செவ்வாய், 5 ஜூன், 2012

வெள்ளி இடை நகர்வு-2012 TRANSIT OF VENUES

அன்பு நண்பர்களே,
வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்தி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                ''TRANSIT OF VENUES''  
                          என்னும்
 ஓர் அபூர்வ வான் நிகழ்வான வெள்ளி இடை நகர்வு-2012 என்ற  அறிவியல் அதிசய நிகழ்வு நாளை நடைறுகிறது.

 
             இந்த அபூர்வ வான் நிகழ்வானது 105 ஆண்டுகள் மற்றும் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறைஎட்டு ஆண்டுகள் இடைவெளியில் இருமுறை நடைபெறும்.
            அந்த அடிப்படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஜூன் ஆறாம் தேதி காலை5-45 மணி முதல் காலை 10-20 மணிவரை நடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.  
                  இந்த அறிவியல் அதிசய நிகழ்வானது இனி நமது தலைமுறையினர் பார்க்க இயலாது.ஏனெனில் இனி வருகிற 2117 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் நடைபெறும். அதாவது நூற்றுஐந்து ஆண்டுகள் கழித்துதான் இந்த நிகழ்வானது நடைபெறும்.
                இது அறிவியலார் கணிப்பு ஆகும்.
   

     இந்த அறிவியல் அதிசய நிகழ்வினை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் அறிந்து கொள்வதற்காக   தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் வெளியிட்டுள்ள''வெள்ளி இடை நகர்வு 2012-ஓர் அபூர்வ வான் நிகழ்வு''  துண்டு பிரசுரத்தினையும் மற்றும்  வாழ்நாளில் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம்''ஜூன் 6,2012 வெள்ளி இடை மறிப்பு  வாழ்நாளில் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம்''     என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கையேட்டினையும்
 சத்தி வட்டாரத்தில் பேருந்து நிலையம்,சத்தி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில்   தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -சத்தியமங்கலம்-பொறுப்பாளர் திரு.B.வேலுமணி அவர்கள் 5-6-2012 ந்தேதியான  இன்று
  காலை முதல் மாலை வரை அறிவியல் இயக்க பிரச்சாரம் செய்து பள்ளிக்குழந்தைகளுக்கும்,பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


             திரு.B.வேலுமணி T.N.S.F. SATHY  அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மையம்-ஈரோடு மாவட்டம்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் -அறிவியல் வெளியீடான  
  ''ஜூன் 6,2012 வெள்ளி இடை மறிப்பு  வாழ்நாளில் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம்''       
              என்ற அறிவியல் விளக்கக் கையேட்டினை  பள்ளி மாணவி ஒருவருக்கு கொடுத்து அறிவியல் விளக்கம் கொடுத்த காட்சி.
இடம் =சத்தியமங்கலம்- கரட்டூர்-நேரம்-மாலை ஆறு மணி தேதி;5-6-2012













   திரு.B.வேலுமணி T.N.S.F.SATHYஅவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி மையம்-ஈரோடு மாவட்டம் வெளியிட்ட ''வெள்ளி இடை நகர்வு 2012-ஓர் அபூர்வ வான் நிகழ்வு'' என்ற துண்டு பிரசுரத்தினை பள்ளி மாணவி ஒருவருக்கு கொடுத்து அறிவியல் விளக்கம் கொடுத்த காட்சி இது.
இடம் =சத்தியமங்கலம்- கரட்டூர்-நேரம்-மாலை ஆறு மணி தேதி;5-6-2012


      பதிவேற்றம்;-
     PARAMESWARAN.C // 
     TAMIL NADU SCIENCE FORUM // 
        THALAVADY - ERODE Dt.