புதன், 14 டிசம்பர், 2011

ரெண்டு எருமை

பால் 45,000

ரெண்டு எருமை மூலமா வருஷம் முழுக்க  சராசரியா 7 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 20 ரூபாய்னு விற்பனை பண்றேன். தினமும் ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ நெல் தவிடு, கால் கிலோ எள்ளுப் புண்ணாக்கு, அரை கிலோ கோதுமை தவிடும் கலந்து அடர்தீவனமா கொடுக்குறேன். கோதுமைத் தவிடை மட்டுந்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறேன். ரெண்டு எருமைக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு
15 ரூபாய்தான் செலவாகுது. ஒரு வருஷத்துல பால் மூலமா மட்டுமே 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்” என்று விலாவாரியாகச் சொன்னவர்,

”நெல்லி வருமானம் இந்த வருஷம்தான் வர ஆரம்பிக்கும். மரத்துக்கு 100 கிலோ வீதம்,

100 மரத்துக்கு 10 ஆயிரம் கிலோ நெல்லி கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சாலும்… மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.

கல்பாக்கத்தில் ஒரு ஒருங்கிணைந்த விவசாயம்

கல்பாக்கத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் கரியச்சேரி. அவ்விடத்தைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மனைவி திருமதி சபீதா ராணி தாவரவியல் பட்டம் பெற்றவர். 2000ம் வருடங்களில் அலுவலகப் பணி காரணமாக கிட்டத்திட்ட விவசாயம் கைவிடப்பட்டது.
சுனாமியின் கோரதாண்டவத்திற்கு இவரகள் கிராமம் ஆளாக, படிப்புச் சான்றிதழ் கூட மிச்சமின்றி அனைத்தையும் இழந்திருக்கின்றனர்.  மிச்சம் திரு பாலாஜியின் அலுவலகப் பணி மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற சான்றிதழ்.
இயற்கையால் பாதிக்கப்பட்ட இந்தத் தம்பதியினர் இயற்கையை நம்பியதுதான் இவ்விடத்தின் திருப்பம். நீர் வடியாத இவர்கள் நிலத்தைச் சுற்றி பொக்லைன் கொண்டு தோண்டி ஆழமான வடிகால்களை அமைத்துள்ளனர்.
தற்பொழுது 4 மாடுகள், 3 கன்றுகள், 11 ஆடுகள், 40 கோழிகள் (கிரிராஜா, நாட்டுக்கோழி, வனராஜா), 5 வான்கோழிகள், 6 கின்னிக் கோழிகள், 14 காடை , 3 மணிலா வாத்துக்கள்,  8 நாட்டு வாத்துக்கள்,  16 காதல் பறவைகள், 6 ஆப்பிரிக்கன் கிளி, 10 காக்டைல் என்றும் சிறு கிளிகள் என்று அவர்கள் வாழ்விடத்தை இயற்கை கலை கட்டியிருக்கிறது.
கிராமியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று தங்காளால் ஆன பங்களிப்பைச் செய்யும் இவர்கள் “நமது விவசாயிகள் ஒவ்வொருவரும் தினசரி வருமானம், வார வருமானம், வருட வருமானம் என்று தங்கள் நிலங்களில் இருந்து எடுத்தால்தான் தற்சார்புடன் வாழ இயலும்” என்று கூறுகின்றனர்.
இதற்கான முறைகள்
  • பால், முட்டை, கீரை – இவைகளிலிருந்து தின வருமானம்
  • கொடி வகை (பீர்க்கன், பாகல், புடல்) – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
  • தென்னை, கறிவேப்பிலை – இரு மாதங்களுக்கு ஒரு முறை
  • பப்பாளி, சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை – கூடிய காலஇடைவெளி
  • மா, பலா போன்றவை – வருட வருமானம்
  • பயன்தரு மரங்கள் – பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருத்த வருமானம்.
சொல்வதுடன் மட்டுமல்லாமல் செயல் படுத்தியும் உள்ளனர்.
பள்ளிகளில் செயல்முறை விளக்கங்கள், சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு பயிற்சிகள் என்று சமூக சிந்தனையுடன் செயல்படும் இவர்கள் தங்கள் ஊர் பள்ளியை சுற்றுச்சூழல் நட்புப் (eco friendly) பள்ளியாக மாற்றியருக்கின்றனர். எடுத்த சில பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், இயற்கைவிவசாயத்தை விடாமல் தொடர்ந்திருக்கின்றனர்.
இவர்கள் தோட்டத்தில் விளையும் பச்சைப் பயிறு, காய்கறிகள், அரிசி, இலைகளை கல்பாக்கத்திலேயே விற்றுவிடுகின்றனர். இவர்களிடம் அசோலா குழி ஒன்று உள்ளது. கால்நடைகளுக்குத் தீவனமாக அதை அளிக்கின்றனர். நெல் சாகுபடிக்கும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் இந்த அசோலாவை விரும்பி உண்கின்றனர்.
இவர்கள் பயிர் பாதுகாப்பிற்கு இஞ்சி – பூண்டு கசாயம், பஞ்ச கவ்யா போன்றவைகளைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். அவை தவிர அசிட்டோபாக்ட்டர் (கறுப்பு யூரியா), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ், மொபலைசர், சூடோமொனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பி.டி, கிரப்நில் போன்ற உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
மீன் வளர்ப்பிலும் கால் வைத்துள்ளனர். இவர்களது கிணற்றில் வலை இறக்கி (மிதவை போல) 50 விரால் குஞ்சு விட உள்ளனர். வீட்டிற்கு முன் உள்ள குட்டையில் 200 கட்லாவும் 200 காமன் கார்ப்பும் உள்ளன. இவைகளுக்கு பச்சரிசித் தவிடு, புண்ணாக்கு போன்றவை கொடுத்து வளர்த்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்திலிருந்து (KVK) ஆலோசனை மையத்திலிருந்து ஆலோசனை பெறுகின்றனர்.
இவர்கள் செய்த வேர்க்கடலை சாகுபடியில் செலவு போக ஏக்கருக்கு 12000 கிடைத்துள்ளது; ஏக்கருக்கு 25 மூட்டைகள் (75 கிலோ) கிடைத்துள்ளன. ஸ்வீட் கார்ன்-ஐக் கூட இவர்கள் விடவில்லை. இது தவிற இயந்திர நடவில் பொன்னி, ADT 43, ADT 37 (குண்டு அரிசி), சீரகச் சம்பா, சிவப்புக் கார், அன்னம் (புதிய ரகம்) போன்றவற்றையும் சாகுபடி செய்கின்றனர்.
சாண எரிவாயு வைத்துள்ளனர். ஸ்லரியை பஞ்ச கவ்யா தயாரிக்கவும் உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
வயல் வரப்போரங்களில் வெட்டிவேர், லெமன் கிராஸ், கோ4, அவுரி, சணப்பு, க்ளைரிசீடியா என்ற பெரும்பாலும் கால்நடைகளுக்கு உதவும் தீவன வகைகளைச் சாகுபடி செய்துள்ளனர்.
தங்களைப் பார்த்து மற்றவர்களும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கும் இவர்களின் செயலில் லாப நோக்கும் இல்லை. வியாபார உத்தியும் இல்லை. நூறு சதவீத சேவை மட்டுமே.


ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்).
பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.
வெங்கட்ராமன் பண்ணையம்
பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்
நெல்
  • ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 செண்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவவும்
  • 2 லி பஞ்சகவ்யத்துடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15ஆம் நாள் தெளிக்கவும்
  • விதைத்ததில் இருந்து 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவும்
  • நடவில் இருந்து 30ஆம் நாள் – நாலரை லிட்டர் பஞ்ச கவ்யத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
  • கழிவுநீர் குட்டை வழி பாசனம் செய்தால் வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களும் தேவையில்லை. வாரம் ஒரு முறை பாய்ச்சவும்
  • சாதாரண நடவு முறையில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி
  • மதிப்புக் கூட்டி அரிசியாக விற்பனை. தவிடு கால்நடைத் தீவனமாகிறது
பசு மற்றும் எருமை
  • ஆடு மாடுகளுக்கு தினமும் 5 மணிநேர மேய்ச்சல்
  • மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல் மற்றும் தீவனப்புல்
  • 30 சதம் அரிசித் தவிடு – 20 சதம் புண்ணாக்கு – 30 சதம் சோள குருணை – 10 சதம் பாசிப்பருப்பு உமி – 10 சதம் உளுந்து உமி அகியவற்றை ஒன்றாகக் கலந்து லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் அடர் தீவனம் தயாரிக்கவேண்டும்
  • ஒரு மாட்டுக்கு காலை ஒண்ணே கால் கிலோ – மாலை ஒண்ணே கால் கிலோ
  • ஆடுகளுக்கு தனியே தீவனம் தேவையில்லை.
  • கோழிகளுக்கும் தேவையில்லை. குப்பை கூளங்கள் மற்றும் சிதறிய தீவனங்களும் இவைகளுக்குப் போதும்
  • பால் விற்பனையுடன் சாணத்தையும் சாணம் மற்றும் கழிவு நீர் கலந்து பஞ்ச கவ்யத்தையும் விற்றுவிடுகிறார். நெல்லுக்குக் கூட தொழுஉரம் போடுவதில்லை என்கிறார்.
  • சாணத்தின் ஒரு பகுதி இவருடைய பஞ்சகவ்ய தேவைக்கும் மீன் குட்டைக்கும் போய்விடுகிறது
  • மீன் குட்டைக்கும் வயலுக்கும் நீர் கழிவு நீர் குட்டையிலிருந்தே போகிறது.
  • கோழி குஞ்சுகள் மற்றும் கோழி விற்பனை, மீன் குளத்தின் மீன் விற்பனை என்று இவரது வருடாந்திர கல்லா லாபம் – என்னுடைய சம்பளத்தை விட அதிகம் :)
  • இயற்கை வழி வேளாண்மை என்பதால் நிறைய மண்புழுக்கள் தோன்றுகின்றன. வேர் பகுதி பூச்சிகளைத் தின்று அழிக்கின்றன.
  • கொக்குகள் வழி பயிரின் நடுப்பகுதி மேல்பகுதி பூச்சிகள் சம்ஹாரமடைகின்றன. அத்துடன் மாடுகளிடம் உள்ள ஒட்டுண்ணிகளைக் காலி செய்து விடுகின்றன.
  • பேன்கள், உன்னிகள், ஈக்கள் இல்லாமல் இருந்தாலே கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்
விவசாயம் என்பது அனைவருக்கும் பார்முலா மாதிரி அமைவதில்லை. என்றாலும் இவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் சமயோஜிதம் அவருக்கு பயன்தந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.

அதிக லாபம் தரும் ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறை

ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலம்
ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலம்
ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது நெல் பயிருடன் மீன் மற்றும் கோழி பண்ணைகளை ஒருங்கிணைப்பதாகும். நெல் நடவு செய்த  நிலத்தில் கோழி மற்றும் மீன் பண்ணைகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக விவசாயிகள் கூடுதல் லாபத்தினை பெறலாம்.
மீன் மற்றும் இறைச்சியின கோழி ஒருங்கிணைந்த பண்ணை திட்டமானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்திட்டத்தின்படி கோழிக்கூண்டு மற்றும் மீன் அகழியானது நெல் வயலின் ஒரு பகுதியில் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு அமைக்கப்பட்ட மீன் அகழியில், கோழியின் எச்சம் விழுமாறு கோழிக்கூண்டு அமைக்கப்பட வேண்டும். கோழியின் எச்சமானது மீன்களுக்கு நல்ல உணவாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயற்கை உரமாகவும் செயல்படுகின்றது. நெல் வயலின் 5 செ.மீ. நீர்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் மீன்களைப் பாதிக்கும் என்பதால் பகல் பொழுதில் மீன்கள் நீந்தி களிப்பதற்கு இந்த அகழிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும் மீன்கள் நெல் வயலில் நீந்தி அவற்றின் களை மற்றும் பூச்சிகளை உண்டு வளரும். மேலும் கோழிக்கழிவு நேராக அகழி நீரில் கலந்து, நெல் வயலில் உள்ள நீருக்குள் ஊடுருவி உரமாக பயன்படும்.
நாற்றங்கால் தயார்படுத்தல்:
நாற்றங்காலுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தினை நன்கு சேற்று உழவு செய்து, சமன்படுத்தி தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும். அறிவுறுத்தப்பட்ட அளவிலான நெல் விதைகளை, விதைப்பதற்கு 10 மணி நேரத்துக்கு முன்பாக நீரில் ஊற வைக்க வேண்டும்; பின்னர் ஊறிய விதைகளை சுமார் 24 மணி நேரம், முளைப்புக்காக இருட்டு அறையில் வைக்க வேண்டும், பின்பு முளைத்த விதைகளை சீராக நெல் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நாற்றங்காலில் முளைத்த நாற்றுகளானது நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.
நடவு வயல் தயார் படுத்தல்:
நன்கு உழவு செய்து தயார்படுத்தப்பட்ட நடவு வயலில் 1 மீட்டர் ஆழம் மற்றும் 0.75 மீட்டர் நீளம் கொண்ட மீன் அகழியானது வெட்டப்பட வேண்டும். இந்த மீன் அகழிக்கென நடவு நிலத்தின் 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். நடவு வயலில் உள்ள நீர் வெளியேறாத வண்ணம் வரப்புகள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும்.
மீன்கள் நெல் அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்பு பிடித்து விற்பனை செய்யலாம். அதுபோன்று இறைச்சியின கோழி வளர்ப்பிற்கான மொத்த காலம் 45 நாள்கள். கோழிக்குஞ்சுகளை முதல் 12 நாள்கள் தனியறையில் 100 வால்ட் பல்பினை பொருத்தி வைத்திருக்க வேண்டும். 12 நாள்களுக்கு பிறகு குஞ்சுகளை நடவு நிலத்திலுள்ள கோழி கூண்டுக்கள் விடப்பட வேண்டும்.
நெல்நடவு:
குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை நடவு நிலத்தில் 15 செ.மீ. இடைவெளியில், குத்துக்கு 2 நாற்றுகள் வீதத்தில் பிடுங்கி நடவேண்டும். வேப்ப விதைச்சாறு 5 சதவீதம், பயிர் பாதுக்காபுக்கென தெளிக்கப்படுகின்றது.   இவ்வாறு செயல்படுத்தப்படும் நெல், மீன், கோழி பண்ணையத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்திட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல்துறை ஒருங்கிணைப்பாளகராக இருந்து மத்திய அரசு நிதி உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி தகவல் :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக