அன்பு நண்பர்களே,TNSFSATHY.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள வருக! வருக!! என வரவேற்கிறோம்.
.சத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வள மையத்தின் கிராமக் கல்வி குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 07-02-2012 இன்று இரண்டாம் நாள்.
மரியாதைக்குரிய வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள்சத்தி ஒன்றியம்- பெரியூர் மையத்தில் கல்விக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பில் விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் இடது கோபி சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் மற்றும் வலது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி & தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.
திருமிகு.சுகாதார ஆய்வாளர் அவர்கள் சுகாதாரம் பற்றி குறிப்பாக பள்ளியில் ஏழாம் வகுப்புக்கு மேல் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உடலியல் ரீதியாக தோன்றும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றிய தெளிவுரை கொடுக்க ஆசிரியைகளுக்கான,பெற்றோர்களுக்கான கடமைகள் பற்றி மிகத்தெளிவாக விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.
திருமிகு.மு.பாலகிருஷ்ணன் M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர்-ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி,வேடர்நகர்,புதுவடவள்ளி-சத்தியமங்கலம் அவர்கள் பள்ளிக்குழந்தைகளிடம் சூழலுக்கேற்ப,குழந்தைகளோடு ஒன்றி உறவுக்கு உறவாக,நட்புக்கு நட்பாக பழகி பாடங்களை சுமையில்லாமல் ஆர்வத்தோடு கற்க ஏற்றவாறு கற்பிப்பது பற்றி விளக்கவுரை அதாவது
''ஆசிரியர் பணி அறப்பணி!,அதற்கே உன்னை அர்ப்பணி!!''
என வார்த்தைகளுக்கேற்ப சுமார் இரண்டு மணி நேரம் தொய்வின்றி கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி அவர்கள் அரசுப்பள்ளி குழந்தைகள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக குறைபட்டு அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்களாகிய நமது செயலாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்.அரசு மானியங்கள் பள்ளிக்கு சரியானமுறையில் பயன்படுத்தப்படுகிறதா?எனக் கண்காணிப்பது பற்றிய விழிப்புரை நிகழ்த்தினார்.அருகில் வார்டு உறுப்பினர் உட்பட மேலும் பல உள்ளூர் பொறுப்பாளர்கள் இருந்தனர்.
அரசியலில் நாங்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் கல்வி என்பது பொதுமக்கள் என்ற வகையில் எங்களது குழந்தைகளுக்கும் அவசியம். என பயிற்சியில் கலந்துகொள்ள வருகை தந்தார்பழைய கலையனூர் மக்கள் பிரதிநிதி அவர்கள்.
வருகை புரிந்த கிராமப் பெரியோர்களுக்கு வழிகொடுத்து, பிறகு மீண்டும் தமது தமிழ்ச்சொல்லாடலால் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த சிந்திக்கத்தூண்டும் கதைகளால் அரங்கத்தை கலகலக்க வைத்த திருமிகு.மு.பாலகிருஷ்ணன்.M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர் அவர்கள்.
மரியாதைக்குரிய ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் அரசு கல்விக்காக செலவிடப்படும் நிதிகள் மற்றும் கட்டுமானங்கள்,அதனைக் கண்காணிப்பது,பாதுகாப்பது என கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடமைகள் & உரிமைகள் பற்றி விளக்கினார்.
பெரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணிணியில் சர்வ சாதாரணமாக நுட்பங்களைக் கையாண்ட காட்சி மேலே
கோபி செட்டிபாளையம் சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் சுகாதாரம் பற்றி கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.(அதோடு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்,என அனைவருக்கும் அவரது கைபேசி எண் கொடுத்த பாங்கு பாராட்டுக்குரியது)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திருமிகு.பரமேஸ்வரன் அவர்கள் அரசுப்பள்ளி மற்றும் அதில் பணி புரியும் தற்போதைய ஆசிரியர்கள் எவ்விதத்திலும் திறமை குறைந்தவர்களல்லர்!. என ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரின் செயல்,மற்றும் கோவை மாவட்டம்-காரமடை ஊராட்சி ஒன்றியம்-ராமாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் செயல்பாடு பற்றி ஆதாரத்துடன் விளக்கி இங்கும் பொதுமக்கள் மனது வைத்தால் இங்குள்ள அரசுப்பள்ளிகளையும் சர்வதேச தரமுள்ள பள்ளிகளுக்கு இணையாக மாற்ற முடியும்.என தெளிவுரை நிகழ்த்தினார்.அதற்காக கையாண்ட ஆதாரங்கள் கீழ் கண்டவாறு. ஐந்து ஆதாரங்களை பிற வலைப்பதிவுகளிலிருந்து குறுந்தட்டில் பதிவிட்டுக்கொண்டுவந்து பெரியூர்- முகாமில் திரையிட்டு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.மேலும் ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக பயனுள்ள தகவலாக - தமிழ்'99 தட்டச்சு முறையின் எளிமை பற்றியும் nhmwriter.in வலைத்தளத்தில் இருந்து தமிழ் 99 மென்பொருள் தரவிறக்கம் செய்து எளிமையாகக் கையாள்வது பற்றி விளக்கமளித்தார்.தட்டச்சு செய்யும் முறை பற்றியும் விளக்கம் கொடுத்தார்.
Showing posts with label அரசுப்பள்ளியா இது. Show all posts
Tuesday, September 13, 2011
அரசுப்பள்ளியா இது
அன்பு நண்பர்களே,
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.இந்த வலைப்பதிவில் அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஒரு அரசு துவக்கப்பள்ளியினை இங்கு அனைவரும் அறிவோம்.
அரசுப்பள்ளியின் தரத்தினை சர்வதேசப் பள்ளியின் தரத்திற்கு இணையாக உள் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தி உயர்த்திய சாதனையாளர்கள் இராமம்பாளையம் பள்ளி தலைமையாசிரியை மரியாதைக்குரிய திருமதி;சரஸ்வதி மற்றும் ஆசிரியர் மரியாதைக்குரிய திரு; ப்ராங்ளின் ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.இதோ அந்தப்பள்ளி;-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
பள்ளி பற்றிய தகவல்கள்:
1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள். 2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள். 3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம். 4. DVD - கள் அடங்கிய Digital நூலகம். 5. கணினி. 6. தொலைக்காட்சி. 7. DVD Player. 8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள். 9. கணித உபகரணங்கள். 10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள். 11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள். 12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை. 13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை. 14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி. 15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள். 16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள். 17. உயர் தர தள அமைப்பு. 18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை. 19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள். 20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி
-paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi
பள்ளி பற்றிய தகவல்கள்:
- அமைதியான கிராமச் சூழல்.
- போதுமான கட்டட வசதி.
- சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
- கணினி பயிற்சி வகுப்புகள்.
- ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
- பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
- ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
- விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
- தலைமைத்துவப் பயிற்சி.
- தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
- மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
- மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
- வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Diary). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).
மாதிரி வகுப்பறை (Model Classroom)
1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள். 2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள். 3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம். 4. DVD - கள் அடங்கிய Digital நூலகம். 5. கணினி. 6. தொலைக்காட்சி. 7. DVD Player. 8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள். 9. கணித உபகரணங்கள். 10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள். 11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள். 12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை. 13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை. 14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி. 15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள். 16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள். 17. உயர் தர தள அமைப்பு. 18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை. 19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள். 20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி
-paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi
Showing posts with label மாவட்ட ஆட்சியர்-ஈரோடு. Show all posts
Friday, June 17, 2011
(24)ஈரோடு மாவட்ட ஆட்சியர்- சமூகப் பணி
மாவட்ட ஆட்சியரின் சமூக நற்பணி
அன்பு நண்பர்களே.
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
நமது மாவட்டமாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் பள்ளிகளின் தரத்தை விட எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை என்ற நிரூபணத்திற்காகவே
(தனியார் பள்ளிகளில் தகுதிக்கும் மீறி அலைந்து திரிந்து கடன் வாங்கி வீண் செலவு செய்யும் நம் போன்ற நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்று கூடக்கருதலாம்)
தமது குழந்தையை ஈரோடு குமலன் குட்டை ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் சேர்த்து! அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களின் சேவைக்கு புதுமையான நற்சான்று வழங்கி இமாலயச் சாதனை புரிந்துவிட்டார்.
அதற்காக மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அய்யா அவர்களின் துணைவியார் மருத்துவர் அவர்களுக்கும்
ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும்,
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்கத்தின் சார்பாகவும்,
தேனீக்கள் சமூக சேவை அமைப்பின்(தாளவாடி & சத்தியமங்கலம்) சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அய்யா அவர்களது இந்த மகத்தான சேவையானது அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது மட்டுமின்றி
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் பணி சிறப்பாகத் தொடர ஊக்க மருந்தாக அமைந்துள்ளது எனலாம்.
இலவசம் என்றாலே அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிந்திக்காமல் ஏளனம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
இதே முறையை சமூதாய உணர்வுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
அனைத்துப்பகுதிகளிலும் பணியாற்றும் குறிப்பாக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடமை உணர்ந்து
''ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி''
என்ற கூற்றுக்கேற்ப கடமை உணர்ந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்ப்பாகும்.
மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம் மகளுக்கு மதிய உணவும், இலவச சீருடையும் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்திருக்கும்! அவரது சமூகப் பார்வை
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு ஏற்ப சாதி,மத,இன வேறுபாடின்றி அனைவரும் மனிதகுலமே, என இந்த சமூகத்திற்கே வழிகாட்டிவிட்டார்.
அதைவிட முக்கியமாக ஆட்சிப்பணி புரியும் அய்யா அவர்களும், அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பணி புரியும் அவரது துணைவியார் அவர்களும் படித்த சிறந்த பண்பாளர்கள் என்பதனையும்,அவர்களது முற்போக்கான சிந்தனைக்கேற்ப சமூகப்பணி சிறப்பாகச் செய்பவர்கள் என்பதனையும் இதன் மூலம் அனைவரும்உணரச் செய்து விட்டனர்.
அனைத்து தரப்பு அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், ,பணியாளர்களும் அவரவர் பணிக்கேற்ப கடமையுணர்ந்து தம்மால் இயன்றவரை சமூகப் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும்.
(குறைந்தது வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கையூட்டுப் பெறுவதையாவது தவிர்த்து
அவர்கள் வரிப்பணத்தில்தான் கை நிறையச் சம்பளமாகப் பெறுகிறோம் என்பதனை உணர்ந்தாவது
தம் கடமையைச் செய்ய வேண்டும்)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய ஆனந்தக்குமார் அவர்களைப் போல அனைவரின் எண்ணங்களும், செயல்களும் அமையுமேயானால்
நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய டாக்டர்;அப்துல் கலாம் அவர்களின் ''வல்லரசுநாடு'' எனும் இந்தியாவின் கனவு நனவாகும் தூரம் மிக தொலைவில் இல்லை எனலாம்.
வெற்றியும் பெறலாம்.
சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் பிறந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த நமது ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்..என....
parameswaran.c
Driver / Tamilnadu Transport Corporation / Thalavadi-Branch / Erode - Divisionகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி.அரசுப்பள்ளி ஆசிரியரான ஃப்ராங்ளின் தற்கால வழிகாட்டி.
தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.
பள்ளி முகப்பு |
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு.அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின் |
பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும்,ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும்,பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல்,அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.
வகுப்பறை |
மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது.
எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி |
- பளபளக்கும் தரை,
- தரமான பச்சை வண்ணப்பலகை,
- வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்,
- அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
- வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,
- தெர்மோகூல் கூரை,
- மின்விசிறிகள்,
- உயர்தர நவீன விளக்குகள்,
- கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்,
- மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
- வேதியியல் உபகரணங்கள்,
- கணித ஆய்வக உபகரணங்கள்,
- முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,
- மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்,
- அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
- மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
- அனைவருக்கும் தரமான சீருடை,
- காலுறைகளுடன் கூடிய காலணி,
- முதலுதவிப்பெட்டி,
- தீயணைப்புக்கருவி,
- உயர்திறன் வாய்ந்த கனிணி,
- காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.
கணினி உட்பட கல்வி உபகரணங்கள் |
இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே.
மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி |
தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.
பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.
காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும்எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.
ஊர்மக்களுடன் ஆசிரியர்கள் |
மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின்பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.
இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது.இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.
தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை“திரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.
ஆசிரியர் திரு. ப்ராங்ளின் |
திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர் “எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்”தெரிவிக்கிறார்.
பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.
மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை,அடையாள அட்டை, ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு,திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.
இந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும்.அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா,அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில்,லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன?அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள்மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி
இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?
ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா?மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!
திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக