ஞாயிறு, 4 நவம்பர், 2012

21-12-2012-ல் உலகம் அழியுமா. அறிவியல் கூறுவது என்ன?

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
        தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம்.

              21-12-2012 -ல் பூமி அழியுமா?!?!?!?!?!?!?!!?.......

               வருகிற டிசம்பர் மாதம் அதாங்க! 21-12-2012-ல் உலகம் அழியும்! என மாயன் காலண்டரை அடிப்படையாக வைத்து கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதையும் சிந்திக்கும் எண்ணம் இல்லாமல் நமது மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான்! புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
                          திடீரென ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது கற்பனைக்கதையை எங்கோ ஒரு மூலையில் அவிழ்த்து விட்டுவிடுகிறார்கள்.அந்த புரளியும், விஸ்வரூபம் எடுத்து ஒளி வேகத்தில் உலகை சுற்றி வந்து விடுகிறது.!
      
            ஒரு காலத்தில் 2000-வது வருடம் என நினைக்கிறேன். ஆர்யபட்டா ராக்கெட் விழுந்து உலகத்தை அழிந்து விடும்.என ஒரு புரளியை பரப்பிவிட்டனர்.அதன் விளைவு,
                  கிராம மக்கள்  அக்கம்பக்கத்தில் ஆடு,கோழிகளை வைத்திருந்தவர்களிடம் கடனுக்கு? வாங்கி  (விபரமான பலே ஆசாமிகள்)  தினசரி கறி விருந்தாகவே சாப்பிட்டுவிட! கொஞ்ச நாளில் ஆடு,கோழிகளை  விற்றவர்களின் நெருக்குதலில் வாங்கித்தின்றவர்களுக்கு இறுதியில் மிஞ்சியது தேவையில்லாத கடன் சுமைதாங்க! 

              அடுத்து, புவி அழிவதை முன்கூட்டியே கூறுவதில் பெரிய வல்லுனர் எனக்கூறிக்கொண்டு, ''நாஸ்டர்டாம்'' என்பவருடைய கணிப்பை அடிக்கடி சொல்லி புரளியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு இருந்தார்கள்.இப்போது அந்த வல்லுனர்  ''நாஸ்டார்டாம்'' காணாமல் போய்விட்டார்.
             (இந்த அறிவியல் உலகத்திலும் தெரிந்தும் சிந்திக்காமல், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடியாளர்களிடம் ஏமாறுவதும், சோதிடம்,ஜாதகம்,குறிச்சொல்லல்,சாமியாட்டம் என ஏமாந்து வரும் நாம் மேற்படி வதந்திகளை நம்புவதில் ஆச்சரியம் ஏதுமில்லைங்க! இனியாவது விழிப்புணர்வு வேண்டும்.என்பதே அறிவியல் இயக்கதின் வேண்டுகோள்.)
   
                        இனி    விசயத்திற்கு வருவோம்.

         மாயன் காலண்டர் என்பது என்ன?
                      தென் அமெரிக்கா நாட்டில் தற்போதைய 'கௌதமாலா' நாட்டின் பழமையான மாயன் கலாச்சாரம் இருந்தபோது 'மாயன் காலண்டர் 'வடிவமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.அதனை அடிப்படையாக வைத்து உலகம் அழியும்? என்கிறார்கள். நாம் கூறப்போகும் மாயன் காலண்டர் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது.'மாயன் கலாச்சாரம்'  என்பது கொலம்பியா நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது ஆகும்.அதாவது தற்போது கௌதமாலா நாட்டை மையப்படுத்தியதாகக் கூறலாம். 
                மாயன் காலண்டர் பல காலங்களில் பல வகைகள் இருக்கின்றன.
  இதில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது 260 நாட்கள் கொண்ட 'ஸோல்கின்' காலண்டர்.மற்றும் 365 நாட்கள் கொண்ட 'காப்' காலண்டர். 
                முதலாவது வகை கி.மு. முதலாம் நூற்றாண்டிலும்,இரண்டாவது வகை கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலும் உருவாக்கப்பட்டவை.
   
                    வருடத்திற்கு 260 நாட்கள் கொண்ட 'ஸொல்கின்' காலண்டர் 20 பருவங்கள் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் 13 நாட்கள் கொண்டது.வருடத்திற்கு 365 நாட்கள் கொண்ட 'காப்' காலண்டரில் 18 மாதங்களும்,ஒவ்வொரு மாதத்திற்கு 20 நாட்கள் கொண்டிருக்கும்.ஆக மொத்தம் ஒவ்வொரு மாதத்திற்கும் சமமாகவும் கடைசி 5 நாட்கள் வருடத்தின் இறுதிப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.
   இந்த இரண்டு காலண்டர்களும் ஒவ்வொரு 52 வருடத்திற்கு ஒருமுறை ஒரே குறிப்பிட்ட தேதியைக் கொண்டிருக்கும். அதனை ஒரு காலண்டர் சுற்று என்கின்றனர்.  

                 இதேபோல்தான் 'காப்' காலண்டரில் நாட்கள்(Days)மற்றும் ,நீண்ட கணக்குக் காலம்(Long count period) மற்றும், நீண்ட கணக்கு அலகு (Long count Unit)என மூன்று பிரிவுகள் உண்டு.அதை நமது சூரிய வட்டத்திற்கு ஏற்ப ஒப்பிட்டுப் பார்க்கலாம்.ஒரு நாளை நீண்ட கணக்கு அலகின்படி  ஒரு 'கின்' என்கிறார்கள். 20நாட்களை ஒரு 'வினல்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.18-வினல்களை அதாவது 360 -நாட்கள் கொண்டதை ஒரு 'டுன்' அதாவது ஒரு வருடம் என்றும், 20- 'டுன்கள்' ஒரு 'காட்டூன்' அதாவது-7200 ஆண்டுகள் என்றும்,20-' காட்டூன்' ஒரு 'பக்டூன்' அதாவது -1,44,000ஆண்டுகள் என்றும்,20-'பக்டூன்கள்' ஒரு 'பிக்டூன்' அதாவது- 28,80,000 ஆண்டுகள் என்றும்- இருபது,இருபதாகப் பெருக்கிகொண்டே சென்று 23,04,00,00,000-ஆண்டுகள் கொண்ட 'அலடூன்' வரை சென்றுள்ளனர்.இந்த அளவு ஆனது நம்ம காலண்டர்படி 6,30,81,429 -ஆண்டுகள்.இவ்வாறு சுமார் ஆறுகோடியே முப்பது வருடங்கள் வரை  காலண்டர் செல்கிறது.சரி,
   இப்போது 21-12-2012 -தேதியை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்? அந்த நாளன்றுதான் இவர்கள் கணக்குப்படி 13-'பக்டூன்கள்' முடிந்து 14-வது 'பக்டூன்' ஆரம்பம் ஆகிறது. இந்த 'பக்டூன்' முடிய 7200- ஆண்டுகள் தேவை. இது முடிந்து 15- வது 'பக்டூனுக்கு'ச் செல்லும்.இவ்வாறு 20- பக்டூன்கள் வரை இந்த நீண்ட காலண்டர் சென்று 'பிக்டூன்' வரை செல்லும். அது ஒரு குறியீடு ஆகும்.
   பிரச்சினை என்னவென்றால்? மாயன் கலாச்சாரப்படி 13 -வது 'பிக்டூன்' முடியும்போது அதாங்க! 21-12-2012-ல் கடவுளின் மூன்று படைப்பு முடிவடைந்து (அடக் கடவுளே!) நான்காவது உலகம் படைக்கப்படுவதாக நம்புகின்றனர்.எனவே,இந்தப் பழமைக் கருத்துக்களைக் கொண்டு 21-12-2012-ல் உலகம் அழிந்துவிடும்! என கட்டுக்கதைகளை,கற்பனைகளை, பரப்பி வருகின்றனர்.

                      அதற்கேற்ப ''மாயன் கலாச்சார நம்பிக்கை'' இல்லாத 'நவீன தொழிற்நுட்ப அறிவிலிகள்'- தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு அவர்களது கற்பனைகளை அதாவது, டிசம்பர் 21-ல் விண்கற்கள் கொட்டும்.தீப்பிழம்புகள் பூமியைத் தாக்கும்.எரிமலை வெடிப்புகள்,ராட்சத சுனாமிகள் பேரிடர்கள் உருவாகி பூமியில் மனித இனமே அழிந்துவிடும்!.என  மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர்.இவை அனைத்தும் வதந்திகளே! அறிவியல் ரீதியாக இவ்வாறு எதுவும் நடக்கப்போவதில்லை.
                உலகம் அழிவதற்கான எப்பொழுதுமே குறைவுதான்.அதாவது  சூரியன் முற்றிலும் எரிந்து அழியும்போதுதான்  நமது பூமி நிச்சயமாக அழியும்.அது நடப்பதற்கு இன்னும் சுமார் 450 கோடி வருடங்கள் உள்ளன.
                  இதற்கிடையில் பூமி,
      (1)விண்கற்களால்  அழியும் வாய்ப்பு பத்து லட்சத்தில் ஒருபங்கு உள்ளது. (2)எரிமலை பெருவெடிப்புகளால் அழியும் வாய்ப்பு  50,000-ல் ஒரு பங்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் உலகம் அழிந்து போகும் வாய்ப்பு 19 சதம் என ஒரு சில குழுவினர் கூறுகின்றனர்.
                      மேலும், பனிக்காலம் வரும் சுற்று நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்றும் அது 20,000-ம் வருடத்தில் மீண்டும் வரும் எனக் கணக்கிட்டு உள்ளனர். அந்த சவாலையும் நமது அறிவியல் தொழில் நுட்ப சாதனங்களால் முறியடிக்கமுடியும்.
       ஆனால் தற்போது பூமிக்கு ஆபத்து எல்லாம்! மனிதனின் பகாசூர நுகர்வு என்ற சுயநல நடவடிக்கைகளினால்,இயற்கைச் சமன்பாட்டை மீறுவதால்- உலகம் வெப்பமயமாதல்,அணு யுத்த தயாரிப்பு,கிருமி யுத்த தயாரிப்பு,புதுவிதமான நோய்க்கிருமிகள் உருவாதல் (உ-ம், எய்ட்ஸ்)  ஆகியன மனித குலத்தை அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன.புவிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த மனித நடவடிக்கைகளைத் தடுப்பது அல்லது குறைப்பது எப்படி? என்பதே தற்போது நமது சிந்தனையாகவும்,செயல்பாடாகவும் இருக்க வேண்டும். நமது பூமியைக் காப்பாற்ற மனித குல அபாயகர நடவடிக்கைகளிலிருந்து காப்பாற் ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
     
                  நன்றி;-விஞ்ஞானச் சிறகு-நவம்பர் மாத இதழ்-2012. 
  பதிவேற்றம்;
           PARAMES DRIVER
       TAMIL NADU SCIENCE FORUM
      THALAVADY - SATHY
        ERODE -Dt.

3 கருத்துகள்:

  1. 21.12.2012 உடன் மாயன் காலண்டர் எழுதப்பட வில்லையோ தவிர. உலகம் 21.12.2012 ல் உலகம் அழியும் என எழுத வில்லையே?

    பதிலளிநீக்கு
  2. ulagai vazha vaipathu namathu punagaiyaga irukatum kadaisi nimidam varai punagaithukonda valvanalum savanalum eatrukolvom pumithaiku ja.............

    பதிலளிநீக்கு