திங்கள், 10 நவம்பர், 2014

கணினியும்,மொபைலும் -இயங்குதளமும்

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.இணையதள தமிழ் நண்பர்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 இந்தப்பதிவில் கணினி இயங்குதளம் மற்றும் மொபைல் போன் இயங்குதளம்  பற்றி காண்போம்.
           
             மோட்டார் வாகனங்கள் உட்பட தொழிற்சாலை இயந்திரங்கள் வரை அனைத்திற்கும் குறிப்பிட்ட வேலைகளைச்செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றன.ஆனால் 

                  கணினிக்கு மட்டும் குறிப்பிட்ட வேலையைச்  செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்படாமல் கொடுக்கும் கட்டளைகளை ஒழுங்காகப் பின்பற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
                        கணினி பின்பற்ற வேண்டிய  கட்டளைகளை புரோகிராம் என்கிறோம்.கணினி ஒவ்வொரு புரோகிராம்களையும் இயக்குகிறது.அதாவது ஒவ்வொரு கட்டளைகளையும் வரிசையாகப் பின்பற்றுகிறது என்று பொருள் ஆகும்.

   கணினி என்பது நமது உடலைப் போன்றது. வன்பொருட்களைக் கொண்டது. அதாவது  உறுப்புக்களைக்  கொண்டது. இயங்குதளம் என்பது மென்பொருள் ஆகும். நமது உயிரைப்போன்றது.

                 உயிர் இல்லாமல் உடலால் எவ்வித இயக்கமும் இல்லை.பயன்களும் இல்லை.வன்பொருட்கள் என்பன கணினி திரை,அமைப்பின் தொகுப்பு,விசைப்பலகை,சுட்டெலி,மின்வழங்கி போன்றவை.நமது கண்களுக்கு தெரியும் திடப்பொருட்களால் ஆனவை.

           மென்பொருட்கள் என்பன கண்ணுக்குத்தெரியாது.கட்டளைத்தொகுப்பு ஆகும். 
                 மென்பொருளில் இரு பிரிவுகள் உள்ளன.அவை (1)அப்ளிகேசன் (செயலி) சாப்ட்வேர்,(2)சிஸ்டம் சாப்ட்வேர் (தளத்தை இயக்குபவை-இயங்குதளம்) ஆகும். 

                   குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வேலையை செய்ய ஒரு புரோகிராம் திட்டமிடல் தேவை.உதாரணமாக ஒரு தேதி மற்றும் நேரத்தைக்குறிப்பிட ஒரு புரோகிராம் எழுத வேண்டும்.நமது விருப்பங்களைத்தேடுவதற்கு ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

             இவ்வாறு சிறியதிலிருந்து பெரியவை வரை எல்லா புரோகிராம்களும் சேர்ந்த தொகுப்பே மென்பொருள் என்கிறோம்.
                இந்த மென்பொருள்ளில் ஒரு பிரிவுதான் ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்குதளம் ஆகும்.இந்த ஆபரேட்டிங் சிஸ்டம்தான் அப்ளிகேசன் சாப்ட்வேர் எனப்படும் செயலி மென்பொருளுக்கும் கணினி வன்பொருளுக்கும் இடையில் இணைப்பு கொடுக்கும் பாலமாக விளங்குகிறது.

                      இந்த இயங்கு தளமானது அனைத்து வகையான மின் சாதனங்களுக்கும் இயங்குவதற்கான புரோகிராம்களை எழுதி  உள்ளீடு செய்து பயன்படுத்தப்படுகின்றன.உதாரணமாக வாசிங் மெசின்,மைக்ரோ ஓவன்,குழ்தைகளின் விளையாட்டுப்பொம்மைகள் போன்றவை...
   
                கணினியில் பல பணிகளை மேலாண்மை செய்வது ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகும். அவை உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தல்,நினைவகத்தை மேலாண்மை செய்தல்,பணிகளை மேலாண்மை செய்தல்,கோப்புகளை மேலாண்மை செய்தல் ஆகும்.விசைப்பலகை,திரை,அச்சிடல்,போன்ற வன்பொருட்களை கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் மென்பொருளாகும்.
         
                 கணினி உபயோகத்திற்கு ,டாஸ்,விண்டோஸ்,யுனிக்ஸ்,லினக்ஸ் என பல ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

                    மொபைல் உபயோகத்திற்கு ஆன்டிராய்டு,விண்டோஸ் , சிம்பியன் , பிளாக் பெர்ரி , ரிம் , ஆப்பிள் ஐபோன்,வெப் ஓ.எஸ் என பலவகை ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன. 

                     இவற்றில் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதள மென்பொருள் மட்டும் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இலவசமானது ஆகும்.இது சுதந்திரமாக செயல்படும் மென்பொருள் ஆகும்.

                   மற்றவைகளுக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும்.அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் எந்த ஒரு மாற்றமோ,பயன்பாடோ செய்ய வேண்டும்.ஆனால் கூகுள் வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு ஓ.எஸ் இலவசமானது.கட்டுப்பாடற்றது.

                   ஆன்டிராய்டு மென்பொருளை உலகளவில் தன்னார்வமுள்ள பல மென்பொருள் தயாரிப்பாளர்கள் பல லட்சம் மென்பொருட்களை இலவசமாகவும்,குறைந்த கட்டண விலையிலும் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான  சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.
             இதன் சிறப்பு பொது விநியோக முறையாகும்.இதை யார் வேண்டுமானாலும் கேட்காமலேயே தங்களது மொபைலில் நிறுவி வெளியிட்டுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக