திங்கள், 10 நவம்பர், 2014

கணினியும்,மொபைலும் -இயங்குதளமும்

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 இந்தப்பதிவில் கணினி இயங்குதளம் மற்றும் மொபைல் போன் இயங்குதளம்  பற்றி காண்போம்.
           
             மோட்டார் வாகனங்கள் உட்பட தொழிற்சாலை இயந்திரங்கள் வரை அனைத்திற்கும் குறிப்பிட்ட வேலைகளைச்செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன.ஆனால் 

                  கணினிக்கு மட்டும் குறிப்பிட்ட வேலையைச்  செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்படாமல் கொடுக்கும் கட்டளைகளை ஒழுங்காகப் பின்பற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
                        கணினி பின்பற்ற வேண்டிய  கட்டளைகளை புரோகிராம் என்கிறோம்.கணினி ஒவ்வொரு புரோகிராம்களையும் இயக்குகிறது.அதாவது ஒவ்வொரு கட்டளைகளையும் வரிசையாகப் பின்பற்றுகிறது என்று பொருள் ஆகும்.

   கணினி என்பது நமது உடலைப் போன்றது. வன்பொருட்களைக் கொண்டது. அதாவது  உறுப்புக்களைக்  கொண்டது. இயங்குதளம் என்பது மென்பொருள் ஆகும். நமது உயிரைப்போன்றது.

                 உயிர் இல்லாமல் உடலால் எவ்வித இயக்கமும் இல்லை.பயன்களும் இல்லை.வன்பொருட்கள் என்பன கணினி திரை,அமைப்பின் தொகுப்பு,விசைப்பலகை,சுட்டெலி,மின்வழங்கி போன்றவை.நமது கண்களுக்கு தெரியும் திடப்பொருட்களால் ஆனவை.

           மென்பொருட்கள் என்பன கண்ணுக்குத்தெரியாது.கட்டளைத்தொகுப்பு ஆகும். 
                 மென்பொருளில் இரு பிரிவுகள் உள்ளன.அவை (1)அப்ளிகேசன் (செயலி) சாப்ட்வேர்,(2)சிஸ்டம் சாப்ட்வேர் (தளத்தை இயக்குபவை-இயங்குதளம்) ஆகும். 

                   குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வேலையை செய்ய ஒரு புரோகிராம் திட்டமிடல் தேவை.உதாரணமாக ஒரு தேதி மற்றும் நேரத்தைக்குறிப்பிட ஒரு புரோகிராம் எழுத வேண்டும்.நமது விருப்பங்களைத்தேடுவதற்கு ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

             இவ்வாறு சிறியதிலிருந்து பெரியவை வரை எல்லா புரோகிராம்களும் சேர்ந்த தொகுப்பே மென்பொருள் என்கிறோம்.
                இந்த மென்பொருள்ளில் ஒரு பிரிவுதான் ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளம் ஆகும்.இந்த ஆபரேட்டிங் சிஸ்டம்தான் அப்ளிகேசன் சாப்ட்வேர் எனப்படும் செயலி மென்பொருளுக்கும் கணினி வன்பொருளுக்கும் இடையில் இணைப்பு கொடுக்கும் பாலமாக விளங்குகிறது.

                      இந்த இயங்கு தளமானது அனைத்து வகையான மின் சாதனங்களுக்கும் இயங்குவதற்கான புரோகிராம்களை எழுதி  உள்ளீடு செய்து பயன்படுத்தப்படுகின்றன.உதாரணமாக வாசிங் மெசின்,மைக்ரோ ஓவன்,குழ்தைகளின் விளையாட்டுப்பொம்மைகள் போன்றவை...
   
                கணினியில் பல பணிகளை மேலாண்மை செய்வது ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். அவை உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தல்,நினைவகத்தை மேலாண்மை செய்தல்,பணிகளை மேலாண்மை செய்தல்,கோப்புகளை மேலாண்மை செய்தல் ஆகும்.விசைப்பலகை,திரை,அச்சிடல்,போன்ற வன்பொருட்களை கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் மென்பொருளாகும்.
         
                 கணினி உபயோகத்திற்கு ,டாஸ்,விண்டோஸ்,யுனிக்ஸ்,லினக்ஸ் என பல ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

                    மொபைல் உபயோகத்திற்கு ஆன்டிராய்டு,விண்டோஸ் , சிம்பியன் , பிளாக் பெர்ரி , ரிம் , ஆப்பிள் ஐபோன்,வெப் ஓ.எஸ் என பலவகை ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன. 

                     இவற்றில் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதள மென்பொருள் மட்டும் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இலவசமானது ஆகும்.இது சுதந்திரமாக செயல்படும் மென்பொருள் ஆகும்.

                   மற்றவைகளுக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும்.அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் எந்த ஒரு மாற்றமோ,பயன்பாடோ செய்ய வேண்டும்.ஆனால் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு ஓ.எஸ் இலவசமானது.கட்டுப்பாடற்றது.

                   ஆன்டிராய்டு மென்பொருளை உலகளவில் தன்னார்வமுள்ள பல மென்பொருள் தயாரிப்பாளர்கள் பல லட்சம் மென்பொருட்களை இலவசமாகவும்,குறைந்த கட்டண விலையிலும் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான  சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
             இதன் சிறப்பு பொது விநியோக முறையாகும்.இதை யார் வேண்டுமானாலும் கேட்காமலேயே தங்களது மொபைலில் நிறுவி வெளியிட்டுக்கொள்ளலாம்.

ஆன்டிராய்டு போன் இன்று நம் வசமே!

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 ஆன்டிராய்டு போன் இன்று  நம் வசமே!

               இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம். அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.

போனுடன் வந்த சாப்ட்வேர்

மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய சாப்ட்வேர் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் சாப்ட்வேர் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packingஅல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கம்ப்யூட்டர்களிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் "All" என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும். 
 
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக

மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு "Bandwidth management" என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Reduce data usage" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும். 
 
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு

நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
 
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு

ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம். 

காட்சியை அழகுபடுத்த உங்கள் ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.

தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை

ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும். 
 
கீ போர்ட் மேம்படுத்தல்

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word predictionவசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 
 
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு

ஆண்ட்ராய்ட் சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments),பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.

அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் "Show notifications" என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது. 

முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர

உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு "Manage labels" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து "Sync messages" என்பதனைத் தேர்ந்தெடுத்து, "Sync: Last 30 days" என்பதற்கு மாற்றவும். இறுதியாக, "Label notifications" என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.

திரைக் காட்சி ஸூம் செய்திட

பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டை ப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு "Force enable zoom" என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.
நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் காலர் ரிங்டோன்: உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.
பிடித்த விடங்களை சேமிக்க: உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.
பவர் ஸ்ட்ரிப்: ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.
கால் ஸ்கிரீனிங்: ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு – ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.
திகதியை அறிய: ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.
லைவ் வால் பேப்பர்கள்: ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
டாஸ்க் கில்லர்: பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூமிங் ஆப்ஷன்: ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் டெஸ்ட்: மெனு – மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.
நேவிகேஷன் ஷார்ட்க்ட்: இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.
பிரவுஸர்: ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்.
- See more at: http://www.tamilserialtoday.com/2014/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/#sthash.vfC5vwgG.dpuf

ஆன்டிராய்டு போன் பயன்பாட்டில் பிரச்சனைக்கு தீர்வு....

 மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                     இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாமும் ஆன்டிராய்டு போனை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.ஆன்டிராய்டு போனில் பயன்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வது பற்றி பார்ப்போம். 

 (1) அடிக்கடி மெமரி பிரச்சினை வருகிறதா?

இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கேச்சி நிரம்பிவிடுவது தான், இதை சரி செய்ய ஆன்டிராய்டு சந்தையில் கேச்சி க்ளினர் என்ற ஆப் கிடைக்கின்றது. இந்த ஆப் இந்த பிரச்சனையை சரி செய்து விடும்.

(2)கேம்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறதா?
ஒவ்வொரு கேமும் ஒவ்வொரு வகையான கிராபிக்ஸை பயன்படுத்தும். இதனால் நீங்க போனை வாங்கும் முன் சோதனை செய்துகொள்வது அவசியம்.

(3)ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை முழுமையாக அழிக்க வேண்டுமா?
பாக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷன் இதற்கு சரியான தீர்வாக இருக்கும், இதை செட்டிங்ஸ் - எஸ்டி போன் ஸ்டோரேஜ் சென்று வேலையை முடித்து கொள்ளலாம்.

(4)போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்க போன் தவறி நீரில் விழுந்தால் முதலில் வேகமாக பேட்டரியை கழற்றி விட்டு, முடிந்த வரை எல்லா பாகங்களையும் காய வையுங்கள், 72 மணி நேரம் காய வைத்த பின் பயன்படுத்தலாம், இது வேலை செய்யலாம்.

(5)ஆன்டிராய்டு டேட்டாவை எப்படி நிறுத்துவது?
ஆன்டிராய்டு சந்தையில் கிடைக்கும் ஏபிஎன்டிராய்டு (APNdroid) ஆப் உங்க ஆன்டிராய்டு போனின் டேட்டாக்கள் அனைத்தையும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் சிறிய விட்ஜெட் மூலம் ஆஃப் செய்து விடும்.

(6)ஆன்டிராய்டு போன் ஜாம் ஆகுதா?
இது எல்லோருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை. இதற்கான எளிய தீர்வு உங்க போனை ஒரு முறை ரீசெட் செய்தால் போதுமானது.

(7)பதிவிறக்கம் செய்யும் போது பிரச்சனையா?
சில ஆன்டிராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு காரணம் ஆன்டிராய்டில் சில ஆப்கள் அதிக ரெசல்யூஷனை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

(8)வைபை கனெக்ட் ஆனதை காட்டவில்லையா?
வயர்லெஸ் நெட்வர்க்ஸ் - வைபை செட்டிங்ஸ் சென்று மெனு பட்டனை அழுத்துங்கள், அங்கு அட்வான்ஸ்டு ஆப்ஷனை தெரிவு செய்து ஸ்லீப் பாலிசியில் நெவர் ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.

(9)டேட்டா பயன்பாட்டை கண்காணிப்பது எப்படி?
மை டேட்டா மேனேஜர் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். இந்த ஆப் நீங்க பயன்படுத்தும் டேட்டாக்களின் விவரங்களை சூப்பராக பட்டியலிடும்.

(10)கீபோர்டு பயன்படுத்த கடினமாக இருக்கிறதா?
இந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருக்கின்றது. இதன் எடுத்துக்காட்டுத்தான் ஸ்லைடு, இதன் மூலம் டைப்பிங் எளிதாக முடிந்து விடும்.

(11)எஸ்டி கார்டு பிரச்சனையா?
ஆன்டிராய்டில் கூடுதல் மெமரி கார்டு உபயோகிக்கும் போது அது வேலை செய்யவில்லை எனில் அந்த கார்டை கணினியில் போட்டு ரீபார்மேட் செய்யுங்கள்.

(12)சூரிய வெளிச்சத்தில் ஸ்கிரீனை பார்க்க முடியவில்லையா?
இதற்கு சரியான தீர்வு ஆன்டி கிளேர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர், இது சூரிய வெளிச்சத்திலும் ஸ்கிரீனை பார்க்க முடியும்.

(13)ஆப்ஸ்களை டெலீட் செய்வது எப்படி?
செட்டிங்ஸ் - அப்ளிகேஷன்ஸ் - மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

(14)ஸ்கிரீன் க்ராக் ஆனால் என்ன செய்ய வேண்டும்?
சில பிரபலமான போன்களுக்கான பாகங்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கின்றன, இல்லாத சமயத்தில் நீங்க அலசி ஆராய்ந்து ஸ்கிரீனை மாற்றுங்கள்.

(15)பாஸ்வார்டு என்டர் செய்ய நீண்ட நேரம் ஆகிறதா?
செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - செட் அப் ஸ்கிரீன் லாக் தெரிவு செய்து பேட்டர்ன் பாஸ்வார்டு கொடுங்கள்.

(16)மேப்களில் லொகேஷன் சரியாக காட்ட வில்லையா?
செட்டிங்ஸ் - லொகேஷன் - யூஸ் ஜிபிஎஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள்.

(17)ட்ச் ஸ்கிரீன்
ஒவ்வொரு சமயம் நமது டச் ஸ்கிரீன் நமக்கு உச்ச கட்ட பிரச்சனையை தரும். அப்போது ரீசெட் செய்து பாருங்கள்.

(18)ப்ளாஷிங் எல்ஈடி
உங்களுக்கு இது பிடிக்கவில்லை எனில் செட்டிங்ஸ் - டிஸ்ப்ளே - நோட்டிப்பிக்கேஷன் ப்ளாஷ் சென்று எல்லா டிக் மார்க்களையும் எடுத்து விடுங்கள்.