மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தமிழில் இணையத்தை மற்றும் தமிழை வளர்க்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.சொற்பெருக்கம் நிறைந்த சொல் வளம் நிறைந்த தமிழை வளர்க்க சபதம் ஏற்போம்.
கணினி மொழித் துறையில், உலகின் பல மொழிகள் ஏற்றம் பெற்று வருகின்றன. பல நாடுகளில், கணினி, அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த, ஆங்கிலம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு மக்கள், தொழில் ரீதியாகவும், கலை ரீதியாகவும் பெரிதும் பயன்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழன் மட்டும், ஆங்கிலம் படித்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதற்கு முக்கிய காரணம், கணினி தமிழ் வளராதது தான். இந்தத் துறையில், பொதுவான விசைப் பலகையைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. இதனால், அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினிகளும், தமிழ் பொறிக்கப்படாத விசைப் பலகைகளோடு வழங்கப்படும் அவலம் நடக்கிறது. கணினி தமிழின் வளர்ச்சிப் பாதை மற்றும் வேகமாக வளர வேண்டியதன் அவசியம் குறித்து, சென்னை பல்கலையின், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளருமான தெய்வசுந்தரம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மாற்ற முடியாது: இருபது ஆண்டுகளுக்கு முன், கணினியில், தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. "ரோமன்' எழுத்தில் தட்டச்சு செய்து, அதை தமிழில் மாற்றி வந்தோம். இதில், தமிழ் மின் கோப்புகளில் சேர்க்கக் கூடிய பக்கங்கள், மிகக் குறைவாக இருந்தன. பின்னர், கணினியில் நேரடியாக தட்டச்சு செய்யும் எழுத்துருவும், விசைப் பலகையும் உருவாயின. "ஆஸ்கி' குறியீட்டின் அடிப்படையில், கணினி தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு விதமான குறியீட்டு முறையை உருவாக்கின. இதனால், ஒரு நிறுவனத்தின் எழுத்துருவை, மற்றொரு நிறுவனத்தின் எழுத்துருவைக் கொண்டு மாற்ற முடியாது. விசைப் பலகைகளும் இது போலவே வேறுபட்டு இருந்தன.
குறைந்த இடம்: கடந்த 1999ல் நடந்த, தமிழ் இணைய மாநாட்டில், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. "டேம், டேப்' என்ற குறியீட்டு தமிழ் எழுத்துருக்களை உருவாக்க, முடிவு செய்யப்பட்டது. "தமிழ் 99' என்ற, தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையும் அறிமுகம் செய்யப்பட்டது. கணினி நிறுவனங்கள், இந்த தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையை பின்பற்ற வேண்டும் என, அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அரசாணை காகிதத்திலேயே உள்ளது. உலகளவில் ஒருங்குறி (யுனிகோட்) முறை உருவாக்கப்பட்டது. இதனால், பன்மொழி ஆவணங்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், யுனிகோட் நிறுவனமும், தமிழ் மொழிக்கு, குறைந்த இடத்தையே ஒதுக்கியுள்ளது. இதை தீர்ப்பதற்கு, "டேஷ்' என்ற யுனிகோட் முறை, முன்வைக்கப் பட்டுள்ளது.
மொழி வளராது: தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும், "பிடிஎப்' கோப்பு வகைக்கு மென்பொருள் தயாரிக்கும் அடோப் நிறுவனம், தமிழ் யுனிகோட் எழுத்துருக்களுக்கு ஏற்ற மென்பொருளை இன்னும் அளிக்கவில்லை. இதனால், தமிழ்ப் பதிப்பாளர்கள், பழைய ஆஸ்கி முறையையே பின்பற்றுகின்றனர். கணினி தமிழில், இது தான் நம் வளர்ச்சியாக உள்ளது. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில், சொற் பிழை திருத்தி, தொடர் பிழை திருத்தி, கணினியே ஆவணங்களை சரிபார்க்கும் நிலை வந்து விட்டது. மேலும், "ஸ்கேன்' செய்யப்பட்ட ஆங்கில ஆவணத்தைப் பதிப்பிக்க வசதி அளிக்கும் ஓ.சி.ஆர்., மென்பொருள்; கணினி முன் பேசினால் தட்டச்சு செய்யும் பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருள்; தட்டச்சு செய்த ஆவணத்தை, பேச்சாக மாற்றும் மென்பொருள்; இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள் ஆகியவற்றை உருவாக்கி விட்டனர். கணினி தமிழில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், இது போன்ற மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இல்லையேல், வீட்டில் பேசப்படும் மொழியாக மட்டுமே, தமிழ் இருந்துவிடும்.
மொழியியல் துறை: தமிழ் மொழி அமைப்பை, கணினி புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் இலக்கணத்தை, கணினி மொழியில் ஆய்ந்து அளிக்க வேண்டும். இதையே, கணினி மொழியியல் துறை என, அழைக்கின்றனர். கணினி மொழியியல் துறையின் வளர்ச்சிக்கு ஏற்பவே, தமிழ் மொழி தொழில்நுட்பம் வளரும். அன்றாட பணிகளில், அலைபேசி, கணினி, "ஐபேட்' போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். எதிர்காலத்தில், இவற்றின் பயன்பாடு பெருமளவு அதிகரிக்கும். எனவே, இந்த சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தமிழ் மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெய்வசுந்தரம் கூறினார். மேலும், ""கணினி தமிழ் எழுத்துரு, விசைப்பலகை என்பதை கடந்து விட்டோம். இனி, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். இதற்கு, தமிழ் கணினி எழுத்துருவிலும், விசைப் பலகையிலும், பொதுவான ஒன்றை அறிவிக்க வேண்டும். அது, தமிழக அரசின் உறுதியான, கடுமையான சட்டத்தின் மூலமே சாத்தியமாகும்,'' என்றார்.
தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக