06 February, 2012
அன்பு நண்பர்களே,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டம் சார்பாக TNSFSATHY.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக !! என வரவேற்கிறோம்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்-சத்தியமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பாக கிராமக் கல்வி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஜனவரிமாதம் 06-ந்தேதி இன்று துவங்கி மூன்று நாட்கள் நான்கு மையங்களில் நடைபெறுகின்றன.
சத்தியமங்கலம் ஒன்றியம் சார்பாக சத்தி-1, சதுமுகை,பகுதிகளுக்கான மையம் சத்தியமங்கலம் காவல்நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த இந்த முகாமின் துவக்கவிழா காலை 10-00 மணிக்குத் துவங்கியது.
மரியாதைக்குரிய வட்டார வள மையத்தின் திட்ட மேற்பார்வையாளர் அவர்கள் முகாமின் துவக்கவுரை ஆற்றிய காட்சி மேலே உள்ள படங்கள்.அருகில் திருமிகு.தொடக்கக்கல்வி முன்னாள் அலுவலர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் .
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் திருமிகு ரகுபதி அவர்கள் கிரமக்கல்விக்குழு உறுப்பினர்களின் கடமையும்,உரிமையும் பற்றி விளக்குகிறார்.அருகில் வட்டார வள மைய திருமிகு.மேற்பார்வையாளர் அவர்களுடன் கல்வியின் சட்டப்படியான உரிமைகள் பற்றி உரைநிகழ்த்த வருகைபுரிந்த திருமிகு.வழக்குரைஞர் அவர்கள்.
திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள், கல்வியின் உரிமைகள்,அரசின் சலுகைகள் பற்றிய விளக்கவுரையினை ஒளிப்படமாக திரையிட அதனை விளக்குகிறார் திருமிகு.G.R.ரகுபதி ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
முட்டாள் வேலைக்காரி-முனியம்மா-01மேலே உள்ள படம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஓரங்க நாடகம்.
திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை-( காளியப்ப கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) அவர்களது படைப்பால் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் ''வேலைக்காரி முனியம்மா'' என்னும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூக சீர்திருத்த நாடகம்.மற்றும்நாடகத்தில் நடிப்பால் அசத்திய மாணவக்குழந்தைகள்.
திருமிகு.நம்பிக்கை மேரி.தலைமை ஆசிரியை-( காளியப்ப கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) அவர்களது படைப்பால் கல்வி கற்றலின் அவசியத்தை வலியுறுத்தும் ''வேலைக்காரி முனியம்மா'' என்னும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூக சீர்திருத்த நாடகம்.மற்றும்நாடகத்தில் நடிப்பால் அசத்திய மாணவக்குழந்தைகள்.
மதியத்திற்குப்பிறகு திருமிகு.ப.மெய்யப்பன் ஆசிரியர் பயிற்றுனர் அவர்களால் கருத்துச்செறிவுள்ள குறும்படமான '' வேலம்மா'' திரையிடப்பட்டது.இதுவும் கல்விக்கான விழிப்புணர்வுகொண்ட சிறந்த மற்றும் ரசனையுள்ள படமாகும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கிராமக்கல்விக்குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்காக போக்குவரத்தின் அத்தியாவசியம் மற்றும் சாலைப்பாதுகாப்பு விதிகள் பற்றிய கருத்துக்களை விளக்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திரு. பரமேஸ்வரன் அவர்கள் கிராமக்கல்விக்குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்காக போக்குவரத்தின் அத்தியாவசியம் மற்றும் சாலைப்பாதுகாப்பு விதிகள் பற்றிய கருத்துக்களை விளக்கினார்.
மேலும், முகாமில் கலந்து கொண்ட ஆசிரிய,ஆசிரியைகளுக்காக மற்றும் மாணவ,மாணவியருக்காக தமிழில் வியாபார தந்திரங்களால் கணிணியில் தட்டச்சு செய்ய பலமுறைகள் கையாளப்பட்டு தமிழையே வெறுக்கும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நமது நுண்ணுணர்வினையும் வெளிப்படுத்தும் இனிய தமிழை ஆர்வமாக,மிக எளிமையாகக் கையாள தமிழ் இணைய ஆய்வறிஞர்களால் உருவாக்கப்பட்ட பொதுமுறையான ''தமிழ்'99'' முறையைப்பயன்படுத்தி மெய்-18 மற்றும் உயிர்-12 ஆக முப்பது எழுத்துக்களைக் கொண்டு மிக எளிமையாகக் கணிணியைக் கையாளலாம் எனவும்.தமிழ்'99 மென்பொருள் http://www.nhm.in இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கணிணியில் உள்ளீடு செய்வது பற்றியும் விளக்கினார்.
பதிவேற்றம்;-PARAMES DRIVER-
TAMIL NADU SCIENCE FORUM-THALAVADY & SATHY.
30 January, 2012
மாவட்ட அளவிலான கிராம கல்விக்குழு துவக்கவிழா
இன்று ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம்-ஈரோடு அலுவலகத்தில் மாவட்ட அளவிலான கிராம கல்விக்குழு துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல் விபரம்
இறை வணக்கம்= தமிழ்த்தாய் வாழ்த்து,
வரவேற்புரை= உதவி திட்ட அலுவலர் அவர்கள்,
தலைமை உரை = கூடுதல் முதன்மை அலுவலர் அவர்கள்,
சிறப்பு துவக்கவுரை = பேரா. ந. மணி அவர்கள்,
நன்றியுரை = திரு.சந்திர சேகர் அவர்கள்,மாவட்ட அலுவலர் ,
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் திருமிகு.பிரபாகரன் அவர்களது மந்திரமாக்கப்பட்ட தந்திரம் என்ற விழிப்புணர்வு செயல்விளக்கம் காட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக