வெள்ளி, 2 டிசம்பர், 2011

இந்திய நூலகங்களின் தந்தை Dr.S.R.Ranganathan.

          

    SATHYAMANGALAM

TamilNadu Science Forum Thalavadi                

 

      அன்பு நண்பர்களே,வணக்கம்.       

இந்திய நூலகங்களின் தந்தை Dr.S.R.Ranganathan.

       




















       
                அகர முதல எழுத்தெல்லாம் ஆதி      
                 பகவன்  முதற்றே  உலகு.                             

            ஒழுக்கம் விழுப்பம்  தரலான்  ஒழுக்கம்
               உயிரினும் ஓம்பப்  படும்.

          உடையார்முன் இல்லார்போல்  ஏக்கற்றுங் கற்றார்
             கடையரே  கல்லா  தவர்.                                                                               
                                               
          ஒருமைக்கண்  தான்கற்ற  கல்வி ஒருவற்கு
              எழுமையும்  ஏமாப்  புடைத்து.

    
                                                           
                        
                             இந்திய நூலகங்களின் தந்தை


                         Dr.Sirkazhi Ramamrita Ranganathan


              ந்திய நூலகங்களின் தந்தை முனைவர் ; சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன் அவர்களின் 'நூலக இயக்கத்திற்கான பங்காற்றலுக்காக  1964 - ம் ஆண்டு  'அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் கல்கலைக் கழகம் '' டாக்டர் ஆஃப்  லெட்டர்ஸ்'' என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. 

                                 ''  நூலகங்களின் நாடு அமெரிக்கா''  

         
      அன்பு நண்பர்களே, வணக்கம்.
      
        மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே  தொடர்வினைஉருவாக்குகிறஉன்னதமான கருவி புத்தகங்களே!  
         
புத்தகங்கள்  நம்பிக்கை உலகின் வாசலைத் திறப்பதாக இருக்கின்றன.
          
            எழுத்தாளர் ஒருவர் 
     'கையால் விதைப்பாடு' 
      செய்வதை - பலர் 
    'கண்களால் அறுவடை '
     செய்கின்றனர். 







      வாசிப்பு என்னும் விளைச்சல்
    
       மனதின் இருளைப் போக்குவதோடுமட்டுமின்றி சோர்வின் உடைப்பிற்கும்,சோகத்தினூடே ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்,தன்னம்பிக்கை ஊட்டுவதற்கும் 
          
   
     இது போன்ற பல விசயங்களை மனித சமூகம் கற்றுணர்ந்து ,தன்னம்பிக்கை பெறவும், சிறந்த அறிவாளிகள் ஆகவும்,பொருளாதாரம் பெற்று மேம்பாடு அடையவும், அறவழியில் நடக்கவும்,அறிஞர்களாக உயரவும்,

     
       புதுப்புது விசயங்களைக் கற்று முன்னேற்றம் பெறவும்,வாழ்வாதாரங்களைப் பெருக்கவும்,சமூக அந்தஸ்து பெறவும்,

      வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ,  உதவும் புத்தகங்கள்

      நமக்கு  எத்தனை,எத்தனை வல்லமைகளைத்  தேக்கிக் கொண்டு அடக்கமாக கையிருப்பாக இந்த புத்தகங்கள்  இருக்கின்றன.!!!!
    

      இந்த புத்தகங்களைக் குவியலாகத் தேக்கி (STACK)  வைக்கும் இடங்கள்தான் நூலகம் எனப்படுகின்றன.
        

        நாகரிகம் வளர, வளர -தொழில்நுட்பங்களும்,அறிவியலும் வளர்ந்து வருகின்றன. ஏற்கனவே உள்ள தொழில்கள் நவீனமயமாக்கப்பட்டு  மேம்பாடு அடைந்து வருகின்றன.
  
      

        அதனால் பல துறைகளாகப் பல்கிப் பெருகுகின்றன.இதன் போக்கினால் புத்தகங்கள் தேடுவதற்கே நேரம் போதாது.

       மேலும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு வாசிப்பு என்பதே மறந்து விடும். என்று உணர்ந்த மரியாதைக்குரிய நூலகத் தந்தை அவர்கள் 

     மந்தமாக இருந்த நூலக இயக்கத்தைத்  தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு  நூலகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

        பயனுள்ள புத்தகங்களை வாசகர்கள்  விருப்பத்தோடு, விரைவில் எடுக்க வேண்டும். பயனுள்ள பல புத்தகங்களைக் கற்று பல விசயங்களைத் தெரிந்து அறிவை வளர்க்க உதவ  வேண்டும். 

        அதற்கு நூலகம் வளரும் அமைப்பாக ஏற்றம் கொண்டு மனித சமூகத்திற்கு உதவும் வகையில் சீர்திருத்த வேண்டும்.

    
       என்ற நோக்கில் கணிதவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற மரியாதைக்குரிய முனைவர்; சீர்காழி.இரா. ரங்கநாதன் அவர்களின் சீரிய முயற்சியால் ஆய்வு செய்து 

      அதன் விளைவாக இந்தியாவில் நூலக இயக்கம் எழுச்சி பெறச் செய்தார்.

       அதன் பிறகு நூலகத்தின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்த இந்திய அரசு நூலக அறிவியலில் பட்டப் படிப்பு தரும் பயிற்சிப் பள்ளிகள்  உருவாக்கியது.

        இவ்வாறாக நூலக இயக்கத்தின் முன்னோடியாக Dr.S.R.ரங்கராஜன் இருந்ததால் இந்திய நூலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
       நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக    இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவித்தது.  
  அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகம் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் என்ற D.Lit பட்டத்தை 1964 -ம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.

   இவ்வாறாக சமூகப் பணியாற்றிய மரியாதைக்குரிய எஸ்.ஆர் .ஆர் அவர்கள்  தமிழ்நாட்டின் சீர்காழியில் 1892-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 09 -ம் தேதி பிறந்தார்.   

        சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு  மங்களூரிலும்,சென்னை மற்றும்  கோயமுத்தூரிலும் கணிதத் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வந்தார்.பிறகு 1924 -ஜனவரியில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நூலகராக நியமனம் பெற்றார்..
     
      # கோலன் (Colon ) பகுப்பாக்க முறையை# உருவாக்கினார்.
          
      PMEST-இது கோலன் முறை ஆகும். இதன் விரிவாக்கம் 

        PERSONALITY - ஆளுமை,
        MATTER            -பொருண்மை,
        ENERGY           - ஆற்றல்,
        SPACE              -புவி
        TIME                - காலம்.
                                                            மற்றும்
            
     #நூலகவியலுக்கான ஐந்து விதிகளை# அறிமுகம் செய்தார்.அதாவது

       ( 1 ) நூலகத்தில் பயனுள்ள நல்ல புத்தகங்களை வைக்க வேண்டும்.
                  ( Books are for use )
      
        ( 2 ) ஒரு புத்தகத்தை வாசகர் அனைவரும் படிக்க வேண்டும். 
               (  Every reader his / her book )
       
        ( 3 ) ஒரு வாசகர் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
                 ( Every book its reader )
     
       ( 4 ) வாசகருக்கு நேரம் விரயமாகாமல் சேமிக்கும் வகையில் புத்தகங்கள் அமைக்க வேண்டும்.
              ( Save the time of the reader )
     
      ( 5 ) நூலகம் ஒரு வளரும் அமைப்பாக செயல்படும் வகையில் இருக்க வேண்டும்.
              ( Library is a growing Organism )

       
    
         .இந்த ஐந்து விதிகளும் இன்றும் சிறப்பான நூலகச் செயல்பாட்டிற்கு மாறாமல் உதவுகின்றன. 
         ( HIS FIVE LAWS OF LIBRARY SCIENCE ARE EVER GREEN )  
    
  இந்திய நூலகங்களின் தந்தை முனைவர் ;சீர்காழி.இராமாமிருதம் ரங்கநாதன் அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து சாதாரண மக்களிடையே வாசிக்கும் திறனை ஏற்படுத்தினார்.
         
    இவ்வாறு மனித சமூகம் உயர்வு பெற பணியாற்றிய இந்திய நூலகத் தந்தை அவர்கள்  கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் 1972 - ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27-ந் தேதி அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.


    அடுத்த தலைமுறைக்கான பரிசாக ஏதாவது தர விரும்பினால் புத்தகங்களைக் கொடு. -சீனப் பழமொழி.





  புத்தகங்கள் திரும்பத் திரும்ப திறந்து பார்க்கும் பரிசாக இருக்கும்.
          -அமெரிக்க எழுத்தாளர் கேரிகன் கெய்லர்.
   
   ஓர் அரிய அறிவு ஜீவியோடு  உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்கள் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்.- அறிஞர் எமர்சன்.
  
      
       பொது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வரிசைத் தொகுதி விபரம்=


         A- விஞ்ஞானம்,
      B- கணிதவியல்,
      C-பௌதிகவியல்,
      D-பொறியியல்,
      E-வேதியியல்,
      F- தொழில் நுணுக்கம்,
      G-உயிரியல்,
     H- மண்ணியல்,
     I- தாவரவியல்,
     J- வேளாண்மை,
     K-விலங்கியல்,
     L-மருத்துவ இயல்,
     M-பயன்படும் கலை,
     N- நுண்கலை,
     O,1 - பொது அறிவு,
     O,31 -  இலக்கியம்,
     O,31,1 -கவிதை,
     O,31,2 - நாடகம்,
     O,31,3- நாவல்,
     O,31,6 -கட்டுரை,
     0,W - வாழ்க்கை வரலாறு,
     P -மொழியியல்,
     Q - மதம்,
     R -  தத்துவம்,
     S - உளவியல்,
     T - கல்வியியல்,
     U - புவியியல்,
     V - வரலாறு,
     W - அரசியல்,
     X - பொருளாதாரம்,
     Y - சமூகவியல்,
     Z - சட்டவியல்,
     MZ -  சித்தியியல்,
   
 
    ISBN - International Standard Book Number
      An ISBN - Has Four Parts 
     1) Contry code 
     2) Publisher code    
     3)Title code
     4) Check digit.
    
  ISSN - International Standard Serial Number.
  OCLC - Online Computer Library Center number

       





       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக