாட்களை இழக்கிறோம். ஏனெனில் பசுக்கள் 17-20 நாட்களுக்கொருமுறையும், எருமைகள் 20-24 நாட்களுக்கொருமுறையும் பருவத்திற்கு வருகின்றன. ஆகவே எக்காரணத்தைக்கொண்டும் சினை தருணத்தை தவற விடக்கூடாது. கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சினை தரணத்தை தவறவிடவமாட்டோம்.

1.
அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் 2 அல்லது 3 அறிகுறிகள் தென்பட்டாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2.
மாதக் காலண்டர் அல்லது ஒரு சிறிய நோட் போட்டு பருவத்திற்கு வந்த அல்லது சினை ஊசி போட்ட நாளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றிலிருந்து பசுவாக இருந்தால் 18வது நாளையும், எருமையாக இருந்தால் 21வது நாளையும் குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளுக்கு 2 நாள் முன்பாகவே பருவ அறிகுறிகள் தெரிகிறதா என பாருங்கள். பின் தொடர்ந்து 5 நாட்கள் பாருங்கள்.
ஒரு பசு சினை ஊசி போட்ட தேதி 1 என்றால், சினை பிடிக்காவிட்டால் அடுத்து பருவத்திற்கு வரும் நாள் 18ம் தேதி. ஆகவே 16ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.

3.
பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டிய நேரம் காலை மற்றும் மாலை வேலை. வாலில், மாட்டின் பின்புறத்தில் எண்ணேய் போன்ற வழவழப்பான திரவம் ஒட்டியிருக்கிறதா, மாட்டின் பிறப்பு உறுப்பு தடித்து, சிவந்து காணப்படுகிறதா, மேலே கூறிய மற்ற பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலும், பருவம் இருக்கிறதா என சந்தேகம் எழுந்தாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது.

4.
கன்று ஈன்ற மாட்டில், கன்று ஈன்ற நாளை குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளிலிருந்து 20வது நாள் பருவத்திற்கு வரும். ஆனால் அது ஊமை சினை தருணமாக இருக்கும். ஆகவே பருவ அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. சில மாடுகளில் மட்டும் பருவ அறிகுறிகள் தெரியும். அப்படித் தெரிந்தாலும் சினை ஊசி போட வேண்டாம். மீண்டும் 40வது நாள் பருவத்திற்கு வரும். இந்த நாளை தவறவிடாதீர்கள். நன்கு சினை பிடிக்கக்கூடிய தருணம் இது.
இம்முறை சினை பிடிக்காவிட்டால் மீண்டும் 60வது நாள் சினை தருணத்திற்கு வரும். அப்பொழுது சினை ஊசி போடலாம். அதாவது கன்று ஈன்றவுடன் வருகின்ற சினை பருவத்தில் சினை பிடக்கக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும். நாள் செல்ல செல்ல சினை பிடிக்கக்கூடிய தன்மை குறைந்து கொண்டே போகும். ஆகவே கன்று ஈன்ற 60 நாட்களுக்குள் சினை பிடக்க வைத்து விட வேண்டும்.

கருவூட்டலுக்கு ஏற்ற காலம்

மாடுகளில் பருவச் சுழற்சியானது பசுவில் 17-20 நாட்களுக்கு ஒருமுறையும், எருமைகளில் 21-24 நாட்களுக்கு ஒருமுறையும் ஏற்படுகின்றது. சினைத்தருணமானது பசுக்களில் 12 முதல் 24 மணிநேரமாகவும், எருமைகளில் 8 முதல் 18 மணி நேரமாகவம் இருக்கும்.

மாடுகள் காலையில் முதலில் பருவ அறிகுறிகள் காட்டினால் மாலையிலும், மாலையில் முதல் பருவ அறிகுறிகள் காட்டினால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்யப்படவேண்டும். சில மாடுகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருவ அறிகுறிகள் காட்டினால் 12 முதல் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை கருவூட்டல் செய்வது அவசியம். சுருக்கமாக மாடுகளுக்கு நடுச்சினைத் தருணத்தில் கருவூட்டல் செய்வதே உகந்தது.

பசுக்களை அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும்பொழுது அது அவற்றின் இனவிருத்தித் திறனை பாதிக்கும். முக்கியமாக வெயில் காலங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஊசி போடலாம்.
கிடாரிக் கன்றை இனவிருத்தி செய்யும்போது அது சினைத்தருணத்திற்கு வரும் வயதைக் கணக்கிடுவதோடு மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
கறவை மாடுகள் கன்று போட்ட மூன்று மாதத்திற்குள் தான் நன்கு சினை பிடிக்கும். இதை உணராது பலர் மாடு சினை பிடித்தால் பால் குறைந்துவிடும் என்பார்கள்; மாடு சினை பிடிப்பதை தவிர்ப்பார்கள். சினைக்கு வந்த மாட்டிற்கு கருவூட்டல் செய்ய மாட்டார்கள். நாட்டு மாடுகள் பல சினைப்பட்டதும் பால் கொடுப்பதை குறைத்துவிடும் அல்லது நிறுத்திவிடும். பல எருமைகளும் அப்படியே. இந்த எண்ணத்தில் பலர் கலப்பின பசுக்களுக்கும் காலத்தில் கருவூட்டல் செய்வதில்லை. ஆனால் கலப்பின பசுக்கள் சினை பிடித்தவுடன் பாலை நிறுத்துவதில்லை, பாலை குறைப்பதுமில்லை. இயற்கையாகவே கன்று ஈன்று 2 மாதங்கள் பாலின் அளவு அதிகரித்துகொண்டே செல்லும், பின் 1 மாதம் பாலின் அளவு மாறாமல் இருந்துவிட்டு, பின் 3 மாதத்திற்குமேல் பால் குறைய ஆரம்பிக்கும். இது கருவூட்டல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இயற்கையாக நிகழக்கூடியது. ஆகவே 3 மாதத்தில் சினை பிடிக்கும்போது, சினை பிடித்ததால் தான் பால் குறைகிறது என நினைக்கத் தேவையில்லை.
பலர் எண்ணெய் போன்ற திரவம் (கோழை) வடிவதால், பருவம் அடங்கிய பிறகு சினை ஊசி போடலாம் என நினைத்து பருவம் ஆரம்பித்து 2 நாள் கழித்தே சினை ஊசி போட வருகின்றனர். அப்பொழுது பருவமே இருப்பதில்லை. அவர்கள் நினைப்பது கோழையுடன் சேரத்து விந்துவும் வெளியே வந்துவிடும் என்பதே. உண்மை என்னவெனில், சரியான பருவத்தில் கர்ப்பபையில் செலுத்திய விந்து கோழையுடன் சேர்ந்து வெளியே வராது. ஏனெனில் கோழை உற்பத்தியாகும் இடம் கர்ப்பையின் வாய்ப்பகுதியாகும்.. அந்த இடத்தை கடந்து கர்ப்பப்பைக்குள்தான் விந்தணு செலுத்தப்படுகிறது. ஆகவே கோழை அதிகமாக அடித்தாலும் பரவாயில்லை, முதல் பருவ அறிகுறி தெரிந்ததும் 12 மணி நேரத்திற்குள் முதல் கருவூட்டல் செய்துகொள்ளுங்கள், மேலும் பருவம் 24 மணி நேரத்திற்கு நீடித்தால் மீண்டும் ஒரு கருவூட்டல் செய்துகொள்ளுங்கள்.
கருவூட்டலுக்கு முன் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டலுக்கு கொண்டு செல்லும் மாடுகளை அடித்தோ உதைத்தோ துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (Hormone) சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்துவிடும். இதன் விளைவாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியன் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைப்பட்டுவிடும். இதன் விளைவாக கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பின்பு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
கருவூட்டல் செய்வதற்கு முன்பு மாடுகளின் பிறப்பு உறுப்பினை சுத்தமான நீரினைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். ஏனெனில், பிறப்பு உறுப்பில் சாணம், சிறுநீர் போன்றவை ஒட்டி இருப்பதோடு நுண் கிருமிகளும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவைகள் கருவூட்டல் உபகரணத்தின் வாயிலாக கருப்பையினுள் செல்வதால் கருப்பை அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கருவூட்டலுக்கு பின் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டல் செய்த மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்லாமல் 10 நிமிடங்கள் மர நிழலில் கட்டி வைத்த பின்பு ஓட்டிச் செல்வது நலம். ஏனெனில் உடனடியாக ஓட்டிச் செல்வதால் முன்பே குறிப்பிட்டது போல ஆக்சிடோசின் என்ற கனநீர் தடைபட வாய்ப்பு உள்ளது. சிலர் கருவூட்டல் செய்த மாடுகளின் தலையை உயரமாக உயர்த்தி மரக்கிளை போன்றவற்றில் கட்டி மாட்டை படுக்கவிடாமல் செய்வதோடு தண்ணீர், தீவனம் போன்றவற்றையும் தராமல் பட்டினிபோட்டு விடுவர். இப்படிச் செய்வதன்மூலமாக செலுத்தப்பட்ட விந்தணுக்கள் திரவ ஒழுக்கின் மூலம் வெளியே வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஏனெனில் , விந்தணுக்கள் கருப்பையின் நடுப்பகுதியில் செலுத்தப்படுவதால், பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கு மூலமாக விந்தணுக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை. மாறாக மாடுகளை மேற்கூறிய கொடுமைகளுக்கு உட்படுத்துவதே அதன் சினைப் பிடிப்புத் தன்மையை பாதித்துவிடும். எனவே, கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான அளவு தீவனம், குடிநீர் போன்றவற்றை அளிப்பது அவசியம்.

வெயில் நேரங்களில் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தெளிப்பதன் மூலம் சினைப் பிடிப்பு விகிதத்தை அதிகரிக்கலாம். மேலும் மாட்டிற்கு கருவூட்டல் செய்துவிட்டோம், சினைப் பிடித்துவிடும், மூன்று மாதங்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடாமல், கருவூட்டல் செய்தபின் 21 நாட்களுக்குள் ஏதாவது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து கருவூட்டல் செய்வது மிகவும் அவசியம்.
சினை ஊசி போட்டு 3 மாதம் கழித்து சினை பிடித்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சினை ஊசியில் 40 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே சினை பிடிக்கும். நிறைய பேர் சினை பிடித்துவிட்டது என்ற நம்பிக்கையில் 7-8 மாதம் வரை இருந்துவிட்டு, தற்செயலாக 'எதற்கும் சந்தேகத்திற்கு பார்க்க வந்தேன்' என வருகிறார்கள். அப்பொழுத சில மாடுகள் சினையாக இருப்பதில்லை. இவர்கள் சினை ஊசி போட்டு 3 மாத த்திலேயே சினை பார்த்திருந்தால் 4 மாதம் வீணாவதை தவிர்த்திருக்கலாம்.
சினைத் தருண முடிவில் உதிரப்போக்கு
சில மாடுகளில் சினைத் தருணம் முடிவுற்ற 48 முதல் 96 மணி நேர இடைவெளியில் பிறப்பு உறுப்பு வழியாக உதிரப் போக்கிற்குப்பின் கருவூட்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவூட்டல் செய்த மாடுகளில் காணப்படும் உதிரப்போக்கிற்கும், சினை பிடிப்புத் தன்மைக்கும் தொடர்பு இல்லை. இருந்தபோதிலும், இத்தகைய உதிரப்போக்கு கண்ட மாடுகளில் நோய்க்கிருமிகள் எளிதில் கருப்பையினை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய மாடுகளின் பிறப்பு உறுப்பை நன்றாகக் கழுவி மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்தல் அவசியம் ஆகும்.
கிடாரிகள்
சினை ஊசி போட வரும் பல கிடாரிகள் கர்ப்பப்பை வளர்ச்சி இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கன்றாக இருக்கும்போது தேவையான பால் தராததே ஆகும். கர்ப்பபை வளருவதற்கு காலம் கடந்து நாம் செய்யும் முயற்சிகள் அதிகம் தோல்வியையே தழுவுகின்றன. இதுவே கன்றாக இருக்கும்போது தேவையான பால் மற்றும் தீவனம் அளிக்கும் பெரிய பண்ணைகளில் 2 ஆண்டுகளில் பசுங்கிடாரிகள் கன்று ஈன்று விடுகின்றன. ஆகவே கன்றாக இருக்கும்போதே தேவையான பால் மற்றும் தீவனம் அளித்து கர்ப்பபை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். காலம் கடந்து அதாவது கிடாரியின் 2 வயதில் இதற்கான முயற்சி செயவதை தவிர்க்க வேண்டும்.
கிடாரிகளுக்கு சினை ஊசி போடும்பொழது கீழ்க்கண்ட மூன்று விதிகளும் பின்பற்றப்படவேண்டும்.
கிடாரியின் எடை, அதன் தாயின் எடையில் 3ல் 2 பங்கு எடை அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கிடாரியின் வயது பசுவிற்கு வயதும், எருமைக்கு 2-2½ வயதும் அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை தேவையான வளர்ச்சி அடைந்துவிட்டதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த 3 விதிகளும் ஒத்துப்போனால் மட்டுமே கிடாரிகளுக்கு சினை ஊசி போட வேண்டும்.
பருவ அறிகுறிகள் காட்டாமை
அதிக பால் கொடுக்கும் மாடுகள் பருவ அறிகுறிகள் காட்டும் தன்மையை தற்காலிகமாக இழந்துவிடுகின்றன.
மெலிந்த உடல் நிலையில் உள்ள (உதாரணமாக எலும்புருக்கி நோய் தாக்கிய) மாடுகளில் பருவ அறிகுறி காட்டாமை அதிகமாகக் காணப்படும்.
சத்துப் பற்றாக்குறை காரணமாக இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் கனநீரின் குறைபாடு ஏற்பட்டு இத்தகைய தன்மை ஏற்படுகிறது.
வயதான மாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
கருப்பையின் சூலகத்தல் கடினக்கட்டி ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
அதிக வெப்பநிலை உள்ள காலங்களில் சினைப் பருவம் தோன்றாமை அதிகமாகக் காணப்படுகிறது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பாட்டால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் கால்நடைகளைக் கையாளுவது நல்லது.

பருவத்தே பயிர் செய்வீர்!
பணம் பலம் பெறுவீர்!

பசுந்தீவன உற்பத்தி


பசுந்தீவனத்தை உற்பத்தி செய்தால் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் செலவை கணிசமாக குறைக்கலாம்.

நன்மைகள்


  • பால் உற்பத்தி செலவில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.எனவே பால் உற்பத்தியில் அடர் தீவனத்தை குறைத்து பசுந்தீவனத்தை கொடுத்து தீவனச் செலவை 40 - 50 சதவீதமாக குறைக்கலாம்.

  • உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது.

  • பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.

தானிய வகை
  • சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
  • அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

புல் வகை


  • கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
    கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப்  புல்), கொழுக்கட்டைபுல்,
    ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல்.

  • அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

பயறு வகை


  • வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.
  • அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.

மர வகை

  • அகத்தி,  சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
    ஆச்சா மற்றும் வேம்பு
  • நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை

  • பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை
    1 பங்கும் கொடுக்க வேண்டும் .
  • இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவு சத்துகள்
    சரியான விகிதத்தில் கிடைக்கும்

சிறந்த கலப்பின கறவை மாடுகளைத் தேர்தெடுக்கும் வழிமுறைகள்

சிறந்த கலப்பின கறவை மாடுகளைத் தேர்தெடுக்கும் வழிமுறைகள்

  • அகன்ற மார்பும், நீண்ட உடலமைப்பும், பின்பகுதி நன்கு விரிவடைந்தும், பக்கவாட்டில் பார்க்கும் பொழுது உடல் நீள முக்கோண வடிவமாகவும் இருக்கவேண்டும்.
  • மடியானது தொடைகளுக்கு நடுவே பின்புறம் தொடங்கி வயிற்றின் முன்பாகம் வரை நீண்டு உடலோடு ஒட்டியிருக்க வேண்டும்.
  • மடியில் உள்ள இரத்த நாளங்கள் நன்கு திரண்டு புடைத்து இருக்க வேண்டும்.