திங்கள், 10 நவம்பர், 2014

ஆன்டிராய்டு போன் பயன்பாட்டில் பிரச்சனைக்கு தீர்வு....


 மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
                     இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாமும் ஆன்டிராய்டு போனை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.ஆன்டிராய்டு போனில் பயன்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டால் அதை சரி செய்வது பற்றி பார்ப்போம். 




 (1) அடிக்கடி மெமரி பிரச்சினை வருகிறதா?


இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கேச்சி நிரம்பிவிடுவது தான், இதை சரி செய்ய ஆன்டிராய்டு சந்தையில் கேச்சி க்ளினர் என்ற ஆப் கிடைக்கின்றது. இந்த ஆப் இந்த பிரச்சனையை சரி செய்து விடும்.




(2)கேம்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கிறதா?
ஒவ்வொரு கேமும் ஒவ்வொரு வகையான கிராபிக்ஸை பயன்படுத்தும். இதனால் நீங்க போனை வாங்கும் முன் சோதனை செய்துகொள்வது அவசியம்.


(3)ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை முழுமையாக அழிக்க வேண்டுமா?
பாக்ட்ரி டேட்டா ரீஸ்டோர் ஆப்ஷன் இதற்கு சரியான தீர்வாக இருக்கும், இதை செட்டிங்ஸ் - எஸ்டி போன் ஸ்டோரேஜ் சென்று வேலையை முடித்து கொள்ளலாம்.

(4)போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்க போன் தவறி நீரில் விழுந்தால் முதலில் வேகமாக பேட்டரியை கழற்றி விட்டு, முடிந்த வரை எல்லா பாகங்களையும் காய வையுங்கள், 72 மணி நேரம் காய வைத்த பின் பயன்படுத்தலாம், இது வேலை செய்யலாம்.

(5)ஆன்டிராய்டு டேட்டாவை எப்படி நிறுத்துவது?
ஆன்டிராய்டு சந்தையில் கிடைக்கும் ஏபிஎன்டிராய்டு (APNdroid) ஆப் உங்க ஆன்டிராய்டு போனின் டேட்டாக்கள் அனைத்தையும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் சிறிய விட்ஜெட் மூலம் ஆஃப் செய்து விடும்.

(6)ஆன்டிராய்டு போன் ஜாம் ஆகுதா?
இது எல்லோருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை. இதற்கான எளிய தீர்வு உங்க போனை ஒரு முறை ரீசெட் செய்தால் போதுமானது.

(7)பதிவிறக்கம் செய்யும் போது பிரச்சனையா?
சில ஆன்டிராய்டு ஆப்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு காரணம் ஆன்டிராய்டில் சில ஆப்கள் அதிக ரெசல்யூஷனை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

(8)வைபை கனெக்ட் ஆனதை காட்டவில்லையா?
வயர்லெஸ் நெட்வர்க்ஸ் - வைபை செட்டிங்ஸ் சென்று மெனு பட்டனை அழுத்துங்கள், அங்கு அட்வான்ஸ்டு ஆப்ஷனை தெரிவு செய்து ஸ்லீப் பாலிசியில் நெவர் ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.

(9)டேட்டா பயன்பாட்டை கண்காணிப்பது எப்படி?
மை டேட்டா மேனேஜர் இதற்கு சரியான தீர்வாக இருக்கும். இந்த ஆப் நீங்க பயன்படுத்தும் டேட்டாக்களின் விவரங்களை சூப்பராக பட்டியலிடும்.

(10)கீபோர்டு பயன்படுத்த கடினமாக இருக்கிறதா?
இந்த பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருக்கின்றது. இதன் எடுத்துக்காட்டுத்தான் ஸ்லைடு, இதன் மூலம் டைப்பிங் எளிதாக முடிந்து விடும்.

(11)எஸ்டி கார்டு பிரச்சனையா?
ஆன்டிராய்டில் கூடுதல் மெமரி கார்டு உபயோகிக்கும் போது அது வேலை செய்யவில்லை எனில் அந்த கார்டை கணினியில் போட்டு ரீபார்மேட் செய்யுங்கள்.

(12)சூரிய வெளிச்சத்தில் ஸ்கிரீனை பார்க்க முடியவில்லையா?
இதற்கு சரியான தீர்வு ஆன்டி கிளேர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர், இது சூரிய வெளிச்சத்திலும் ஸ்கிரீனை பார்க்க முடியும்.

(13)ஆப்ஸ்களை டெலீட் செய்வது எப்படி?
செட்டிங்ஸ் - அப்ளிகேஷன்ஸ் - மேனேஜ் அப்ளிகேஷன்ஸ் சென்று உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷனை அன் இன்ஸ்டால் செய்யலாம்.

(14)ஸ்கிரீன் க்ராக் ஆனால் என்ன செய்ய வேண்டும்?
சில பிரபலமான போன்களுக்கான பாகங்கள் இணையத்தில் சுலபமாக கிடைக்கின்றன, இல்லாத சமயத்தில் நீங்க அலசி ஆராய்ந்து ஸ்கிரீனை மாற்றுங்கள்.

(15)பாஸ்வார்டு என்டர் செய்ய நீண்ட நேரம் ஆகிறதா?
செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - செட் அப் ஸ்கிரீன் லாக் தெரிவு செய்து பேட்டர்ன் பாஸ்வார்டு கொடுங்கள்.

(16)மேப்களில் லொகேஷன் சரியாக காட்ட வில்லையா?
செட்டிங்ஸ் - லொகேஷன் - யூஸ் ஜிபிஎஸ் சாட்டிலைட்ஸ் ஆப்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள்.

(17)ட்ச் ஸ்கிரீன்
ஒவ்வொரு சமயம் நமது டச் ஸ்கிரீன் நமக்கு உச்ச கட்ட பிரச்சனையை தரும். அப்போது ரீசெட் செய்து பாருங்கள்.

(18)ப்ளாஷிங் எல்ஈடி
உங்களுக்கு இது பிடிக்கவில்லை எனில் செட்டிங்ஸ் - டிஸ்ப்ளே - நோட்டிப்பிக்கேஷன் ப்ளாஷ் சென்று எல்லா டிக் மார்க்களையும் எடுத்து விடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக