அட்ச ரேகை, தீர்க்க ரேகை
அன்பு நண்பர்களே,
''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி''வலைப்பதிவிற்கு தங்களை வருக,வருக என அன்புடன் வரவேற்கிறோம். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்ச மற்றும் தீர்க்க ரேகை விபரங்கள் பற்றி தேடும்போது,
உலகின் எந்த மூலையிலும் உள்ள ஊர்களின் அப்போதைய நேரம், உலக வரை படத்தில் அதன் இடம், அந்த ஊரின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை, எந்த நாடு என அனைத்து தகவல்களையும் மிகக் குறைந்த நேரத்தில் காட்டும் இணைய தளம் ஒன்றைக் கண்டேன். http://worldtimeengine.com/about என்ற முகவரியில் உள்ள தளம் தரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன.
ஒரே நேரத்தில் நீங்கள் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்ற ஊரின் நேரத்தை அறியலாம்.எடுத்துக் காட்டாக சென்னை,லண்டன்,மாஸ்கோ (Chennai and London and Moscow) எனக் கொடுத்து நேரம் அறிய எணி என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே இந்த மூன்று ஊர்களின் சாட்டலைட் படம் மேப்பாகக் காட்டப்படுகிறது. நீங்கள் கேட்கும் ஊரின் மேலாக அடையாளம் காட்டப்படுகிறது. படத்திற்கு மேலாக ஊர் பெயர், ஊர் உள்ள நாடு, அது காலை அல்லது மாலை அல்லது இரவா எனக் காட்டி அப்போதைய நேரம், கிழமை மற்றும் தேதி காட்டப்படுகிறது. கீழாக சாட்டலைட் மேப் தரப்படுகிறது. மேப்பில் அந்த ஊரின் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் சீதோஷ்ண நிலை காட்டப்படுகிறது. வழக்கம்போல் கூகுள் மேப்பில் பெரியது (ZOOM) செய்வது போல இதனையும் பெரியது (ZOOM) செய்து காணலாம். மூன்று வகை மேப்பினையும் காணலாம்.
இது பன்னாட்டளவில் பல ஊர்களுக்கு தொலைபேசி அல்லது இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த ஊர்களின் அப்போதைய நேரத்தைத் தெரிந்து செயல்பட உதவும்.பயன்பெறுங்கள் என,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் / sathy & thalavadi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக