வெள்ளி, 2 டிசம்பர், 2011


 

 

 

 

அன்பு நண்பர்களே,வணக்கம்.

      இது மரியாதைக்குரி,பேரா.சோ.மோகனா அம்மையார் அவர்களதுபதிவு.                                                  

ஜெர்மானிய வேதியலாளர் மார்ட்டின் ஹெய்ன்றிச் க்லாபுரோத் பிறந்த தினம்.. டிசம்பர்.1 .

1 டிசம்பர் 2011, 23:56 க்குஇல் Mohana Somasundramஆல் எழுதப்பட்டது

      மார்ட்டின் ஹெய்ன்றிச் க்லாபுரோத் ( Martin Heinrich Klaproth (1 December 1743 – 1 January 1817) என்ற ஜெர்மானிய வேதியலாளர்  1743 ல், டிசம்பர் முதல்நாள்  ஜெர்மனியின் வேர்னிக்ரூடில் (Wernigerode)பிறந்தார். அவருக்கு எட்டு வயதாகும்போது, அவர்கள் வாழ்ந்த வீடு தீப்பிடித்து அழிந்தது. பின் மார்ட்டின்  குடும்பத்தாரால் அவரை சரியாக் படிக்க வைக்க முடியவில்லை.குடும்பம் வறுமையில் தத்தளித்தது. அவருக்கு 15 வயதாகும்போது, அருகிலுள்ள கிடின்பேர்க் (Quedlinburg ()என்ற ஊரில் அவர் ஒரு மருந்து தயாரிப்பவரிடம் வேலைக்குச் சென்றார்.மாட்டினின் வாழ்நாளில் பெரும்பகுதி மருந்து தயாரிப்பவருக்கு உதவி செய்தே காலத்தை ஓ ட்டி விட்டார்.
பின் இவர் நீண்ட நாட்கள் இந்த தொழிலையே செய்தார். முடிவில் மிகவும் புகழ் பெற்ற  ச்ச்வநீன் அபோதேக்கே (Schwanenapotheke pharmaceutical-chemistry laboratory owned by the Rose family in Berlin. )என்ற மருந்துகள் தயாரிக்கும் வேதித் தொழிற்சாலையின் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் அதன் உரிமையாளர் ரோஸ் இறந்த பின் அதன் இயக்குனராக ஆனார்.
    யுரேனியம்
டைட்டானியம்
செரியம்
ஸ்ட்ரான்ஷியம்
மார்ட்டின் தனது வாழ் நாளில் வேதியல் துறையில் மூன்று முக்கிய சாதனைகள் செய்தார். முதலில், ஆண்டனி லவாய்சியர் அவரது கண்டுபிடிப்புகளில் கருவியாக விளங்கினார். லவாய்சியர் கண்டுபிடித்தவை சரி என்று கூறி அதன் பின்னர் பிரெஞ்சு வேதியலை துவக்கினார். இரண்டாவதாகக் புதிய முறை பகுப்பாராய்ச்சி முறை வேதியலை உருவாக்கி உள்ளே நுழைத்து சாதனை செய்தவர்  மார்ட்டின்தான். எடை அறிய பகிகமாக்குதல்/உலரவைத்தல் முறையைக் கையாண்டார்.மூன்றாவது, மார்ட்டின் குறைந்த பட்சம் 6 புதிய தனிமங்களைக் கண்டுபிடித்தார். அவைதான் யுரேனியம் ( Uranium..1789),,,சிர்கான் உலோகத்திலிருந்து ஸிர்கோனியம் (Zirconium..1789) .கண்டுபிடித்தார். பின்னர், ஸ்ட்ரான்ஷியம்,(Strontium) டைட்டானியம் ( Titanium..1795).,டேல்லுரியம்(Tellurium), குரோமியம் (Chromum..1797), .செரியம் ( Cerium..1803),போன்ற அரிதான தனிமங்களை கண்டுபிடித்தவர் மார்ட்டின் தான்.  மேலும் இன்னும் மிக அரிதான தனிமங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தவரும் மார்ட்டின் தான்.  அந்தக் காலத்தில் நோபல் பரிசு போன்றவை இருந்திருந்தால், அவற்றை மூட்டை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சென்றிருப்பார் மார்ட்டின்.
மார்ட்டினின் 67 வது வயதில்தான்  1810 ம் ஆண்டு, அவருக்கு பெர்லின் பல்கலையின் முதல் வேதியல் புரொபசர் பதவி தரப்பட்டது. பிறகு அங்கேயே பணியில் இருந்து 1817 ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் உயிர் நீத்தார்.

குரோமியம்
டேல்லுரியம்,
ஸிர்கோனியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக