அன்பு நண்பர்களே,வணக்கம்.
இந்தப்பதிவு பேரா.சோ.மோகனா அம்மையாரின் பதிவு ஆகும்.
x கதிர் படிகவியலாளர்.. இசபெல்லா கார்லே (Isabella Karle.born December 2, 1921)..பிறந்த தினம்..இன்று..!
3 டிசம்பர் 2011, 00:01 க்குஇல் Mohana Somasundramஆல் எழுதப்பட்டது
இயற்பியல் வேதியலின்(physical chemistry) துவக்க கால விஞ்ஞானி இசபெல்லா கார்லே (Isabella Karle)என்பவர்தான்.இசபெல்லா முதல் எலெக்ட்ரான்( first electron ) மற்றும் x கதிர் பிரித்தல்( x-ray diffraction) மூலம் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்தவர் என்ற பெருமை இவருக்கே சேரும். இசபெல்லா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு x கதிர் படிகவியலாளர்(an American x-ray crystallographer).இவர் வேதியலில் அசகாய சூரர்.அது போலவே.. இயற்பியலையும் வெளுத்து வாங்குவார்.இவரது இயற்பெயர் இசபெல்லா ஹெலன் லூகோஸ்கி ( Isabella Helen Lugoski )என்பதே.இசபெல்லா, போலந்திலிருந்து புலம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதியர்க்கு மகளாக, மிச்சிகன் நகருக்கு அருகிலுள்ள டெட்ராய்ட்டில்(Detroit, Michigan) 1921 , டிசம்பர் 2 ம் நாள் பிறந்தார்.
சிறுவயதிலிலேயே மிகவும் இசபெல்லா மிகவும் சுறு சுறுப்பாகவும் , சூட்டிகையாகவும் இருந்தார். வயதுக்கு மீறிய அறிவு. பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததைவிட அதிகமாகப் படித்தார். இச்பெல்லாவுக்கு இளமை முதலே அறிவியலின் மேல் அடங்காத காதல். அரசின் உதவி யுடனேயே பல்கலையில் படித்தார். இசபெல்லா தனது ௧௯ வது வயதில் இயல்-வேதியலில் பட்டப்படிப்பு முடித்துவிட்டார். இசபெல்லாவுக்கு 22 வயது முடிந்ததும், ,1944 லேயே, மேற்பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சியையும் முடித்து,மிச்சிகன் பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்று விட்டார்; படு கில்லாடி இசபெல்லா. இசபெல்லா படித்த பொதுப்பள்ளியின் பெண ஆசிரியர் ஒருவரே மானசீக குரு மட்டுமல்ல.. இசபெல்லா எதிர்காலத்தில் வேதியலில் சிறந்து விளங்கவும், வேதியலை விருப்ப பாடமாக எடுக்க முழுமுதற் காரணியானவர்.
இசபெல்லா தன்னுடன் கல்வி பயின்ற ஜெரோம் கார்லை (Jerome Karle)மனதார நேசித்தார். 1940 ல் இசபெல்லா ஜெரோமைத் திருமணமும் செய்து கொண்டார். பின்னர் இந்த தம்பதியர் இணையாகவே சிக்காகோ பல்கலையின் மன்ஹாட்டன் திட்டத்தில்(Manhattan Project during World War II) பணி புரிந்தனர். அதில் ஒரு வியப்பான தகவல் என்ன தெரியுமா? அந்த பல்கலைக்கழகத்தின் முதல் வேதியல் பெண பணியாளார் இசபெல்லாதான் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா? இரண்டாம் உலகப் போரின் போது, இசபெல்லா புளூட்டோனியம் ஆக்சைடிலிருந்து(plutonium oxide) புளூட்டோனியம் குளோரைடைப் (plutonium chloride ) பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தார். பிறகு 1946 ல் இருவரும் ஒன்றாக வாஷின்டனின், கப்பல் ஆய்வு ஆய்வகத்துக்கு பணி செய்ய மாற்றப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அங்கேயே பணி புரிந்தனர்.
இசபெல்லாவின் கணவர் ஜெரோம் கார்லே ஒரு நோபல் விஞ்ஞானி. x கதிர் சிதறல் யுக்தி மூலம், படிகங்களின் அமைப்பை கண்டறிவதற்கான முறைக் கண்டுபிடித்ததிற்காக , ஜெரோம் கார்லேவுக்கு, 1985 ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் உயிரியல், வேதியல், உலோகவியல் மற்றும் இயற்பியல் தன்மைகளை அறிய உதவ முடியும் என நிரூபித்தார். இந்த கண்டுபிடிப்பும், இதன் கையாளும் முறையும் புதிய மருந்தியல் துறையிலும் மேலும் மற்ற செயற்கைப் பொருட்களைக் செய்யவும் பெரிதும் பயன்பட்டு சக்கைபோடு போடுகிறது.
இசபெல்லா படிகவியல் மற்றும் மூலக்கூறு அமைப்பு மட்டுமின்றி , இயற்கைப் பொருள்களின் தன்மையையும் உயிரியலில் மிகத் தேவையான பொருட்களையும் கண்டறிந்து நிர்ணயம் செய்தலிலும் சிறந்து விளங்கினார். இதனால் இவரது தலைமையில் ஒரு குழு இயங்கி, இயற்கையாகவே மிக அரிதான பனமானியன் மரத்தில்(Panamanian wood) உள்ள புழுக்கள், கரையான்கள் மற்றும் சில பூச்சிகளை எதிர்க்கும் வேதிப் பொருட்களை உருவாக்கினார். இவையே பூச்சிக்கொல்லியாக திறமையுடன் செயல்படுகின்றன. மேலும் இசபெல்லா, அமெரிக்கத் தவளையின் நஞ்சில் ஆராய்ச்சி செய்தார். இசபெல்லாவின் குழு முப்பரிமாண மாதிரியையும், அதன் உருவமைப்பையும் செய்து காண்பித்தது.அதிலிருந்து மிக மிகக் குறைவான அளவில் சுத்திகரிக்கப்பட்ட திறன் மிகுந்த நஞ்சினைத் தயாரித்தனர். இவை மருத்துவத் துறையில் மிகவும் மலிவாக, விடத்திற்கு மாற்றாகப் பயன்படுகின்றன. தவளையிளிருந்து எடுத்த வேதிப் பொருள்/நஞ்சு,மரபணுத் தகவல்களை சுமந்து செல்லும் டி.என்.ஏ வின் நரம்பினை தடுத்து நிறுத்தும் கேடயமாகப் பயன்படுகிறது.மேலும் இசபெல்லா,டி.என்.ஏ வின் அமினோ அமிலங்கள் மற்றும் உட்கரு அமிலங்களின் தன்மையை/ அடிப்படை கட்டமைப்பை கதிர்வீச்சின் மூலம் எவ்வாறு மாற்றலாம் என்பதையும் சோதனைகள் மூலம் விளக்கிக் காட்டினார்.
இசபெல்லா ஜெரோம் தம்பதியருக்கு மூன்று பெண் மகவுகள். மூவரும் அறிவியலில் ஆர்வம் கொண்டு அதே துறையில் பணி புரிகின்றனர். 1946 ல் பிறந்த லூயிஸ் (Louise ,born 1946) ஒரு கொள்கையியல் வேதியாலாளர்.( a theoretical chemist). இரண்டாவதாக 1950 ல் பிறந்த ஜீன் ஒரு கனிம வேதியியலாளர். மூன்றாம் மகவு மாடலைனே (Madeleine ,1955) அருங்காட்சியகத்துறையின் நிபுணர். மேலும் இவர் புவியியலிலும் விற்பன்னர்.
இசபெல்லா பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும்,வகித்து, பரிசு சான்றிதழகளையும் பெற்றிருக்கிறார். 1995 , ல் அமெரிக்காவின் மிக உயர்ந்தபட்ச அறிவியல் விருதான தேசிய அறிவியல் பதக்கம் பெற்று பெருமை பெற்றவர் இசபெல்லா. 250 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை இதுவரை எழுதி உள்ளார்.
இசபெல்லாவும் அவரது கணவர் ஜெரோமும், 2009 ம் ஆண்டு, கடலூர்த்தி ஆராய்ச்சி ஆயவகத்திலிருந்து, ஓய்வு பெற்றனர். இதுவரை தம்பதியர் இருவரும் இணைந்து சுமார் 127 ஆண்டுகள் அமெரிக்க அரசுக்கும் , இந்த துறைக்கும் ஏராளமான சேவைசெய்திருக்கின்றனர். 1968 ல் அந்த ஆண்டின் கண்டுபிடிப்புகளுக்காக இசபெல்லாவுக்கு, அதிகமான பரிசுகள் வந்து கொட்டினர். .1986 ல் வாழ்நாள் சாதனைப் பெண்மணி விருது கிடைத்தது. இந்த சாதனைப் பெண இன்னும்கூட நம்முடன் படிகம்போல் துல்லியமாக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பயனாளியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக