வெள்ளி, 2 டிசம்பர், 2011

வழிகாட்டல் என்றால் என்ன?

அன்பு நண்பர்களே,வணக்கம்.
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி வலைப்பதிவுக்கு வருகை தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.       


வழிகாட்டல் என்றால் என்ன? 
                     எதற்காக வழிகாட்டல் தேவைப்படுகிறது?
       
            வழிகாட்டல் என்பது குறிப்பிட்ட வயதில் முடிக்கக்கூடிய எல்லைப்பரப்பு அல்ல.தனியாளின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய தொடர்ச்சியான செயல்முறையாகும்.
            ஆசிரியர் மற்றும் பெற்றோர்,நண்பர்கள்,சுற்றத்தார் ஆகிய அனைவரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் இருப்பவர்கள் ஆவர்.
     சில நேரங்களில் அறிவுரை கூறுபவர்,உடலியல் நிபுணர்,உளவியல் அறிஞர்,மனவியல் நிபுணர்,பாடத்திட்ட வல்லுனர்,தொழில் வழிகாட்டுபவர், போன்ற சிறப்பு நிபுணர் தேவைப்படுகின்றனர்.
     இன்றைய உலகம் தற்போது மிகச் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.எனவே, இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி,தொழில் மற்றும் தனிப்பட்ட நிலைகளில் ஒவ்வொரு படியிலும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கல்வி மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியது.தொழில் அமைப்புகள், அறிவியல் மற்றும்தொழில் நுட்ப உபயோகங்கள்,நாட்டின் பொருளாதார அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை அறிந்து தேர்ந்தெடுக்க தடுமாறுகின்றனர் இன்றைய இளைஞர்கள்.வேலை வாய்ப்புகள் நிறைய அளவில் இருந்தாலும் வேலைகள் தவறான வழியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனால் மனித வளம் வீண்டிக்கப்படுவதுடன் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகின்றது. எனவேதான் என்பது இன்றைய சூழலில் அவசியம் வழிகாட்டல் என்பது தேவைப்படுகிறது.வழிகாட்டலின் முதன்மையான நோக்கமே மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளில்தேர்ச்சி பெற்று ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு அந்த மாணவர்களைத் தயார் செய்து அந்தத் தொழிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.சமூகம் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுக்க தொழில் பற்றிய விபரங்கள் அவசியமாகிறது. மேலும்,தன் திறமை,செயலாற்றல்,நாட்டம்,மனப்பான்மை,விருப்பம் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு மிகச் சரியான தொழிலை அல்லது வேலையைத் தேர்ந்தெடுக்கவும் தொழில் அல்லது வேலை பற்றிய தகவல் மற்றும் வழிகாட்டல் மிக அவசியமாகிறது.
         நாட்டில் அறிவியல்,பொருளாதார மற்றும் தொழில் அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது.இயற்கை மற்றும் தொழில் தேவைகளின் விளைவாக ஒருவரது தேவைகள் மாறுபடுகின்றன.தற்போதைய நாகரீக வளர்ச்சி மற்றும் சூழ்நிலையும் தேவைகளைக் காரணிப்படுத்துகிறது.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழிற்சாலை மேம்பாடு இவைகளினால் பல வேறுபாடுகளைக் கொண்ட புதுப்புது வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.ஒரு வேலை பற்றிய வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றைய சமூகத் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் முதலியன வேலையின் தன்மை,வேலையின் வகைகள்,தகுதிகள்,பால்,வயது,உடல்நிலை,மனநிலை,போட்டி,சமூகச்சூழல்,ஆளுமைக்குணங்கள்,கல்வி சிறப்புத் தகுதிகள்,தொழில் நுட்பம்,உத்திரவாதம் போன்ற இன்னும் பிற வகைகளின் தேவைகள் மற்றும் தற்போதையத் தேவைகள்,அனுபவம்,வேலையில் சேருவதற்கான வழிமுறைகள்,வேலை செய்யும் விதம், நேரம்,தொடர்புடையத் தொழில்வருமானம்,நலம் மற்றும் பாதுகாப்புக் காரணிகள்,பணி தவறாமை,வேலை அமைந்துள்ள இடம்,உடன் வேலை செய்பவரின் தன்மைகள்,வேலை அமைந்துள்ள இடம்,போக்குவரத்துப் போன்ற பல்வேறு வழிகாட்டலும்,தகவல்களும் இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. 
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தியமங்கலம்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக